Header Ads



ஆட்சியாளர்களை நம்பி, ஏமாந்து விட வேண்டாம் - மனோ

ஆட்சியாளர்கள் கிராமங்கள் தொடங்கி ஐக்கிய நாடுகள் சபை வரை அள்ளி வீசும் வாக்குறுதிகளையும் பிரகடனங்களையும் உத்தரவாதங்களையும் அளவுக்கு அதிகமாக நம்பி ஏமாந்து போய் விட வேண்டாம் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும் தமிழ் முற்போக்கு கூட்டணித் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் கொழும்பில் இன்று(21) இடம்பெற்ற உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான மக்கள் ஒன்றியத்தினை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வில் அவர் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

இந்த நாட்டில் தீர்க்கப்படாத ஒன்றாக இருந்து கொண்டிருக்கும் இனப் பிரச்சினைதான் மனித உரிமை மீறல்கள் அனைத்துமே நடைபெறுவதற்கு பிரதான காரணமாக இருந்து கொண்டிருக்கின்றது.

போர்க் குற்றம், அரசியல் படுகொலைகள், சட்டவிரோத கொலைகள், மனிதக் கடத்தல்கள், காணாமலாக்குவது அனைத்துமே நேரடியாகவோ மறைமுகமாகவோ நடந்தேறியிருப்பதற்கு இனப்பிரச்சினை தீர்க்கப்படாமலிருப்பதுதான் அடிப்படைக் காரணமாக அமைந்திருக்கின்றது என்பதனை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
தேசிய இனப்பிரச்சினை தீராத வரைக்கும் நாட்டின் எந்தப் பிரச்சினையும் தீராது. நாட்டின் தேசிய இனப்பிரச்சினையோடு சம்பந்தமில்லாமல் நடக்கும் குற்றச் செயல்கள் ஒரு ஐந்து வீதமாகத்தான் இருக்கும்.
நாட்டின் ஆட்சியாளர்கள் கண்ணிருந்தும் குருடர்களாகவும் காதிருந்தும் செவிடர்களாகவும் அறிவிருந்தும் முட்டாள்களாகவும் இருப்பதுதான் இனப் பிரச்சினைக்கான தீர்வு இழுத்தடிப்பதற்கான காரணங்களாகும்.

3 comments:

  1. See the news below. this is called "yahapalanaya".

    The Ministry of Agriculture would spend an additional Rs.250 million to improve facilities in the building at Rajagiriya, which is rented at Rs.23.5 million a month for Ministry office, it is learnt.

    Tenders have already been called for the supply of furniture and fixtures valued at Rs.140 million and for the partitioning of rooms and office cubicles costing Rs.110 million.

    “The building DPJ Tower was rented out in April for the use of the office. However, it had remained idle for about six months. This building of 103,000 square feet costs a monthly rent of Rs. 23,484,000.

    ReplyDelete
  2. This good governance government? Will not come in the common platform to the peace & reconciliation.
    They will be cheating minority

    ReplyDelete
  3. அரசாங்கத்தில் இருந்துகொண்டே இவ்வாறு உண்மையை இடித்துரைக்கும் ஒரு அரசியல்வாதியையாவது எமது சமூகம் உருவாக்கும் காலம் வருமா்்் வரும் ஆனா்்

    ReplyDelete

Powered by Blogger.