Header Ads



தயதுசெய்து என்னை காப்பாற்றுங்கள்...!


சிரியாவின் அலெப்போ நகரில் வான்வழி தாக்குதல் காரணமாக, தன் தோழி கொல்லப்பட்டுவிட்டாள், தானும் பயந்து கொண்டு கட்டிலுக்கு அடியில் மறைந்துள்ளேன் என 7 வயது சிறுமியின் டுவிட்டர் அனைவரையும் கண்கலங்க வைப்பது போல் இருந்துள்ளது.

சிரியாவின் தீவிரவாதிகள் வசம் உள்ள பகுதிகளை கைப்பற்றுவதற்காக சிரியாவின் அரசு படைகளுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே அடிக்கடி போர் ஏற்படுகிறது.

இதில் பெரும்பாலான பகுதிகளை அரசு படைகள் கைப்பற்றிவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அலெப்போ நகரின் கிழக்கு பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமி பானா அலாபாத் தனது டுவிட்டர் பக்கத்தில் சில உருக்கமான தகவல்களை கூறியுள்ளார்.

அதில், அலெப்போவில் இருந்து மதிய பானாவின் வணக்கம் என்றும் போரை மறப்பது குறித்து நான் படித்து வருகிறேன்.

தயது செய்து என்னை யாராவது இப்பொழுது காப்பாற்றுங்கள். நான் கட்டிலுக்கு அடியில் மறைந்து கொண்டிருக்கிறேன் என்று டுவிட் போட்டுள்ளார்.

அதைத் தொடர்ந்து என் அன்புக்குரிய உலகே, நான் இன்றிரவு அழுதுகொண்டிருக்கிறேன், என்னுடைய தோழி இரவு நடந்த வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டு விட்டாள்.

என்னால் அழுவதை நிறுத்த முடியவில்லை. எனது நண்பர்களே இது நிலா அல்ல. குண்டு கீழே விழுந்து கொண்டிருக்கிறது.

இன்றிரவு எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள். நான் அச்சத்தில் மூழ்கியுள்ளேன் ஏன் அவர்கள் எங்கள் மீது குண்டுகளை வீசி அப்பாவி மக்களை தினமும் கொல்கிறார்கள் என மிகுந்த வேதனையுடன் போடப்பட்டுள்ள டுவிட் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் விமான தாக்குதல் நடைபெற்ற இடங்களுக்கு சிறுமி பானா சென்று அந்த இடங்களைப் பற்றி சொல்வது போல் பல வீடியோ பதிவுகளையும் பதிவிட்டுள்ளாள்.

இவரின் டுவிட்டர் பக்கத்தை இவருடைய தாயார் பராமரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.