November 01, 2016

சர்வதேச யாழ்ப்பாண, முஸ்லிம் சமூகத்தினரின் அறிக்கை

-ரம்ழான் அப்துல் மஜீத் -

எம் அன்பின் இலங்கை இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் எம் இதயம் பூர்வமான ஸலாம் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாகி வபரஹாத்துகு

அல்ஹம்துலில்லாஹ்!

எல்லாம் வல்ல ரஹ்மானின் பேருதவியுடன் சர்வதேச முஸ்லிம் சமூகத்தின் உறவுப் பாலமாகவும் உரிமைக்கான குரலாகவும் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கம் சர்வதேச அமைப்பான JAFFNA MUSLIM COMMUNITY - INTERNATIONAL ( JMC-I ) யினால் வடமகாண முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றத்தின்  26 வது நினைவு தின மாபெரும் பொதுகூட்டம், ஆர்பாட்டம், கண்காட்சி என்று இலங்கையின் கொழும்பு,புத்தளம், யாழ்பாணம் போன்ற  பகுதிகளிலும்,கனடா ,கட்டார் மற்றும் பிரான்சில் ஒண்றிணைந்த ஜேர்மன், ஜக்கியராஜ்ஜியம், சுவீஸ், நோர்வே நாட்டு உறவுகளும் பிரான்ஸ் வாழ் இலங்கை சமூகமும் ,விஷேடமாக இலங்கையிலிந்து வருகை தந்து எமது உணர்வுப் போராட்டத்தில்  பங்கேற்று வழுச்சேர்க்க அமைச்சர் ரிசாத் அவர்கள் எம்மோடு இணைந்து   கொண்டார்.

இந்த அமைப்பின் அங்கத்தவர்கள் இதன் வளர்சியில் தியாகத்துடனும் அர்பணிப்புடனும் செயற்பட்டு இந்நிகழ்வுகளை மிக மிக சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் உணர்வுபூர்வமாகவும் ஆக்கபூர்வமாகவும் வரலாற்றில் முதன்முறையாக என்றும் எவராலும் முன்னெடுக்கப்படாத மிக பாரிய அளவிலான நிகழ்வுகளை திட்டமிட்ட வகையில் ஏற்பாடுகளை செய்து மக்கள் எழுச்சிக்கு வித்திட்டு சர்வதேசத்திற்கும்,இலங்கை அரசிற்கும்,வடமாகண சபைக்கும் அழுத்ததையும் யதார்ததையும் உணரச் செய்து  எமது மக்களின் அவலத்தையும் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகளையும் பரைசாட்டி மிக வெற்றிகரமாக  முன்னெடுத்த இன் நிகழ்வும் இதற்கு முதல் முன்னெடுப்பான ஜெனிவா ஜ நா பயணமும் Jaffna muslim community அமைப்பு எமது மக்களின் மனதில் என்றும் நீங்கா இடத்தை நிலைநாட்டியது .

இன்நிகழ்வுகளில் பல அமைப்புகளும் ஊர்மக்களும் குறிப்பாக வடமாகாண முஸ்லிம் மக்களின் செவிலித் தாய் புத்தள மண்ணும் மக்களும் இணைந்து எமது மக்கள் எமது போரட்டத்திற்கும் முன்னெடுப்புகளுக்கும் பரிபூரண ஒத்துழைப்பும் வழங்கியது குறிப்பிட தக்கது பிரான்சில் நடந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் JMC-I யின் செயற்பாடுகளுக்கு அங்கிகாரத்தையும் சம்மதத்தை வழங்கியது மட்டுமல்லாது அதற்காக முன்வந்து ஆலோசனைகளையும்,அறிவுரைகளையும் ,பொருளாதாரத்தையும்  வாரி வழங்கி எம்மை ஊக்கிவித்து ,நிகழ்வின் தீர்மானங்களையும் நிறை வேற்றியிருந்தனர்.

அத்துடன் JMC-I யின் நிருவாக யாப்பு,கட்டமைப்பு மற்றும் பிரதிநிதிகள் சபை தெரிவும் இடம் பெற்றது அல்ஹம்துலில்லாஹ் !

நிகழ்வின் ஆரம்பமாக கிராத் ஓதப்பட்டு ஆரம்பிக்கப்பட்டு தலமையுரையை அமைப்பின் உறுப்பினர் ரம்ழான் அப்துல் மஜீத் நாம் யார்?எமது நோக்கம் என்ன?ஏதற்காக? என்ற கேள்விகளுக்கு பதிலளிக்கும்  வகையில் உரையாற்றியதுடன் நிகழ்வையும் தொகுத்து வழங்கியிருந்தார்

அத்துடன் நோர்வேயிலிருந்து வருகை தந்த அறிஞர் அனீஸ் ரவூப் அர்கள் சமூகத்தை ஊக்கப்படுத்தக் கூடிய வகையிலும் எதிர்கால முன்னெடுப்புகள் குறித்தும் உரையாற்றியதுடன் எமது வளர்ச்சியில் பொருளாதார ரீதியாகவும் அறிவு ரீதியாகவும் பாரிய பங்களிப்பை வழிகாட்டலையும் வழங்கி வருவதும் குரிப்பிடத்தக்கது

சுவீஸ் நாட்டிலிருந்து வருகை தந்த ஜப்னா முஸ்லிம் .கொம் ஆசிரியர் அன்சீர் அவர்கள் தமிழ் முஸ்லிம் இன உறவும் வடமாகாண முஸ்லிம்களின் வெளியேற்றமும் என்ற தலைப்பிலும் உரையாற்றியதுடன் நிகழ்வின் தீர்மானங்களையும் நிறைவேற்றினார். இவரின் பங்களிப்பு வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை.

அதுபோல் மன்னார் மாவட்டதை பிரதிநிதிபடுத்தி அமைச்சர் ரிசாத் பதுர்தீன் மீள்குடியேற்றத்தில் உள்ள தடைகள் குறித்து உரையாற்றினார் மற்றும் மெளலவி சமூன் ரம்ழான் வெளியேற்றதின் பாதிப்புகளும் படிப்பிணைகளும் என்ற தலைப்பில்  உணர்ச்சி பூர்வமிக்க உரை நிகழ்தி 1990 october க்கு எம்மை அழைத்துச் சென்று எமது அடங்கிக் கிடந்த மன ௨ணர்வுகளை தூண்டி அரங்கத்தையே கண்ணீரால் முழ்கடிக்கச் செய்தார் 26 வருடம் வெளிப்படுத்த முடியாமல் மனதில்  நிறைந்திருந்த சோகம் எம்மைவிட்டு நீங்கிய உணர்வையும் ஏற்படுத்தினார் ஒற்றமையை பற்றி திருகுர்ஆனின் வார்தைகளிருந்து எடுத்தியம்பி அல்லாஹ்வை புகழ்ந்தது துதித்தார்.

அது போல் இன் நிகழ்விற்கு ஜேர்மனியில் இருந்து வருகை தந்த எமது மூத்த அனுபவமிக்க சகோதரர்கள் மக்ளுக்கு என்ன செய்யபோகிறீர்கள் நாம் என்ன செய்ய வேண்டும் என்று ஆர்வத்துடனும் ஆசையுடனும் துணிந்து முன்வந்து கேட்டு அமைப்புக்கு ஆலோசனையும் வழங்கி தாமகவே பிரதிநிதியை ஏகமனதாக தெரிவு செய்து எம்மை மெய்சிலிர்க செய்ததும் குறிப்பிடத்தக்கது .

ஜக்கிய ராஜ்ஜியத்திலிருந்து வருகை தந்த சகோதர்கள் சார்பாக உரையாற்றிய பாயிஸ் அர்களும் JMC-I யை இங்கை முஸ்லிம்களின் குழந்தை என்றும் அதை வளர்க அர்பணிப்புடன் செயற்படுவதாகவும் ஜக்கியராஜ்ஜியத்தில் உள்ள அனைத்து உறவுகளையும் உள்வாங்கி ஒற்றுமையாக செயற்பட பூரண ஒத்துழைப்புகளை வழங்குவதாகவும் கூறியதுடன் சகோதரர் ரமீஸ் அர்கள் தாமாக முன்வந்து பெரும் தொகை பணத்தையும் வழங்கி அனைவருக்கும் முன்மாதிரியாக எம்மை ஊக்கிவித்தையும் காணமுடிந்தது.

சகோதர் ரலீப் அவர்கள் நன்றியுரை நிகழ்ததியிருந்தார் .

அத்துடன் பிரான்ஸ் வாழ் இளைஞர் படை (ALL BLACKS CLUB )தாமாக முன்வந்து நிதி உதவியும்,தேனீர் ஏற்பாடுகளை செய்து எமது சோகத்தின் பங்காளிகளாகவும் விளங்கினார்கள் . சிற்றுண்றி ஏற்பாடுகளை சகோதர்கள் கமால்,நெளவ்சாத் வழங்கியிருந்தார்கள்.நிகழ்வின் ஏற்பாட்டாளர்களாக சகோதரர் நசீர் தலைமையில் ஜவாமில், சவ்பான்,தாரீக்,ஜபாய்ஸ்,லாபீர்,ரம்ழான்,நவாஸ்,அபூல்கலாம்,கமால்,பர்ஹான்,சமூன் ரம்ழான் ,அர்சாத் ரிஸாம்,ரம்ஸான்,பர்சான்,ரிபாய், வெளிநாடுகளை பிரதிநிதிதுவ படுத்திய அனீஸ் (நோர்வே),அன்சீர்,ரலீப் (சுவீஸ்),ஜப்ரீன்,மூஸின்,கனபி,முபராக்(ஜேர்மன்)யூசூப் ரமீஸ்,அஸ்ஹர்,பாயிஸ் ரமீஸ்(uk)நமீஸ் கனடா மற்றும் குழுவினர், ஜன்சீர் கட்டார் மற்றும் குழுவினர் ,போன்ற இன்னும் சிலர் முன்னின்று வழிநடாத்தியிருந்தார்கள்.

இந்த நிகழ்வை செவ்வனே செய்து முடிக்க வருகை தந்து எமக்கு ஆதரவழித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் அல்லாஹ் வின் அருலும் அன்பும் கிடைக்கப் பிராத்தித்தவனாக ஆமீன்.JMC-I சார்பாக  மனமார்ந்த  ஜஸாக்ஹூமுல்லாஹ்ஹைர் (நன்றிகளையும்)ஒற்றுமையே எமது பலம். என்பதை இந்நிகழ்வு பரைசாட்டுகின்றது .ஆக பிளவுகளை களைந்து இன்று தொடக்கம் திடசங்கடம் பூண்டு சர்வதேச சமூகத்தை ஒற்றுமையாக ஒரு குடையின் கீழ் ஒன்றிணைந்து அவர்களின் உணர்வு பூர்வமான ஒருமித்த பங்களிப்புடன் இலங்கை முஸ்லிம் உறவுகள் அனைவரும் எம்முடன் இணைத்துக் கொண்டு இன்ஷா அல்லாஹ் பயணிப்போம்.இன்று போல் என்றும் உங்கள் பங்களிப்பையும் ஆதரவையும் வழங்குமாறு பணிவண்புடன்  வேண்டிக்கொள்கின்றோம்,JMC-I குழுவினர் வஸ்ஸலாம்.

0 கருத்துரைகள்:

Post a Comment