Header Ads



முஸ்லிம் திருமண வயது, தவ்ஹீத் ஜமாத்தின் ஆர்ப்பாட்டம் பற்றி ஹக்கீம் ஆற்றிய உரை

முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்­பாக இன்று எழுந்­துள்ள சிக்­கல்­க­ளுக்கு பிர­தான காரணம் இதற்­கென்று நிய­மிக்­கப்பட்ட குழு கிட்­டத்­தட்ட ஏழெட்டு வரு­டங்­க­ளாக இவ்­வி­ட­யத்தை இழுத்­த­டித்­த­துதான்' என அமைச்சர் ரவூப் ஹக்கீம், தனியார் சட்டத் திருத்­தத்­திற்­காக முன்னர் நிய­மிக்­கப்­பட்ட குழுவை சாடி­யுள்ளார்.

அத்­துடன், தான் நீதி அமைச்­ச­ராக இருந்தபோது பல தட­வைகள் குழு­வுக்குப் பொறுப்­பா­ன­வர்­களை, 'என்­னு­டைய காலப்­ப­கு­திக்குள் இதனை செய்து முடித்­து­வி­டுங்கள்' என்று கேட்டும் ஒரு சில விட­யங்­க­ளுக்­காக இது இழுத்­த­டிப்புச் செய்­யப்­பட்­டது.

ஆரா­யப்­பட்ட விட­யங்­க­ளை­யா­வது திருத்தம் செய்­தி­ருந்தால் தற்­போது சிக்கல் எழுந்­தி­ருக்­காது என்றும் அமைச்சர் குறிப்­பிட்­டுள்ளார்.

இன்று இலங்­கை­யிலே திரு­மண வய­தெல்லை சாதா­ர­ண­மாக 18 ஆக இருக்­கின்­ற­போது, முஸ்லிம் தனியார் சட்ட செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்துச் செல்­வதில் விவாகம் செய்­வ­தற்­கான வய­தெல்­லையை 16 வயது வரை­யா­வது கொண்டு வர வேண்­டு­மென்ற விச­யத்தில் சில முரண்­பா­டு­க­ளுக்கு மத்­தி­யிலும் உடன்­பாடு காணப்­பட்­­டுள்­ளது என்றும் அவர் தெரி­வித்தார்.

கல்­முனை மஹ்மூத் பாலிகா பெண்கள் உயர் ­பா­ட­சா­லையின் முன்னாள் அதிபர் ஏ.ஆர்.ஏ. பசீரை பாராட்டிக் கௌர­விக்கும் நிகழ்வு நேற்று திங்­கட்­கி­ழமை நடை­பெற்­றது. இதன்­போது  உரை­யாற்­று­கை­யி­லேயே அமைச்சர் ஹக்கீம்  இவ்­வாறு கூறினார். அமைச்சர் ஹக்கீம் அங்கு தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,

இதிலே சற்று நெகிழ்வுத் தன்­மை­யைப் பேண வேண்­டி­யுள்ளது. குறிப்­பாக மருத்­துவ ரீதி­யா­கவும் உட­லியல் ரீதி­யா­கவும் குறைந்த வயதுத் திரு­மணம் பாதிப்­புக்­களை கொண்­ட­மைந்­துள்ள நிலையில், குழந்தைப் பரா­ம­ரிப்பு, குழந்தை பெறு­வ­தற்­கான தயார்­நிலை என்­பன போன்ற விட­யங்­களில் உள்ள அடிப்­ப­டை­களை வைத்து இவற்றைக் கூறி­னாலும் பாரிய விப­ரீ­தங்­களை எதிர்­நோக்கிக் கொண்­டி­ருக்­கின்றோம்.

இதில் நெகிழ்வுத் தன்­மை­யுடன் அர­சி­யல்­வா­தி­களும் உல­மாக்­களும் சட்ட வல்­லு­னர்­க­ளு­மாகச் சேர்ந்து ஒரு இணக்கத் தீர்வை எட்டிக் கொண்­டி­ருக்­கின்ற சந்­தர்ப்­பத்­தில்தான் இப்­பொ­ழுது நிய­மிக்­கப்­பட்­டி­ருக்­கின்ற அமைச்­ச­ரவை உப குழுவை காட்டி, அதை ஜீ.எஸ்.பி. சலுகை பெறப்­போ­கின்றோம் என்று ஒரு அமைச்சர் சொன்­னதை வைத்து இன்று சில குழுக்கள் ஆர்ப்­பாட்­டங்­களை செய்யத் தொடங்­கி­யி­ருக்­கின்­றன.

இந்தச் சமூகம் ஒரு ஆணா­திக்­க­வாத சமூ­க­மாக பார்க்­கப்­ப­டு­கின்ற அள­வுக்கு குறித்த ஆர்ப்­பாட்­டங்கள் அமைந்­தி­ருக்­கின்­றன., நபி (ஸல்) அவர்கள் எவ்­வ­ளவு தூரம் பெண் விடு­த­லைக்கும் உரி­மைக்கும் தியா­கங்கள் செய்­தி­ருக்­கி­றார்கள் என்­பதை மூடி மறைக்­கு­ம­ளவு இவர்­களின் செயற்­பா­டுகள் காணப்­ப­டு­கின்­றன. இல்­லாத பொல்­லாத விட­யங்­க­ளெல்லாம் இன்று சந்­திக்கு வந்து விவா­திக்­கப்­ப­டு­கின்ற ஒரு விட­ய­மாக மாறி­யி­ருப்­பது கவ­லைக்­கு­ரி­ய­தாகும். 

பல வரு­டங்­க­ளாக இவ்­வி­வ­காரம் இழுத்­த­டிப்புச் செய்­யப்­பட்டு வரு­கின்ற நிலையில், காதி நீதி­மன்­றங்­களில் பெண்­க­ளுக்­கான இடம் வழங்­கு­வது சம்பந்­த­மா­கவும் பெரிய விவாதம் நடந்­து­கொண்­டி­ருக்­கின்­றது. இதிலே கொஞ்சம் நெகிழ்வுத் தன்மை காட்­டப்­பட வேண்டும் என்­பதும் இதை பல்­லின மக்கள் வாழ்­கின்ற நாட்டில் இஸ்­லா­மிய விழு­மி­யங்­க­ளுக்கும் குர்­ஆ­னிய சட்­டங்­க­ளுக்கும் முரண்­பா­டுகள் இல்­லாமல் இந்த விட­யங்­களில் ஒரு இணக்கத் தீர்வைக் காண முடியும் என்­பதை புரி­யாமல் நீண்­ட­கா­ல­மாக இழுத்­த­டிப்புச் செய்­யப்பட்­டதன் விளை­வுதான் இன்று தேவை­யில்­லாத விட­யங்­க­ளுக்­கெல்லாம் முகம் கொடுத்துக் கொண்­டி­ருக்­கின்றோம்.

உடன்­பாடு கண்ட விட­யங்­க­ளைக்­கூட முடி­வுக்குக் கொண்டு வராமல் சின்னச் சின்ன விவ­கா­ரங்­க­ளுக்கு பிடி­வாதம் பிடிக்கும் நிலையை காண்­கிறோம். உதா­ர­ணத்­திற்கு 16 வயதை திரு­மண வய­தெல்­லை­யாக நாங்கள் ஏற்றுக் கொள்­ளலாம் என்று இணக்­கப்­பாடு வந்­த­பி­றகு அதற்குக் குறை­வா­கவும் வழங்­க­வேண்­டு­மென்று பிடி­வா­த­மாக இருப்­பதில் எனக்­குக்­கூட உடன்­பா­டில்லை.

இப்­ப­டி­யான விட­யங்­களில் பிடி­வாதத் தன்மை காட்­டு­வது முழு சமூ­கத்­தை­யுமே ஒரு ஆணா­திக்­க­வாத சமூ­க­மாக காண்­பிக்­கி­றது. இவ்­வா­றான செயற்­பா­டு­களால் பெண் அடக்கு முறை­யா­ளர்­க­ளாக எங்­களை பார்க்க வைக்­கின்ற துர்ப்­பாக்­கிய நிலையை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கிறோம் என்­பதை தெளி­வாகக் கூறிக்­கொள்­கின்றேன்.

எனவே இது குறித்து ஆராய்ந்து கொண்­டி­ருக்­கின்ற இக்­குழு இன்னும் தாம­திக்­காமல் இந்தத் திருத்­தங்­களை சிபார்சு செய்­ய­வேண்­டு­மென்று மிக அடக்­க­மாக வேண்­டிக்­கொள்ள விரும்­பு­கின்றேன்.

இங்­கி­ருக்­கின்ற உல­மாக்கள் என்­னோடு கோபித்துக் கொள்ள­மாட்­டார்கள். ஏனென்றால் இது தொடர்­பாக அவர்­க­ளுடன் பல தட­வைகள் பேசி­யி­ருக்­கின்றேன். ஆனால், இது தொடர்­பாக நாங்கள் பெரும் சங்­க­டங்­களை எதிர்­கொள்­கின்றோம். ஏன் இதனைச் செய்ய முடி­யாது என மாற்­று­மத முக்­கி­யஸ்­தர்கள் நாளாந்தம் கேட்­கின்­ற­போது பதி­ல­ளிப்­பது கஸ்­ட­மான விட­ய­மாக இருக்­கின்­றது. 

காதி நீதி­மன்ற செயல்­பாடு­க­ளிலும் பெண்­க­ளுக்­கான பங்கு என்ற விட­யத்தில் மிகுந்த தாராளத் தன்­மை­யோடு உல­மாக்கள் விட்­டுக்­கொ­டுப்­புடன்  செயற்பட முன்­வர வேண்டும்.

அதிலே பாரிய பாதிப்­புக்கள் இருப்­ப­தாக நான் காண­வில்லை. ஏனைய முஸ்லிம் நாடு­களில் வழ­மையில் இருக்­கின்ற நிலை­யி­லேயே அவ்­வா­றான விட­யங்­க­ளைக்­கூட இலங்­கையில் செய்­வ­தற்கு தயங்­கு­வது ஏன் என்­பது சிக்­க­லுக்­கு­ரிய விட­ய­மாக இருக்­கின்­றது.

அழுத்­தங்­க­ளிலே சில நியா­யப்­பா­டுகள் இருப்­பதைக் காணு­கின்­ற­போது, பல வரு­டங்­க­ளாக இது தேவை­யில்­லாமல் இழுத்­த­டிப்புச் செய்­யப்­ப­டு­கின்­றது, என்­கின்­ற­போது இவ்­வி­ட­யங்கள் பூதா­கர­மா­வ­தற்கு நாங்­களே வழி­யெ­டுத்துக் கொடுத்­து­விட்டோம் என்­றா­கி­விட்­டது.  சில இயக்­கங்கள் குழுக்கள் எடுத்­த­தற்­கெல்லாம் ஆர்ப்­பாட்­டங்கள் மேற்­கொள்­கின்­றார்கள்.

வீதி­யிலே பேசு­கின்ற வார்த்­தை­களும் மற்­ற­வர்கள் எங்­களை அவ­ம­திப்­பதும் இழி­வு­ப­டுத்­துவது­மாக இருக்­கின்ற நிலை­யாக மாறி­யி­ருக்­கின்­றது. நபி (ஸல்) அவர்கள் உச்­ச­கட்ட பொறுமை காத்து, விட்டுக் கொடுத்து அவ­ம­திப்­புக்­க­ளையும் அவ­தூ­று­க­ளையும் தாங்கிக் கொண்­டி­ரா­விட்டால் இஸ்லாம் உலகில் வளர்ந்­தி­ருக்­காது. 

ஆனால், இன்று பொறு­மை­யி­ழந்து தடி­யெ­டுத்­த­வர்­க­ளெல்லாம் வேட்­டைக்­கா­ரர்­க­ளாகி எல்லா விவ­கா­ரங்­க­ளுக்கும் ஆர்ப்­பாட்­டங்கள் செய்து மற்ற சமூ­கங்­களை அவ­ம­திக்­கின்ற பாங்­கிலே பேசு­கின்ற குழுக்­களை நாம் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வர வேண்டும். 

எங்­க­ளது பெண்கள் அர­சி­ய­லுக்கு வரு­வதை உலமாக்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அதை நாங்கள் உருவாக்க வேண்டிய அவசியம் இருக்கின்றது. உள்ளூராட்சி மன்றங்களிலே 25 சதவீத பெண் உறுப்புரிமையை வழங்கி அவர்களை அரசியலுக்குள் கொண்டுவர வேண்டும். முஸ்லிம் நாடுகளிலே பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் என்று இருக்கின்ற நிலையில், ஆற்றலும் ஆளுமையும் உள்ள பெண்களை அரசியலுக்கும் தயார்படுத்த வேண்டும் என்பதை தெளிவாகச் சொல்ல விரும்புகின்றேன் என்றார். 

-பி. முஹாஜிரீன்-

14 comments:

  1. இந்த விஷயத்தில் ஹக்கீம் சொல்லுவது உண்மை தான்.சின்ன வயதில் என்ன திருமணம் 18 வயது கீழ் ஒரு சின்ன வயது அப்படி ஒரு திருமணம் தேவையில்லை.எனக்கும் சிறுவயது பெண் குழந்தைகள் இருக்கின்றன நான் கூட ஒருநாளும் 18 ஒருபோதும் திருமணத்துக்கு அங்கீகாரம் வழங்க மாட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. இறைவனே அங்கிகாரம் வழங்கியிருக்கும் போது உங்கள் அங்கீகாரம் யாருக்கும் தேவையில்லை . இஸ்லாம் யாரையும் சிறு வயதில் திருமணம் முடிக்க கட்டாயப்படுத்தவில்லை . மாதவிடாய் வந்துவிட்டால் அந்தப்பெண் திருமணம் செய்ய முடியும் என்றே சொல்கிறது .ஒருவேளை இஸ்லாம் 18 அல்லது 20 வயதில்தான் திருமணம் முடிக்க முடியும் என்று கட்டுப்பாடு விதித்து இருந்தால் இதே மடயர்கள் இஸ்லாத்தில் மனித உரிமை இல்லை, பெண்களின் உரிமையை மதிக்கவில்லை இல்லை என்று ஊலையிடுவார்கள்

      Delete
    2. Brother rizwan, then you go to middle east and live ur life!! You know there Are 10 times muslims population in uk than we have in sri lanka. But here you dont have these problems!! So stop talking islam in a budhist country and make racism!! Why cant you people agree with the 16☹️ Ahh. Are you going to get married to a women aged 11 or 12!! Would you?? Obviously not.. then y are you people creating unwanted issues in the country and destryibg the peace.. enough this bulshit!!

      Delete
  2. Al Quraan & Sunnah sattangalai maatta enta kombanukkum idamillaatha pothu nee enna periya ivana...
    Unakku yaar sonnathu Islamiya sattangalil nehilvuttanmaya pena solli...Yaaru athigaaram thantavan..?
    Antha Islamiya kooottu arivippu ungada arrangementoo???
    Unnodu irukkum ulla maakkal kopikka maattanugal bcs they are getting from you something something...
    Islamiya saattangal eppothum entha kaalathukum poruntha koodiya sattangalaithaan Allahvum avan rasoolum sollittandaargala illai nehilvu seiya sollirrukkaaangala..?
    Ohhh Nehilvu seithaalthane Meenukkum vaalai aattalam paambukkum thalaya kattalam...!!!! komaligal!!

    ReplyDelete
  3. What right are you privileged of suggesting changes in "Sharia" which is established by the creator and through the divinely guided practical life of the Prophet (PBUH)? It is none of your business.You have , I think, no right to talk about it negatively since there are Islamic scholars to concern about it. Was even your daughter's marriage applicable with the teaching of Islam? Do not try to betray Islam for your personal political agenda of immortal seat in the Parliament. Every move of yours was, in times of tragedies and crisis caused to Muslims, seemed to be getting advantage for your own benefits. Further, do not underestimate or try to put down your political counterparts with your immature and uncivilized public address, forgetting the Power of Allah.

    ReplyDelete
  4. எந்த அப்பனும் அதிமூன்று வயதில் மகளை கல்யாணம் முடித்து கொடுக்க விரும்பவில்லை ஆனால் திருமண வயது என்று எந்த வயதும் குறிப்பிடப்படாததால் இஸ்லாம் ம்சொள்ளும் பருவா வயதை எல்லோரும் கவ்கனத்தில் கொள்ள வேண்டும்.யாருக்கும் எந்த அதிகாரமும் இல்லை அல்லாஹ்வின் சட்டத்தில் கைவைக்க.ஒரு பெண் பிள்ளை பருவன் அடைவது (மாதவிடாய் வரும் ) பருவன் வந்தால் அந்தப்பிள்ளை வயதுக்கு வந்து விட்டது என்று அர்த்தம் உடனே கல்யாணம் செய்ய வேண்டும் என்று அர்த்தம் இல்லை.அதே நேரம் அந்த பெண்பிள்ளைக்கு பல் உணர்வுகள் ஆசைகள் ஏற்ப்படும் காலம் இதுதான் அப்படியான ஒரு உடல் நிலையை கொண்ட ஒரு பெண்பிள்ளை திருமண ஆசை ஏற்ப்பட்டு வழி தவறிவிடக்கூடாது என்பதில் இஸ்லாம் மிகவும் கவனமாக இருப்பதன் காரணத்தால் திருமண வயதை மாதவிடாய் வரும் வயதில் இருந்து கணக்கடுக்கப்ப்டுகிறது,இதனால் உலகத்தில் உள்ள பெண்கள் எல்லோரும் பனிரண்டு வயதில் திருமணன் செய்ய வேண்டும் ஏற்று யாரும் வாதடவில்லை.சட்டமும் சலுகையும் இருக்க வேண்டும் யாருக்கு தேவைப்படுதோ அதை வழி தவறிப்போகாமல் பயன்படுத்த முடியுமே தவிர அதனை நூறு வீதம் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை.இன்றைக்கு அரபு நாடுகளிலும் 25,30, வயதுவரையும் காத்திருந்து திருமணம் சையும் பெண்களே அதிகம்.சலுகை இருக்கிறது.தேவைப்பட்டால் பயன்படுத்துவார்கள்.இதுதான் உண்மை.அமைச்சர் அவர்களின் கருத்து எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியுமானதல்ல இது அல்லாஹ்வுடைய சட்டம் வரம்புகள் யார் அல்லாஹ்வுடைய வரம்பு மீறுகிறானோ அவனுக்கு கடினமான வேதனை உண்டு என்பதை அல்லாஹ் கூறுகின்றான்.இந்த விடயத்தில் கருத்து பரிமாறும் சகோதரர்கள் மிகவும் கவனமாக இருங்கள்.அல்லாஹ் வை பயந்துகொல்லுங்கள்.

    ReplyDelete
  5. BULL BULLI அவர்களே நீங்கள் எந்த மதம் என்பது எனக்கு தெரியாது.அதேவேளை நீங்கள் முஸ்லிம் இல்லை என்றால் இந்த விடயத்தில் கருத்துச் சொல்லும் அளவுக்கு உங்களிடம் இஸ்லாமிய அறிவு குறைவு என்பதை உங்களின் மேலுள்ள பின்னூட்டத்தின் மூலம் அறிய முடியும் ஆகவே இஸ்லாமிய சட்டங்களை நன்கு படித்து விட்டு கருத்தை எழுதுங்கள்.2 வது நீங்கள் முஸ்லிமாக இருந்தால் உங்களின் கருத்து மிகவும் வெறுக்கத்தக்கது என்பதை புரிந்துகொள்ளுங்கள்.இஸ்லாம் ஒரு பூரண மார்க்கம் அதில் குறை வரும் அளவுக்கு அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் எதையும் சொல்லவில்லை சொல்லவும் மாட்டார்கள்.நபியின் ஹதீஸ்களில் வரக்கூடியதும் அல்லாஹ்வுடைய கட்டளைதான்.அதை அல்லாஹ்வே குர்ஆனில் இவர் இந்த நபி வாஹி இல்லாமல் எதையும் தன இஷ்டத்துக்கு கூறவில்லை இஸ்லாம் சம்மந்தப்பட்ட அனைத்தும் நபியவர்கள் அல்லாஹ்வின் வாஹி மூலமே சொன்னார்கள் செய்தார்கள் அங்கிகாரம் வளங்கினார்கள் ஆகவே இந்த அல்லாவுடைய சட்டத்தில் விளையாட யாரும் முனைய வேண்டாம்.யாருக்கும் அவனின் அதிகாரத்தில் கை வைக்க முடியாது.உஹது உத்தத்தின் பொது நபியவர்களின் தந்தம் வெட்டப்பட்டு பல்லு உடைந்து இரத்தம் ஓடும் பொது வேதனையில் இருந்த நபியவர்கள் அல்லாஹ்வின் நபியின் முகத்தில் இரத்தத்தை ஊட்டிய்டவான் எவ்வாறு வேடேய் பெற முடியும் என்று சொன்னதை அல்லாஹ் தண்டித்து வாசம் இறக்குகிறான் ليس لك من امر شيء எனது அதிகாரத்தில் உனக்கன்ன அதிகாரம்.அந்த நிலைமையை எல்லோரும் யோசித்து பார்க்க வேண்டும்.இதைக்கூட அல்லாஹ் விரும்பவில்லை காரணம் அவன் அவனுடைய அதிகாரத்தில் யாருக்கும் எந்தச் சலுகையும் கிடையாது.நபியாக இருந்தாலும் சட்டம் இயற்ற முடியாது அல்லாஹ் அறிவித்து கொடுக்க வேண்டும் இதுதான் அல்லாஹ்.இப்படியான ஒரு புனிதமான மார்க்கத்தில் நாம் இருந்துகொண்டு கருத்துக்களை கவனமாக கையாள வேண்டும் அல்லது வாய் மூடி மவுனமாக இருப்பது மிகச்சிறந்தது.கருத்துச் சுதந்திரம் என்பதற்காக அல்லாஹ்வின் சட்டத்தில் நமது சுதந்திரத்தை பாவிக்க முடியாது.

    ReplyDelete
  6. There is body representing for Islamic issues and sharia maters, that is ACJU. not any Tom & Hary.

    ReplyDelete
    Replies
    1. ACJU is sleeping, had they voiced it SLTJ didn't have to go to the street.
      ACJU is late in everything except making money in all sort of ways.
      I agree that as an organization they need money to run but don't use Islam as business tool to make money, example issueing of Halal certificate.
      Some SLTJ haters may say it's the thaw jamath inducing hatred amongst other community, I must ask them was it Halal issue came first or marriage age came first ?

      Delete
  7. Rauf Hakeem must be sacked from his portfolio. He has no attribute to guide the Muslim society. He is a real thorn in our side. SLMC is a white-elephant to Muslims these days.

    People must exile this so-called leader & his puppets.

    ReplyDelete
  8. Mr Mustafa , Nabi (pbu) never got own thoughts ,everything from Allah , so no need this example

    ReplyDelete
  9. அழகிய கருத்து Mustafa well

    ReplyDelete
  10. சாணக்கியத் தலை(?)வரின் சாணக்கிய பேச்சு. பல உண்மைகள் இருந்தாலும் பெண் "காதி" நீதிபதி, அரசியலில் பெண்களின் நிலை போன்ற விடயங்களை பற்றி பேசும்போது அவரின் மார்க்க மற்றும் பொது அறிவின் தரம் தெரிகிறது. இது பெண்ணாதிக்கம் சம்பந்தப்பட்ட விடயம் இல்லை. சமூக வழிநடத்தல் சார்ந்த விடயம். மேற்கத்தையர்களை திருப்திப்படுத்தும் வண்ணம் நமது சுயத்தை இழக்க இயலாது. SLTJ போன்று முட்டாள்த்தனமாகக் களத்தில் இறங்கவும் இயலாது. றஊப் ஹக்கீம் போல மௌனியாகவும் இருக்க முடியாது. இதை பொருத்தமான முறையில் அணுக்கத் தெரிந்தவர்கள் தான் தலைமையில் இருக்க வேண்டும். "மார்க்க அடிப்படை அறிவு இல்லாத சமூகம் வெற்றி பெறவே மாட்டாது." உமர் ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் சிறந்த மார்க்க அறிஞராக இருந்தமையாலேயே "மேற்கு" இன்னும் அவரது தலைமைத்துவத்தைப் போற்றுகிறது. இதுபோன்ற அல்லாஹ்வின் தூதரின் அச்சில் வார்த்தெடுக்கப்பட்ட தலைவர்களையா நமது தலைவர்கள் பின்பற்றுகின்றனர்? அல்லாஹ்வின் தூதரை சமூகவில் தாண்டி தொழில் நுட்பவில் விண்ணர்கள் "இன்றய தொழில்நுட்பத்துக்கு வித்திட்ட புரட்சியாளராக" இனங்காணவில்லையா? நமது சுயத்தை இழந்து "மறுப்போரைத்" திருப்பதி படுத்துவதானது "நாம் அவர்களாக மாறும் வரை தொடரும்" என்பது குர்ஆனின் (அல்லாஹ்வின்) செய்தி.

    ReplyDelete
  11. குறிப்பு: SLTJ அமைப்பை 'தவ்ஹீத் ஜமாஅத்' என கட்டுரையாளர் இனம் கொண்டுள்ளதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இலங்கையில் குர்ஆன் மற்றும் சுன்னாவை 'மாத்திரம்' வாழ்வின் வழியாகக் கொண்டவர்களே ஏனைய சகோதரர்களால் 'தவ்ஹீத் ஜமாஅத்' என அறியப்பட்டனர். SLTJ எனும் ஒரு சிறு குழு அதிலிருந்து பிரிந்து தமது அறிவை ஒரு அறிஞரின் (இஸ்லாத்துக்காகப் பாடுபட்ட) அறிவுக்குள் அடகு வைத்து, ஏனைய ஜமாத்துக்கள் போல அமைப்பு ரீதியாக தமது சிந்தனைகளை மட்டுப்படுத்திக் கொண்டவர்கள். நல்ல நோக்கங்கள் கொண்ட, சமுதாய சிந்தனை கொண்ட இளம் வாலிபர்களாக இருந்தாலும், அறிவு அடகு வைக்கப்பட்டுவிட்டதால் இந்த நிலை.

    ReplyDelete

Powered by Blogger.