November 23, 2016

ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு வந்த, ஒரு கடிதம்..!

முஸ்லிம்களால் வழிநடாத்தப்படுகின்ற இணையச் செய்தி ஊடகங்களில் தங்களுக்கு மிகுந்ததொரு வரவேற்பு உள்ளது என்றால் அது மிகையாகாது. 

அத்தோடு சினிமா விடயங்களைத் தவிர்த்திருப்பதும் சிறப்பித்துச் சொல்ல வேண்டிய விடயமாகும். இன்னும் சமய, சமூக விழிப்புணர்வுகளை மையமாகக் கொண்டு செய்திகளை வெளியிடுவதும் பாராட்டுக்குரியதாகும். 

எனினும் செய்திகள்,ஆக்கங்களுக்கு கீழே இடம்பெறும் கருத்துரைகள் பல தங்களின் சேவைக்கு இழுக்கு ஏற்படுத்துவதாக இருப்பதனை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. அந்தவகையில் கொச்சையான வார்த்தைப் பிரயோகம்,இனவாதத்தைத் தூண்டும் சொற்பிரயோகம்,( தமிழ் சகோதரர்கள் சிலரால் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கேவலப்படுத்தும் கருத்துக்கள்,அவ்வாறே முஸ்லிம்களில் சிலர் மாற்று மதத்தவர்கள் விடயத்தில்)மேலும் இஸ்லாமிய அமைப்புக்கள் ஒன்றையொன்று சாடும் கருத்துக்கள்,அடுத்து நீங்கள் ஜம்யத்துல் உலமாவின் ஆலோசனை வழிகாட்டலின் கீழ் செயற்படுவதாக கூறியுள்ளீர்கள், ஆனால் எடுத்தெதற்கெல்லாம் ஜம்யத்துல் உலமாவை விமர்சிக்கின்ற கருத்துக்களையும் அதிகம் காண முடிகிறது. இது வாய்ப்பளிக்கின்றவர்களையும் அதன் வழிகாட்டிகளையும் வஞ்சிக்கின்ற நிலையாகும். அதேபோல் இஸ்லாமிய சிந்தனைகளுக்கு முரணான நாஸ்த்தீகச் சிந்தனைகளைப் பிரதிபலிக்கின்ற பதிவுகளும் இடம்பெறுகின்றன. நறுமணம் கமழ்கின்ற இடத்தில் துர்நாற்றங்கள் கொட்டப்படுவதை அனுமதிப்பது பொருத்தமானதல்ல.

சமூக அக்கறையுள்ள ஜப்னா முஸ்லிம் நிர்வாகத்தினரே! நான் மேலே சுட்டிக் காட்டியவை  தங்கள் சிறப்புக்கு இழுக்கை ஏற்படுத்தித் தரக்கூடிவைகளில் சிலவாகும். இதில் கொச்சையான கருத்துரைகள் தொடர்ந்தால் அது நாகரீகமாக சிந்திப்பவர்களையும் முகம் சுழிக்க வைத்து நல்லபிப்பிராயத்தையும் குறைத்துவிடும் என்பதை தெரிவிக்க விருபம்புகிறேன். அடுத்து சில தமிழ் சகோதரர்கள் சிலர் தொடர்ச்சியாக முஸ்லிம்களுக்கு விரோதமான முறையில் கருத்துரைக்கிறார்கள். அது முஸ்லிம்களிடையே மிகுந்த வெறுப்புணர்வை ஏற்படுத்துகின்றன. இது எமக்கு குத்துவதற்கு நாமே வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பது போன்றதாகும்.இப்படி தங்களது கொள்கைகளை விமர்சிக்கின்ற மாற்றுமதத்தவர்களுக்கு எந்தவொரு தமிழ் ஊடகமும் சந்தர்ப்பம் கொடுப்பதும் கிடையாது,அது சரியுமல்ல. ஆகையால் இதை தாங்களும் அனுமதிக்கக் கூடாது. அவ்வாறே முஸ்லிம் சகோதரர்கள் சிலர் அவ்வாறான கருத்துரைகளுக்கு பதில் அளிக்கும்போது நாகரீகமற்ற முறையில் கருத்துரைப்பதனையும் அவதானிக்க முடிகிறது. இந்நிலை தங்கள் தளத்தில் வெளிவருவது இனமுரண்பாட்டை வளர்க்கிறது என்பதையும் தங்களுக்கு அறியத் தருகிறேன். அடுத்து இஸ்லாமிய அமைப்புக்களை ஒன்றை ஒன்று குறைகூறுகின்ற வகையிலான கருத்துரைகள் பதிவிடப்படுவதனையும் அவதானிக்க முடிகிறது.  இந்நிலை அமைப்புகளிடையே வெறுப்புணர்வு  வளர வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறது எனலாம். அடுத்து ஜம்யத்துல் உலமாவை விமர்சிக்கின்ற கருத்துரைகளுக்கு இடம்கொடுப்பது மக்களை ஜம்யத்துல் உலமாவை விட்டுத் தூரமாக்குமென்பதையும் குறித்துக் காட்ட விரும்புகின்றேன்.

கருத்துச் சுதந்திரம் என்ற வகையில் சமூகத்தினுள்ளும், சமூகங்களுக்கிடையிலும் வெறுப்புணர்வுகளை வளர்க்கும் கருத்துரைகள்,நாகரீகமற்ற வார்த்தைப் பிரயோகங்களைப் பிரயோகிக்க வாய்ப்பளிப்பது சமூகத்தின் ஆரோக்கியமான சிந்தனை வளர்ச்சியை பாதிக்கும் என்பதோடு,நாகரீகமான ஊடகக் கலாசாரத்தையும் பாதிக்கும் எனலாம். மேலும் இஸ்லாமியர்களால் நடாத்தப்படும் ஊடகம் என்ற வகையில் மேற்சொன்ன வகையிலான கருத்துரைகளை அனுமதிப்பதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு செய்யின் ஜப்னா முஸ்லிமின் தரம் மேலும் உயர்வதோடு நாகரீகமாக சிந்திக்கின்ற, கருத்துரைக்கின்ற மனோநிலை வளரும் என்பதால் இவ்விடயங்களைத் தாங்கள் கருத்திற் கொள்ளுமாறு தங்கள் மீது அபிமானம் கொண்ட ஓர் இளைஞன் என்ற வகையில் கூறி விடைபெறுகிறேன்.

ஏ.எம். ஆரிப்
நிந்தவூர்.

பிற்குறிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரரே..!

உங்களின் ஆரோக்கியமான கருத்துக்களுக்கு நன்றி. நீங்கள் சுட்டிக்காட்டும் விடங்கள் பற்றி இன்ஷா அல்லாஹ் உரிய கவனம் செலுத்தப்படுமென உறுதிதருகிறோம். உங்களைப் போன்ற வாசகர்கள் தொடர்ந்தும் ஜப்னா முஸ்லிம் இணையத்தை அவதானியுங்கள். பிழைகள், தவறுகளை தாராளமாக சுட்டிக்காட்டுங்கள். நிச்சயம் திருத்திக்கொள்வோம்...!

9 கருத்துரைகள்:

ஆரிப் என்பவர் எனக்கு நன்கு தெரிந்தவர் உறவுமுறைகூட மிகவும் மார்க்கப்பற்றுள்ளவர்

இந்த ஆக்கம் மிகவும் பாராட்டத்தக்கது ஜப்னா முஸ்லிம் இதை ஏற்றுக் கெரண்டு நடை முறைப்படுத்தும் என நினைக்கிரன்

பெரும்பாலான மனிதர்கள் மேய்வது, நாகரிகமற்ற எழுத்துக்களை நோக்கித்தான். இது உலக வழமை.

30 வருட காலமாக, தமிழ் ஊடகங்களும் இதைத்தான் செய்து, தமிழ் இனத்தை கொலைக்களத்திற்கே இழுத்துச் சென்றார்கள்

நாம் முஸ்லிம்கள். மறுமையின் சிந்தனையுடனும், ஜன்னத்தை நோக்கிய பயணத்திலும் வாழ்பவர்கள்.

பிற சமூகங்களைப்போல், எமது சகோதர்களின் எழுத்து நடைகளும் மாறி ஜப்னா முஸ்லிமில் பிரதிபலிப்பது, வேதனைக்குரியது.

அடுத்தது, வட, கிழக்கு மாகாணத்தை வாழும் முஸ்லிம்களின் செய்திகளை வெளியிடுவதோடு, பிற மாகாணங்களில் வாழும் முஸ்லிம்களின் செய்திகளையும் இணைப்பது நல்லது.

தமிழ் தீவிரவாதத்திற்கு எதிராக கொஞ்சம் காட்டமான கருத்துக்களை கெட்ட வார்த்தைகளின்றி இங்கு நாம் பிரயோகிப்பதை தடுக்க கூடாது. தமிழ் தீவிரவாதம் எத்தனை கொடியது என்பதை நாம் வெளிப்படுத்த எமக்குள்ள இந்த பொது தலத்தில் எம் கருத்துக்களை முடக்க நினைக்காதீர்கள் என்பது என்னுடைய வேண்டுகோள்

நீங்கள் சரியாக சொல்லியுள்ளீர்கள்.நான் இது பற்றி யாழ் அஸீம் மாஸ்டரிடமும் சொன்னேன்.ஜப்னா முஸ்லீம் நிர்வாகத்தினருக்கு அறிவிக்கும்படி.

good advice & good reply.

100 percent agreed with br.Ariff,i also thought about this,(criticising other people without good attitude),well done ariff,may Allah guide u towards jannah

Brother Arif solvadhu sari thaan

ஏப்படியோ ஜம்மியது உலமாவை பாது காத்திதிடுங்க அவங்க என்னத்த செஞ்சாலும் கண்டுக்காம இருங்க எண்டது தான் இவருடைய கருத்து....

Good message. Appreciated. Will be followed. We should share are our comments in a decent manner how Islam preach. And we should have a unity In a community base when we comment.
However we are brothers. We should teach the erroneous each other to make it correct. Let's keep love to others and let's advice.

Let's learn Islam. Let's unite.

Post a Comment