Header Ads



ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக, உக்கிரமான சண்டை

ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக போரிட்டு வரும் ஈராக்கிய படை இன்று மொசூலின் முக்கிய நகரை கைப்பற்றியது.

ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து மொசூல் நகரை விடுவிக்கும் போரில் முக்கிய நகரான ஹமாம் அல்-அலில் நகரை ஈராகிய படை தன்வசப்படுத்தியது. மொசூல் நகரின் தெற்கு பகுதியில் உள்ள ஹமால் அல்-அலில் நகரை ஈராக் போலீஸ், ராணுவம் மற்றும் உள்துறை அமைச்சகம் தனது கட்டுப்பட்டிற்குள் கொண்டுவந்தது என்று ஏஎப்பி செய்தி வெளியிட்டு உள்ளது. ஈராக்கிய படைகள் திக்ரிஸ் நதியின் மேற்கு கரைப்பகுதியில் நிலைக் கொண்டு உள்ளது, மொசூல் நகரின் தெற்கு பகுதியில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் தென்கிழக்கில் உள்ளது.

முந்தைய விபரம்:-

ஈராக், சிரியா நாடுகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பிடியில், ஈராக்கின் பிரபல நகரமான மொசூல் உள்ளது. தலைநகர் பாக்தாத்தில் இருந்து 360 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ள மொசூல் ஈராக்கின் 2–வது மிகப்பெரிய நகரம் ஆகும்.

5 ஆண்டுகளுக்கு முன்பு ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகள் முற்றிலுமாக வெளியேறின. இதையடுத்து கடந்த 2014–ம் ஆண்டு பயங்கரவாதிகள் ஈராக் ராணுவத்தை விரட்டியடித்து விட்டு மொசூல் நகரைக் கைப்பற்றிக் கொண்டனர். மேலும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத் தலைவர் அபு பக்கிர் அல்–பகாதி தன்னை இந்த பகுதியின் தலைமை நிர்வாகியாக அறிவித்துக் கொண்டார். 15 லட்சம் மக்கள் வசிக்கும் பெரிய நகரம் மொசூல் ஆகும். அங்குள்ள மக்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதால் இந்த நகரை மீட்பதற்கு ஈராக் ராணுவம் அதிரடி நடவடிக்கை எடுக்கத் தயங்கி வந்தது.

இப்போது ஈராக்கின் பல பகுதிகளில் இருந்து ஐ.எஸ். பயங்கரவாதிகள் விரட்டியடிக்கப்பட்டு விட்டனர். மொசூல் மட்டுமே அவர்களின் பிடியில் உள்ளது. கடந்த சில மாதங்களாக மொசூல் நகரையொட்டிய பகுதிகளை கைப்பற்றி வந்த ஈராக் ராணுவம் தற்போது அந்த நகரின் நாலாபுறத்தையும் சுற்றி வளைத்து உள்ளது. ராணுவம் மொசூல் நகரை நோக்கி முன்னோக்கி வருகிறது. இரு தரப்பிலும் உக்கிரமான சண்டை நடந்து வருகிறது. இதற்கிடையே மொசூல் நகரில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து கடுமையான வான்தாக்குதலும் நடத்தப்படுகின்றன. பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். 

ஈராக்கிய படை அமெரிக்காவின் உதவியுடன் ஒவ்வொரு நகராக தன்வசப்படுத்தி வெற்றிப் பெற்று வருகிறது.

1 comment:

  1. இது முடிந்ததும் யஹூதிகல் இன்னும்மொரு கூட்டத்தை உருவாக்குவானுகல்

    ReplyDelete

Powered by Blogger.