Header Ads



மொஹமட் ஷாஜகானின் தத்­துவம்...!

-திண்­ண­னூரான் + மெட்றோ நீயூஸ்-

பய­னற்ற காரி­யங்­களில் நாம் தடம் பதிக்­கின்ற நாட்­டத்­திற்­குத் தான் ஆசை என்று பெயர். பய­னுள்ள செயல்­களில் நாம் கொள்­கின்ற நாட்­டத்­திற்குக் குறிக்கோள் என்று பெயர். இவ்­வா­றான ஒரு குறிக்­கோ­ளுடன் வாழும் ஒரு­வ­ரையே இன்று நாம் சந்­திக்­கிறோம். “மாங்காய், அன்­னாசி, அம்­ப­ரெல்லா, கொய்­யாக்காய் ஆகிய அச்­சாறு வகை­க­ளுக்கு என்றும் நல்ல கிராக்கி உள்­ளது.

இதன் விசேடம், என்­ன­வெனில் அச்­சாறு வகை­களை சின்­னஞ்­சிறு வாண்­டு­களில் இருந்து முதியோர் வரை வயது வித்­தி­யா­ச­மின்றி விருப்­பத்­துடன் வாங்கி சாப்­பி­டு­வார்கள். வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து எமது நாட்­டுக்கு வரும் உல்­லாசப் பய­ணி­களும் விரும்பி சாப்­பி­டு­வார்கள். குறிப்­பாக வெள்­ளைக்­கார பெண்­களே எமது நாட்டு இவ் அச்­சாறு வகை­களை சிற்­றுண்டி வகை­களில் ஒன்று என நினைத்து பெரிதும் மன நிறை­வுடன் சாப்­பி­டு­வார்கள்.

அது… அந்த சந்­தோஷம் தான் எனது சந்­தோ­சமும்” என்­கிறார் அச்­சாறு வியா­பாரி மொஹமட் ஷாஜகான், வெற்றிப் புன்­ன­கை­யுடன்.

அன்­னாசிக் காயையும் அம்­ப­ரெல்லா காய்­க­ளையும் பட­ப­ட­வென இயந்­தி­ரத்தில் வெட்­டு­வது போல் இக் காய்­களின் மேல் தோலை­சீவி, துண்டு துண்­டு­க­ளாக வெட்டும் ஷாஜ­கானின் வித்­தையைக் கண்டு நாமும் வியந்து போனோம். இயந்­தி­ர­மாக இயங்கிக் கொண்டு இருந்­தவர் மீது “கேள்வி அரி­வாளை” போட்டோம். அவர் கொஞ்சம் மௌனம் காத்தார். அந்த மௌனம் ஏன் என இறுதிவரை எங்­களால் அடை­யாளம் கண்­டு­கொள்ள இய­லாமல் தோல்வியடைந்தோம். 

பின்னர் அவர் பேசத் தொடங்­கினார். “எனது சொந்த ஊர் களுத்­துறை. பல வரு­டங்­க­ளாக கொலன்­னாவ மீதொட்ட முல்­லையில் குடும்­பத்­தி­ன­ருடன் வசித்து வரு­கின்றேன். நான் பெரி­தாக கல்வி கற்­க­வில்லை. ஐந்தாம் ஆண்­டு­வ­ரையே கல்வி கற்க என்னால் முடிந்­தது. வறுமை என்­பது மிகவும் கொடு­மை­யா­னது. அதன் வலியை வாழ்க்­கையில் அனு­ப­வித்­த­வர்­க­ளுக்­குத்தான் தெரியும்.

வறு­மையில் வாழும்போது அதை சவா­லாக ஏற்­றுக்­கொள்ள வேண்டும். வறுமை, வறுமை என சொல்லிக் கொண்டு சோம்­பே­றி­க­ளாக தொழில்­பு­ரி­யாமல் அடுத்­த­வரை நம்பி வாழ்­வது மூடத்­த­ன­மாகும். தாழ்வு மனப்­பான்­மையை தூக்கி வீச வேண்டும். இந்த தாழ்வு மனப்­பான்­மைதான் ஒரு­வரின் பல­வீ­ன­மாகும். இப்­ ப­ல­வீ­னமே பலரை ஏமாற்றி பிழைக்க வைக்­கின்­றது என போடு போட்டார் ஷாஜகான்.

நாமும் பதற்றமடைந்து விட்டோம். அவரின் தத்­துவம் உண்­மையில் பல­ருக்கு பெரும் அறி­வாகும். வாழ்க்­கையில் எவ­ருக்குப் பிரச்­சினை இல்லை?. ஏதோ ஒரு வடி­வத்தில் அனை­வரும் பிரச்­சி­னை­களை தினம் தினம் தொடு­கிறோம்” என்­ற­வரின் முகத்தில் பளிச்­சென சிரிப்பு தோன்­றி­யது. அவர் வியா­பாரம் செய்து கொண்டு இருக்­கை­யி­லேயே நாமும் தொண தொண­வென, கேள்­வி­களை கேட்டு நச்­ச­ரிக்க அவரும் முகம் சுளிக்­காது அம்­பு­களை போரில் எறி­வது போன்று பதில்­களை எம்­மீது எய்தார்.

“எனது விரல் சூப்பும் வய­தி­லி­ருந்து பல்­வேறு தொழில்­களை செய்­தவன். இதற்கு வெட்­கப்­படத் தேவை­யில்லை. கூலி வேலை முதல் அனைத்து வேலை­க­ளிலும் தொழி­லா­ளி­யாக பல வரு­டங்கள் நின்­றதால் நல்ல தொழில் பயிற்­சி­க­ளையும் அனு­ப­வத்­தையும் பெற்­றவன். எங்­களைப் போன்­ற­வர்­களின் வாழ்­வியல் போராட்­டத்தை பல முத­லா­ளிகள் தங்­க­ளுக்கு வாய்ப்­பாக பயன்­ப­டுத்திக் கொள்­வார்கள். அன்று எனது சிறு வயதில் முழு நாளும் உழைப்பை பெற்­ற­வர்கள் மாதக்­க­டை­சியில் சொற்ப சம்­ப­ள­மாக வழங்­கி­யதை என்னால் மறக்க இய­லாது” என ஷாஜகான் எமக்கு தெரி­விக்­கையில் அவரின் அனு­பவ நினைவு வலி எமக்­குள்ளும் வலியை கொப்­ப­ளிக்க வைத்­தது. 

மீண்டும் ஆர்­வத்­துடன் தொடர்ந்தார் ஷாஜகான். “எனது இரு­பத்­தைந்­தா­வது வயதில் ஒரு­வ­ரிடம் அன்­னாசி முத்­திய காய்­களை துண்டு துண்­டு­க­ளாக வெட்டி உப்பு, மிளகாய்த் தூள், தேவை­யெனில் மிளகுத் தூள் தெளித்து விற்கும் தொழிலில் இணைந்தேன். அதன் தொழில் இர­க­சி­யத்தை வேக­மாக கற்றுக் கொண்டேன்” என்றார். இத் தொழிலில் பல்­வேறு சிக்கல் உள்­ளது என ஷாஜகான் கூறி­யதும் நாங்­களும் வியப்­ப­டைந்தோம். 

“பலர் நினைப்­பது போல் இத்­தொழில் இல்லை. இத் தொழில் சமூக அக்­க­றை­யோடு இணைந்த தொழில். சுத்தம் பிர­தா­ன­மா­னது. காய்­களை கொள்­வ­னவு செய்­கையில் காய்­களின் தரம் பார்த்தே வாங்க செய்ய வேண்டும்.  அன்­னா­சி­யா­னது பழ­மாக மாறக்­கூ­டிய நிலையை கொண்ட காயா­கவும், மாங்­கா­யா­னது முக்கால் பகுதி பழ­மாக மாறக்­கூ­டிய நிலையைக் கொண்ட கெட்டி காயா­கவும் இருக்க வேண்டும். கொய்­யாக்­காயும் அரை பழ நிலையை கொண்­ட­தா­கவும் அம்­ப­ரெல்லா மிகவும் முத்­தி­ய­தா­கவும் இருக்க வேண்டும்” என தக­வலை அவர் தெரி­வித்தார்.

“எதற்­காக இவ்­வாறு தரம் பிரித்து கொள்­முதல் செய்­வீர்கள்” எனக் கேட்டோம். “அன்­னாசி அரை பழ­மாக இருந்­தால்தான் சுவை. கல­வை­க­ளுடன் நாங்கள் வழங்­கு­கையில் வாயில் வைத்து பற்­களால் கடிக்கும் போது ஒரு வித­மான சுவையை வழங்கும்.

அச்­சு­வை­யா­னது உண்­ணு­வோரின் அடி வயி­று­வரை படார் என ஊர்ந்து செல்லும். கொய்யா வேறு ஒரு சுவையை அது கொடுக்கும். மாங்காய் மற்­று­மொரு சுவையை தரும். அம்­ப­ரெல்லா காய்க்கு மற்­று­மொரு விசேட சுவையை வித்­தி­யா­ச­மாக வழங்­கு­கின்­றது. இதன் சுவை இரு­வ­கையை கொண்­டது. இனிப்­பையும் புளிப்­பையும் கொண்ட கலவை கூட்டு சுவையை தரும் திற­மையைக் கொண்­டது அம்­ப­ரெல்லர்.

இவ்­வா­றான காய்­களை சாப்­பி­டு­வோ­ருக்கு மேலும் சுவையை அதி­க­ரித்­து­தரும் மிளகாய் தூள், உப்புத் தூள், இணைந்த கலவை. சாப்­பி­டு­ப­வரை சொக்க வைத்­து­விடும். இந்த ருசியே பலரை இரண்டு, மூன்று தட­வைகள் என்­னிடம் அச்­சாறு காய்­களை வாங்க வைக்கும்.  இவற்­றை­விட மேலாக பல­ரையும் கொள்ளை கொள்ளும் வகையில் காய்­களை வெட்டி பர­வ­லாக அழ­காக அடுக்கி வைக்க வேண்டும். குறிப்­பாக சிறு­வர்கள், கர்ப்­பிணித் தாய்­மார்கள் விரும்பி சாப்­பி­டு­வதால் சுத்­த­மாகத் தயா­ரிக்­கின்றேன். 

நான் பல வரு­டங்­க­ளாக கொழும்பு கோட்டை சதாம் வீதியில் எனது நடை வியா­பா­ரத்தை நடத்தி வரு­கின்றேன். இப்­ பி­ர­தே­சத்தில் பெரும் அரச, தனியார் நிறு­வ­னங்கள் உள்­ளன. அதனால் எனக்கு பல வாடிக்­கை­யா­ளர்கள் உள்­ளனர். மாலை மூன்று மணி­வரை இங்கு வியா­பாரம் செய்வேன். இதன் பின்னர் புறக்­கோட்டை பியூப்பல்ஸ் பார்க் கட்­டடத் தொகு­தியில் வியா­பாரம் செய்வேன். இங்கும் எனக்கு வாடிக்­கை­யா­ளர்கள் உள்­ளனர்.

இதனால் நேர்­மை­யோடு எனது வியா­பா­ரத்தை தொட­ரு­கின்றேன்.” என் றார் ஷாஜகான். 

இத் தொழிலில் உள்ள கஷ்டம் என்ன? எனக் கேட்­டோம்

“காய்­களை பொறுக்கி தரம் பார்த்து எடுக்­கையில் மொத்த வியா­பா­ரிகள் தெரிவிக்கும் வசனங்களும் கதைகளும் எம்மை பயமுறுத்தும். மழை காலங்களில் காய்களை பெறுவதும் விற்பதும் எமக்கு பெரும் சவாலாகும். சில நாட்களில் திடீரென மழை பெய்துவிட்டால் விற்பனை செய்வது மிக மிகப் பெரும் கஷ்ட மான காரியமாகும். இவ்வாறு நிலைமை ஏற்படுகை யில் பணம் பெறாமலேயே தெரிந்தவர்களுக்கு இவற்றை  வழங்கி விடுவேன். குப்பைகளில் வீசுவதில்லை.

அது மாபெரும் பாவச் செயலாகும் என்றார் ஷாஜகான். அவரது வியாபார த்தை வீணாக்காது நாமும் அவரிடம் இருந்து விடை பெற்றோம் வியப்புடன். 

படங்கள்: க.பொ.பி.புஷ்பராஜா

1 comment:

  1. நேர்மையான வியாபாரிகள் அரிதாக இருக்கின்ற இக்கால கட்டத்திலே சிறிய வியாபாரமாயினும் நேர்மையாகச் செய்யவேண்டுமென நினைக்கின்ற இவர்போன்ற சகோதரர்களை சமூகம் கைகொடுத்து உதவ வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.