Header Ads



'மீண்டும் பிரபாகரனை உருவாக்க, திட்டம் தீட்டுகின்றார்கள்'

விடுதலைப்புலிகளில் முக்கியஸ்தர்கள் இன்றும் இலங்கையில் இருப்பார்களாயின் அவர்கள் தாராளமாக வெளிவரலாம் என ஜாதிக ஹெல உறுமய கட்சி உறுப்பினர் நிஷந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்தார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்,

மாவீரர் தினத்தினை அனுஷ்டிக்க ஒருபோதும் அனுமதிக்க முடியாது. நாட்டை பயங்கர பாதைக்கு வழிநடத்திச் சென்ற பிரபாகரனின் பிறந்த நாளையோ அல்லது மாவீரர் தினத்தையோ எம்மால் அனுமதிக்க முடியாது.

யாழ். பல்கலைக்கழகத்தில் பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாடப்படுகின்றது. அந்த மாணவர்கள் ஏமாற்றப்படுகின்றார்கள். உண்மையில் இவ்வாறு செய்வதற்கு தமிழ் மக்கள் வெட்கம் கொள்ள வேண்டும்.

இந்த நாட்டிற்கு அழிவைக்கொண்டு வந்த பிரபாகரனின் பிறந்த நாள் கொண்டாடப்படுகின்றது. ஆனாலும் இந்த நாள் இலங்கையின் கருப்பு தினமாக வேண்டிய நாளே.

நல்லது கெட்டது தெரிந்த எவரும் இதனைக் கொண்டாடமாட்டார்கள், தமிழ் மக்களின் உயிர்களையும் வாழ்வையும் அழித்தவர் பிரபாகரன் எனும் தீவிரவாதியே.

யுத்தத்தில் இறந்த சொந்தங்களை நினைவு கூற அனுமதி உண்டு ஆனாலும் விடுதலைப்புலிகளை நினைவு கூற அனுமதி இல்லை. அவ்வாறு இறந்த பொது மக்களுக்கு அஞ்சலி செலுத்த அவர்களுக்கு மே மாதம் 17, 18, 19 ஆம் திகதிகளே ஏற்றதாகும்.

மேலும் தமிழ் அரசியல் தலைவர்கள் மீண்டும் பிரபாகரன் ஒருவரை உருவாக்கவே திட்டம் தீட்டுகின்றார்கள். இவ்வாறான செயற்பாடுகள் மூலம் தமிழர்கள் மீண்டும் ஒரு பிரபாகரனை அழைக்கின்றார்கள் என்றே எண்ணத் தோன்றுகின்றது.

அதே போன்று யாழ்ப்பாணத்தில் ஒரு வகையிலும் கொழும்பில் ஒரு வகையிலும் விக்னேஷ்வரன் நடந்து கொள்கின்றார். இதன் மூலம் அவர் போலி நாடகமாடுகின்றார் என்பது தெரிகின்றது.

தமிழ் தலைவர்கள் நாட்டை பிளவு செய்யவே காத்திருக்கின்றார்கள் இன்று வரை அவர்கள் வெளிப்படையாக தனி ஈழம் வேண்டாம் என்ற கருத்தை கூற வில்லை ஒற்றையாட்சிக்கும் இணங்கவில்லை. இதன் மூலம் அவர்கள் இலங்கையை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்ல காத்திருக்கின்றார்கள்.

இறுதி யுத்தத்தின் பின்னர் விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர்கள் உயிருடன் இந்தால் அவர்கள் தாராளமாக வெளிவரலாம் அரசியலிலும் இணைந்து கொள்ளளாம்.

ஆனால் இனிமேல் ஆயுதம் ஏந்த மாட்டோம், தனி ஈழம் கோரமாட்டோம் என வாக்குறுதி அளிக்க வேண்டும் இதனை செய்ய முடியும் என்றால் அவர்களும் அரசியல் களத்தில் பயணிக்கலாம்.

தமிழ் அரசியல் தலைவர்களும் பிரபாகரன் ஆயுதம் ஏந்தி செய்தவற்றையே ஆயுதம் இல்லாமல் செய்து வருகின்றனர். தற்போது தெற்கில் இனவாதிகள் இருக்கின்றார்கள் என கூறுகின்றார்கள் ஆனால் உண்மையில் இனவாதிகள் இருப்பது வடக்கிலேயே.

ஆனால் தமிழர்களும், முஸ்லிம்களும் நாட்டில் பௌத்தத்தை அடக்க நினைக்கும் செயலை தட்டிக் கேட்பவர்களை இனவாதிகளாக சித்திரிக்கின்றார்கள்.

தெற்கில் உள்ளவர்களுக்கு போதனைகள் விடுப்பதனை விட்டு விட்டு வடக்கில் உள்ள இனவாதிகளை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் நிஷந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

5 comments:

  1. நிஷந்த ஸ்ரீ வர்னசிங்க அவர்களே பிரபாகரன் கெட்டவனாக இருந்தாலும் அவன் ஏன் உருவானான் என்பதற்குறிய காரணம் உங்களுக்கு தெரியும் இந்து தமிழர்களை அடக்க முயற்சித்து அவர்களின் உரிமைகளை அன்று இருந்த பேரினவாதிகள் தடுத்தார்கள்,அதுபோன்ற இழி செயல்களை இன்று உங்களின் மதப்போதகராக இருக்கும் சில தேரர்கள் மஞ்சல் பிடவையின் கௌரவ ஆளுமையால் செய்துகொண்டிருக்கின்றார்கள் இவர்களை நீங்கள் தடுக்காவிட்டால் மீண்டும் நம் நாட்டில் பல பிரபாகரன்கள் உருவாவதை தடுக்க முடியாது

    ReplyDelete
  2. ஐயா நிசந்த ஶ்ரீ அவர்களே!
    மீண்டும் பிரபாகரன்கள் உருவாகாமல் இருப்பதற்கான வழிவகைகளைத்தேடாது மாண்ட பிரபாகரனையும் இன்னும் பலரையும் மீட்டுவர முயற்சிப்பது போல் உங்களது அறிக்கை உள்ளது. பிளவுபடாத இலங்கையை கட்டியெழுப்புவதற்கான தேடல்களைத் தவிர்த்து எரிபொருள்களைச் சேமிக்கும் ஈனச்செயல்களைத் தவிர்ந்துகொள்ளுங்கள்.
    சந்தர்ப்பம் கிடைத்தால் முஸ்லிம்களையும் உரசிப்பார்க்கும் தங்களின் கபடத்தனத்தைவிட்டு வெளியேறி இத்தாய்நாட்டினை ஒருங்கிணைத்துச் செயற்படுவதில் முஸ்லிம்களின் பங்களிப்பு யாது என்பதை தேடியறிந்து அதனை மேலும் வலுவூட்டுவதற்கான வேலைத்திட்டங்களை முன்மொழியுங்கள்.
    மேலும் மேலும் பிரிவினையைத் தூண்டி பகையை வளர்ப்பதற்கு பதிலாக நண்பர்களைத்தேட முயற்சிசெய்யுங்கள். நீங்கள் புதையல் என்று நினைத்து பூத்த்தை வெளியெடுக்கும் முயற்சியிலேயே ஈடுபடுவதுபோன்றதோர் தோன்றப்பாடு தென்படுகிறது. ஏற்கனவே கீறல்பட்டுக்கிடக்கும் எமது தாய்த்திருநாட்டிற்கு தற்போது தேவைப்படும் நல்லுறவு அரசியலைச்செய்யுங்கள் காலம் உங்களைக்காத்துக்கிடக்கின்றது.

    ReplyDelete
  3. சரியாக சொன்னீர் #ரியால் அப்துல்லாஹ்...


    பிரபாகரன் வீட்டில் வேலையில்லாமல் போராட்டத்திற்கு வரவில்லை, இன்று நாட்டில் எனைய மார்க்கங்களை அடக்கி அதுவே நாட்டின் வளச்சியெனகருதும் சாம்பிறாணிகளே அக்காலகட்டத்திலும் மனிதவ உரிமையை மறுத்து, பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கி யுத்தத்திற்கு அவர்களை தள்ளிவிட்டனர்.

    உன்மயிலேயே அனீதியை எதிர்த்து யார் யாருக்கெதிராக உரிமைப்போர் செய்தாலும் அது ஜிஹாத், அதில் உயர்வான நிலை அனீதிசெய்தவர்களை மாத்திரம் தண்டிப்பதே...

    ReplyDelete
  4. Well said. If we are educated people, we should find the Root course of the problem and we should try to solve the main reasons behind the raise of terrorism.

    If we neglect and failed in controlling the mains reasons that paw path to the raise of terrorism. We will fail in our peace objectives.

    HOPE we Srilankans UNITE as one Nation with Respect to the rights of each other and develop the country to forward.

    ReplyDelete

Powered by Blogger.