Header Ads



சீனாவின் விளக்கம்

இலங்கை தொடர்பில் சீனாவின் இலங்கைக்கான தூதுவர் வெளியிட்ட கருத்தை பாதுகாக்கும் வகையில் சீன அரசாங்கம் இன்று கருத்து வெளியிட்டுள்ளது

இலங்கையில் சீனா தொடர்பில் நிலவும் பிழையான வாதங்கள் மற்றும் தவறான வழிநடத்தல் என்பவற்றை தெளிவுப்படுத்தும் வகையிலேயே சீனத்தூதுவரின் கருத்து அமைந்துள்ளதாக சீனா குறிப்பிட்டுள்ளது.

சீனாவின் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் லூ காங் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

இலங்கைக்கு சீனா அதிக வட்டியுடனான கடன்களை வழங்கியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு அண்மையில் பதிலளித்திருந்த இலங்கைக்கான சீனத்தூதுவர் அதனை மறுத்ததுடன், அதிக வட்டியாக இருப்பின் ஏன் தொடர்ந்தும் சீனாவிடம் கடன்களை இலங்கை எதிர்ப்பார்க்கவேண்டும் என்ற கேள்வியை எழுப்பியிருந்தார்.

அத்துடன் சீனா, இலங்கையின் உள்ளுர் அரசியலில் தலையிடாது என்றும் சீன நிறுவனங்கள் எவையும் இலங்கையர்களுக்கோ, இலங்கையின் வர்த்தகங்களுக்கோ லஞ்சம் கொடுக்காது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு மாறான கருத்தை இலங்கையின் அமைச்சர் ரவி கருணாநாயக்க வெளியிட்டநிலையில் இரண்டு நாடுகளுக்கு இடையில் தப்பான புரிந்துணர்வுநிலை ஏற்பட்டது. இந்தநிலையிலேயே தமது தூதுவரின் கருத்தை சீன அரசாங்கம் ஆதரித்து கருத்துக்கூறியுள்ளது

1 comment:

  1. இராஐதந்திரத்துறையில் சீனாவுக்கு உள்ள அனுபவமும் தீர்க்க தரிசனமும் மிகவும் பழைமைவாய்ந்தது. உண்மையில் இலங்கை போன்ற நாடுகள் பல வருடங்களுக்கு சீனாவிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியிருக்கின்றது. ஆனால் அண்மைக் காலத்தில் சீனாவின் இராஐதந்திரமும் பேராசை,ஆக்கிரமிப்பு,அடக்கியாளும் கர்வம் அதிகாரத்திமிர் போன்ற நோக்கங்களோடு செயல்படுகின்றது. அதனால்தான் எந்தவிதமான உயரிய சிந்தனைகள்,தூரநோக்கு இல்லாத வெறுமனே பேராசையும் எந்த விதமான உத்தியைக் கையாண்டாவது பொதுச் சொத்துக்களை தனதாக்கிக் கொண்டு ஆயிரமாயிரம் வருடங்கள் ஆட்சிசெய்து இந்த நாடு குட்டிச்சுவரானாலும் பரவாயில்லை நானும் எனது குடும்பமும் ஆட்சியில் இருக்க வேண்டும் என்ற மமதையில் ஊரிய ராஐபக்ஸ குடும்பத்தின் நிலைமையை நன்கு புரிந்துவைத்துள்ள சீனா அந்த பேராசைக்காரர்கள் ஊடாக இலகுவாக இலங்கையின் பூரண அதிகாரத்தையும் ஏன் நாட்டையும் கைப்பற்றலாம் என நீண்டகாலத்திட்டத்துடன் தான் மீண்டும் அவனை வைத்து நாட்டைக் கைப்பற்ற திட்டம் தீட்டியுள்ளது. எனவே தற்போதைய ஆட்சியாளர்கள் இந்த சூழ்ச்சியை நன்கு விளங்கி செயற்பட்டால் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நல்ல காலம் உண்டு. இல்லையேல் அனைவருக்கும் அழிவுதான்.

    ReplyDelete

Powered by Blogger.