Header Ads



ஞானசாரர் விவகாரத்தில், நல்லாட்சி அரசு மௌனம் காப்பது ஏன்..?

-முயிஸ் வஹாப்தீன்-

இலங்கையின் அரசியல் ஆட்சி மாற்றத்துக்கு பேரினவாதிகளின் கையிலுள்ள இந்த "இனவாதம்" ஒரு துரும்பாக பயன் படுத்தப்பட்டு வருகிறது.  

எளிதில் உணர்ச்சிவசப்படும்  இலங்கை முஸ்லிம்களின்  பலவீனத்தை பயன்படுத்தி சில அரசியல் அதிகாரம் தேடும் குள்ள நரிகள் ஆட்சி பீடம்  ஏறுவதற்கு இந்த  இனவாதத்தை பயன்படுத்துவது வழக்கமாகி  விட்டது.  

இனக்கலவரங்கள் தங்களுக்கு பெரிதும் ஆபத்தானவை என்பதனை இன்றைய அரசாங்கமானது, கடந்த அரசாங்களின் வீழ்சசியில் இருந்து பாடம் படித்துக் கொள்ளத்  தவறி விடக் கூடாது. 

கலகொட அத்தே ஞானசார தேரரின் உணர்ச்சி வசப்படுத்தும் பேச்சுக்களால் ஈர்க்கப்படும்  ஒரு பகுதி  சிங்கள  சகோதர்களின் இதயங்களில்  இனவாதம் திணிக்கப்பட்டு கலவரங்களை நோக்கி இழுத்துச் செல்வதென்பது  இன்னுமொரு கசப்பான  உண்மை.

கடந்த பல ஆட்சி மாற்றங்களின்  பிரதான விடயமாக இந்த இனவாத கலவரங்கள் முக்கிய பங்கு வகித்துள்ளதை எம்மால் அவதானிக்க முடியும். 

2001 ம் ஆண்டு மாவனல்லை கலவரம் மூலம் சந்திரிகா அம்மையாரின் ஆடசியும், 2014 ம் ஆண்டு அலுத்கம கலவரம் மூலம் மஹிந்த ஆட்சிக்கு கவிழ்ப்பும்  எமது கண்களால் நேரடியாக இரு தாசபந்தகளுக்குள் காணக் கிடைத்த அரசியல் நிகழ்வுகள். 

இவ்விரு  கலவரங்களுடைய நோக்கங்களை பல கோணங்களில் இருந்து பார்க்கலாம். ஆட்சியிலுள்ள அரசு பெரும்பான்மை  இனத்தவர்களின் வாக்கு வங்கியை  பாதுகாக்க தாமே திடடமிட்டு செயற்படுத்தலாம் அல்லது எதிர் கட்சிகள் திடடமிட்டு ஆட்சி கவிழ்ப்புக்கு  இவ்வாறான வன்முறைகளை ஏவி விட்டிருக்கலாம். எது எப்படி நடந்திருந்தாலும் அதிகாரத்திலுள்ள அரசாங்கம்  தான் பொறுப்பேற்க வேண்டும் என்பதனால்தான் ஆட்சியுள்ள அரசை மக்கள் நிராகரித்தனர். 

சம்பவங்களின் பின்னணி தொடர்பில் மிகத் தெளிவாக  ஆராய்ந்து அறிந்த பின்னரே  தீர்மானங்களை எடுக்க பழகிக் கொள்ள வேண்டும். அவ்வாறு தவறும் பட்சத்தில் எம்மால் எடுக்கப்படும் தவறான முடிவுகள் பிழையாக இட்டுச் செல்வதுடன்,  இன சௌஜன்யத்தை நிச்சயமாக கட்டியெழுப்ப முடியாமலும் போய்விடும், இது அடுத்த தலை முறையினர் வரை பாதிக்கும்.   

களுத்துறை மாவட்டத்தில் கடந்த பொது தேர்தலில் மக்களால் புறக்கணிக்கப்படட கலகொட அத்தே ஞானசார தேரருக்கு மீண்டும் அதிகாரம் வழங்கியது யார்? முன்னாள் பாதுகாப்பு செயலாளர் தான் இவரை உருவாக்கினார் என்றே வைத்துக் கொண்டாலும் முழு  நாட்டின் ஆட் சியும், அதிகாரமும் கொடுக்கப்படட ஒரு அரசு ஏன் இவருடைய விடயத்தில் மெளனம் காக்க வேண்டும்? என்ற கேள்விகள் எழுகின்றமை இயல்பானதே. 

அடக்குமுறைகள், அராஜகங்கள், அநியாயங்கள், ஊழல், மோசடிகள், வக்கிரமங்கள், வன்முறைகள், வஞ்சம் தீர்த்தல்கள் என எல்லாவற்றையும் இல்லாமல் ஒழிப்போம் எனச் சொல்லி  "நல்லாட்சி" என்ற  சுலோகத்துடன் ஆனந்தமான எதிர்பார்ப்புக்களை கொண்டு அமைக்கப்படட  இன்றைய ஆட்சியிலும் "இனவாதம்" இன்னும் தொடர்கின்றமை மிகுந்த ஏமாற்றத்தையும், கவலையையும் தருகிறது. 

8 comments:

  1. ஞானசார செய்துகொண்டிருப்பது தவறான காரியங்கள் என 99% பௌத்த மக்கள் அறிவர். ஆனால் சொந்த மற்றும் அரசியல் நோக்கங்களுக்காக சிலர் ஆதரவளிக்கின்றனர்.
    மைத்திரி அவர்கள் நல்லவர் என யாரும் அவருக்கு வாக்களிக்க வில்லை. மகிந்தவை வீட்டுக்கு அனுப்ப வேறு வழியின்றித்தான் ஆதரவளித்தோம்
    நிலமையைப்பார்த்தால் ஒருவரையும் நம்பமுடியவில்லை.

    ReplyDelete
  2. நல்லாட்சியா பொல்லாட்சியா

    ReplyDelete
  3. சிலரின் "இனவாதம்" காரணம்..

    ReplyDelete
  4. வெந்து கொண்டிருக்கும் சட்டியிலிருந்து தப்பிக்க பாய்ந்த போது அடுப்பிற்குள் வீழ்ந்த நிலைதானோ நம் நிலை எனப் புரியவில்லை.

    ReplyDelete
  5. If this govt truly desired to establish law and order,
    they could have started crack down on all anti-social
    elements including GNANASARA who very openly and
    fearlessly ignited violence against Muslims and there
    were criminals who carried out attacks on them.
    GNANASARA hasn't stopped anything despite having
    so many court cases and humiliating election loss and
    instead he is still on his mission inciting criminal
    minded Sinhalese against Muslims . The arrest and
    detention of Razik shows Govt didn't think twice to
    act decisively against rabble rousing but in the
    case of GNANASARA , the silence , patience and
    tolerance are all in the package ! Whole hearted
    action to protect Muslim community from the dangers
    and humiliation by very obvious and branded
    culprits , has not yet been carried out . We are
    waiting for justice . Muslims and Tamils are the
    two yardsticks for much sought foreign and even
    local investments .

    ReplyDelete
  6. நமது முஸ்லிம் அரசியல் வாதிகளின் சுயநல அரசியல்

    ReplyDelete
  7. இலங்கையிலுள்ள மூவின மக்களிலும் சொற்பமானவர்களே இனவாதிகள். இருப்பினும் சமகாலபோக்கினை அவநானிக்கையில் நிரந்தர பகைமூட்டம் முழு சமூகத்தையும் ஆட்கொண்டுவிடுமோ என எண்ணத்தோன்றுகின்றது.
    இச்சந்தர்ப்பத்தில் நாம் ஞானம் சாரா (அறிவுசாரா) தேர்ர்பற்றி கதைப்பதிலும் பார்க்க சிங்கள மக்களை வெல்வதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது அவசியமாகும்.
    சிவில்சமுக அமைப்புக்களின் தலைமையில் கருத்தாடல்களைச் செய்து சிறந்த வேலைத்திட்டங்களை வடிவமைத்து சிங்கள சமூகத்தளத்திற்கு கொண்டுசெல்வது அவசியமாகும்.

    ReplyDelete
  8. இந்த மைத்திரி பொன்னையேனை ஜனாதிபதியாக தெரிவுசெய்ததில் எந்தவொரு பிரயோசமுமில்லை.

    ReplyDelete

Powered by Blogger.