Header Ads



தவறிழைக்கும் சாரதிகளுக்கான தண்டம் அதிகரிப்பு - போராட்டத்தில் குதிப்போமென எச்சரிக்கை

வாகனப் போக்குவரத்தின் போது தவறிழைக்கும் சாரதிகளுக்கான தண்டம் 2500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டதை எதிர்த்து வருகின்ற 15ஆம் திகதி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தண்டம் 2500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டதை நீக்கிக் கொள்ளாவிட்டால் அடுத்த வாரமளவில் தொடர்ச்சியான வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் அச்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இன்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் வேண்டுகோள் விடுக்க உள்ளதாக சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன கூறினார்.

2 comments:

  1. இச்சட்டத்தால் அரசைவிட வீதியில் மறித்து சோதனயில் ஈடுபடும் லஞ்சப்பெருச்சாளிகளே வருமானம் காண்பர்???

    ReplyDelete
  2. என்னடா இந்த நாட்டில் இப்படியும் மனிதர்கள் தவறு இழைப்பவர்களுக்கு தான் இந்த சட்டம். இவர் சொல்லுவதை பார்க்கும் பொது நாங்கள் தவறு செய்வோம் அனால் அதை கண்டு கொள்ள வேண்டாம் தண்டப்பணமும் கட்டமாட்டோம். வூவ் நல்ல எதிர்காலம் எங்கள் இலங்கை நாட்டுக்கு.

    ReplyDelete

Powered by Blogger.