November 22, 2016

பௌத்த தீவிரவாத அமைப்புகளை, தடைசெய்ய வலியுறுத்தி தமிழர்கள் ஆர்ப்பாட்டம்

பௌத்த தீவிரவாத அமைப்புக்களை அரசாங்கம் தடைசெய்ய வேண்டும், குறிப்பாக பௌத்த தீவிரவாத அமைப்பாக செயற்படுகின்ற பொதுபல சேனா போன்ற அமைப்புக்கள் தடைசெய்யப்படவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் தெரிவித்துள்ளார்.

செங்கலடி பிரதேசத்தில் இன்றைய தினம் -22- நடைபெற்ற இந்து மதகுருக்களின் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

இந்த நாட்டின் சரித்திரத்திலேயே இன்று தான் எங்களுடைய இந்து மத குருமார்கள் முதல் தடவையாக வீதியில் போராட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள்.

இந்த நாட்டிலே இந்து மத குருமார்களோ கிருஸ்தவ மதகுருமார்களோ வீதிகளில் இறங்கி போராடியவர்கள் இல்லை, அதற்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள் என்றால், மிகக்கேவலமாக நடந்துகொண்ட மதகுருக்களை அச்சுறுத்திய அம்பிட்டிய சுமணரத்தின தேரரே காரணம்.

இந்த நாட்டிலே இந்து மத குருமார்களோ கிருஸ்தவ மதகுருமார்களோ இலங்கை சரித்திரத்தில் நேரடியாக தனது மதத்தை அரசியலுக்கு கொண்டு வந்தவர்களும் இல்லை வரப்போவதும் இல்லை.

அவ்வாறானவர்கள் இன்று போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் என்பது மிகவும் வேதனையான விடயமாகும்.

நல்லாட்சி அரசு இனவாதம் பேசுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளபோதும் அது இன்று வரை நடைபெறவில்லை. எனவே அதனை நடைமுறைப்படுத்த மிக விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் தெரிவித்துள்ளார்.

11 கருத்துரைகள்:

இவ்வாறு பெளத்த தீவிரவாதத்தை எதிர்த்து SLTJ ஆர்ப்பாட்டம் செய்தால், எமது சமுதாயத்தில் உள்ள மூடர்கள் அதை பிழை காண்கிறார்கள். இவ்வாறல்லாம் எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்ய தேவை இல்லை, சும்மா வீட்டிள் இருந்து கொண்டு பத்திரிகை அறிக்கை விட்டால் போதும் என்கிறார்கள். இவர்களுக்கும் துணிவில்லை, துணிவுடன் எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்வோரயும் விட்டுவைப்பதில்லை.

sano
YOU ARE MILLION TIMES CORRECT.........

WE ARE ATTACKED FROM THE BACK BY OUR OWN PEOPLE WHO CRAVE FOR WORLDLY PLEASURE..

Protesting is not a matter but the words used by SLTJ have caused such problems. SLTJ should learn how to protest and what to speak.

Well ,what he says is perfectly correct.

Well ,what he says is perfectly correct.

I think the Buddhist community is trying to have two enemies. The LTTE sympathisers waiting for an opportunity, for us Muslims also this a good opportunity to fight back rather keeping our head down. On that regard I salute SLTJ and their courage.
Some of Muslims think that they can sit and eat all their life and enter heaven.
Most of our Muslims going astray. Specially in Colombo. Young ones are becoming uneducated so a situation like this will wake them from coma.
Buddhists are trying to destroy their own race by having 2 enemies on either side.
Good luck to the Racist monks.

LTTE would have been established their goal of making Eelam , had they got the support of Muslims, some moda Sinhala yakkun don't understand this, now accuse every Muslim as ISIS supply them with weapons let's see who will run. LTTE sympathizers from north and Muslim ISIS from east and other parts, Gnansara will fly out of SL leaving the poor Buddhist community.

#voice don't dream too much ...We knew Muslims perfectly ... " cap changers "

What is their to change the cap ? Did I say we will support u ? Or be friended the you guys ? We can trust Buddhists not you guys.
That's the reason I said LTTE sympathizers without using " Tamils"
Dubakoor olunga purinjikanga.
Now I can see who dreamed.

Yes, LTTE is not a terrorist becouse they are fight for freedom.and as far as we know Sinhala Budhist is Terrorist as i can give a example in Myanmar incident.

Post a Comment