Header Ads



'நான் இலங்கையில் இருந்திருந்தால்' ஜனாதிபதி செயலகத்தை நொருக்குங்கள் என கூறியிருப்பேன்'

(எம்.எம்.மின்ஹாஜ்)

இராணுவ வீரர்களினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் பின்னணியில் முழுமையாக அரசியல் சக்திகளின் தலையீடு உள்ளது. இந்த பிரச்சினைக்கு நான்கு மாதத்திற்கு முன்பே தீர்வு வழங்கப்பட்டு விட்டன. நான் மாத்திரம் இலங்கையில் இருந்திருந்தால் நிச்சியமாக குறித்த ஆர்ப்பாட்டக்காராகளை ஜனாதிபதி செயலகத்திற்குள் வருவதற்கு அனுமதி வழங்கியிருப்பேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

நேற்று இராணுவ வீரர்களினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் பின்னணியில் முழுமையாக அரசியல் சக்திகளின் தலையீடு உள்ளது . இந்த பிரச்சினைக்கு நான்கு மாதத்திற்கு முன்பே தீர்வு வழங்கப்பட்டு விட்டன. 2017 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தின் போது 12 வருட சேவை புரிந்து ஊணமுற்ற வீரர்களுக்கு ஒய்வூதியம் வழங்க முடிவெடுத்துள்ளோம். இது தொடர்பாக  ஆர்ப்பாட்டக்காரர்களை அறிவுறுத்திய போதும் அவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை. இதிலிருந்து இது அரசியல் பின்னணியினால் முன்னெடுக்கப்பட்டது என்பது தெளிவாகின்றது. இந்த போராட்டத்தை யார் ஏற்பாடு செய்தார்கள் என்பது அப்பாவி வீரர்களுக்கு தெரியாது. எனினும் இதில் முழுமையாக அரசியல் தலையீடு உள்ளது.

ஆர்ப்பாட்டக்காரகள் எம்மை தாக்குங்கள் என்று பொலிஸாரிடம் கோஷமிட்டுள்ளனர். அதன்போது பொலிஸார் நாம் உங்களை தாக்க முயற்சிக்கவில்லை என்று கூறியபோது அப்படியாயின் கண்ணீர் புகை பிரயோகமாவது செய்யுமாறு கோரியுள்ளனர். இவ்வாறான சம்பவம் தம்புள்ளையில் மரக்கறிக்கு நியாய விலை வழங்குமாறு கோரி முன்னெடுக்கப்பட்ட  போராட்டத்திலும் நடந்தது.

 நான்  நேற்று இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தேன். நான் மாத்திரம் இலங்கையில் இருந்திருந்தால் நிச்சயமாக குறித்த ஆர்ப்பாட்டக்காரர்களை ஜனாதிபதி செயலகத்திற்குள் வருவதற்கு அனுமதி வழங்கியிருப்பேன். உள்ளே வந்து ஏதாவது செய்யுங்கள், ஜனாதிபதி செயலகத்தை அடித்து நொருக்குங்கள் என்று கூறியிருப்பேன். ஆக கூடினால் அதனை தானே செய்வார்கள்.
ஆர்ப்பாட்டக்காராகளின் நோக்கம் அதுதானே. அதற்கு மதிப்பளிப்பதே எனது கொள்கையாகும் என்றார்.

1 comment:

Powered by Blogger.