Header Ads



பொலிஸாரை சாடும் சந்திரிக்கா

பொலிஸ் அதிகாரிகளில் பெரும்பாலானோரும் சில அரசியல்வாதிகளும் இலங்கையில் நடக்கும் போதைப் பொருள் விற்பனையாளர்களின் பங்காளிகளாக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.

போதைப் பொருள் ஒழிப்பு திட்டத்தை செயற்படுத்தும் முன்னர், அதனுடன் தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கம்பஹாவின் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசும் போது முன்னாள் ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

கிராமத்தில் உள்ள விகாரைகளின் பிக்குகள் மற்றும் பொலிஸாரை இணைத்து கொள்ளாமல் போதைப் பொருள் ஒழிப்பு திட்டத்தை முன்னெடுக்க முடியாது.

எனினும் அதற்கு முன்னர் பொலிஸ் மா அதிபர் பொலிஸில் சுத்திகரிப்பை மேற்கொள்ள வேண்டும். இதனை பொலிஸ் மா அதிபரும் அறிந்துள்ளார்.

பொலிஸ் நிலையங்களில் சேவையாற்றும் அதிகாரிகள் போதைப் பொருள் கடத்தல்கார்களின் முகவர்களாக மாறியுள்ளனர்.

சிறியளவில் காணப்பட்ட இந்த விடயம் கடந்த 10 வருடங்களில் அரைவாசிக்கும் மேல் அதிகரித்துள்ளதுடன், அரைவாசிக்கும் மேற்பட்ட பொலிஸார் போதைப் பொருள் விற்பனையாளர்களின் முகவர்களாக மாறியுள்ளனர் எனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார்.

இப்படி இருக்கும் போது எப்படி பிரச்சினையை தீர்ப்பது. அரசியல்வாதிகளும் இதில் எப்படியாவது இணைத்து கொள்கின்றனர்.

1 comment:

  1. மீண்டும் ஐனாதிபதியாக வாழ்த்துக்கள்

    ReplyDelete

Powered by Blogger.