November 09, 2016

சிங்­கள - முஸ்­லிம் ஒற்­று­மையை சீர்­கு­லைப்­ப­தற்கு, தீவிர முயற்­சி - ஜனாதிபதி எச்சரிக்கை


MM.Minhaj

நாட்டில் தற்­போது சிங்­கள, முஸ்லிம் மக்­களின் ஒற்­று­மையை சீர்­கு­லைத்து பிரிவினைவாதத்தை ஏற்படுத்த பாரிய முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. இதன் பின்­ன­ணியில் பல்­வேறு அமைப்­புகள் உரு­வெ­டுத்து செயற்படுகின்றன. எனவே இந்த சந்­தர்ப்­பத்தில் நாட்டு மக்கள் அனை­வரும் ஒன்­று­பட வேண்டும்  என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார்.

சமூக நீதிக்­கான மக்கள் இயக்­கத்தின் முன்னாள் தலைவர் மாது­லு­வாவே சோபித தேரரின் நினைவு தின நிகழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அங்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மேலும் உரை­யாற்­று­கையில்,

அதி­கா­ர­ப­ர­வ­லாக்கம் , ஜனா­தி­பதி முறை­மையை நீக்கல், புதிய தேர்தல் முறை­மையை அறி­மு­கப்­ப­டுத்தல் போன்ற அனைத்து பிரச்­சி­னைக்கும் புதிய அர­சி­ய­ல­மைப்பில் தீர்வு வழங்­கப்­படும். புதிய அர­சி­ய­ல­மைப்பில் அதற்­கான நட­வ­டிக்­கைகள் முழு­மை­யாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. 

அர­சாங்­கத்தின் 22 மாத காலப்­ப­கு­தியில் எம்மால் செய்ய முடி­யு­மான அனைத்­தையும் செய்து முடித்­துள்ளோம். எமது செயற்­பா­டுகள் குறித்து சில­ருக்கு சந்­தோஷம் .ஒரு சிலர் நிலைமை அறிந்தும் அதி­ருப்­தியில் உள்­ளனர். அர­சாங்­கத்­திற்கு எதி­ராக விமர்­ச­னங்­களை இல­கு­வாக முன்­வைக்க முடியும். அதற்கு ஜன­நா­யக ரீதி­யான உரி­மையை தற்­போது நாம் வழங்­கி­யுள்ளோம்.

அர­சி­ய­ல­மைப்பின் 19 ஆவது திருத்­தச்­சட்டம் நிறை­வேற்­று­வ­தற்கு எமக்கு ஏற்­பட்ட சிரமம் எவ­ருக்கும் தெரி­யாது. சுதந்­திரக் கட்சி ஆத­ரவு வழங்­கா­விடின் குறித்த சட்டம் நிறை­வே­றி­யி­ருக்­காது. எனவே சுதந்­திரக் கட்­சியின் தலைமை பொறுப்பை நான் பொறுப்­பேற்­ற­மை­யி­னா­லேயே 19 ஆவது திருத்­தச்­சட்­டத்தை நிறை­வேற்ற முடிந்­தது. 

அத்­துடன் தனக்­கான அதி­கா­ரத்தை குறைக்­கு­மாறு நீதி­மன்றம் சென்ற உலகில் முத­லா­வது தலைவன் நான் என்­ப­தனை அனை­வரும் நினைவில் வைத்து கொள்ள வேண்டும். 

தற்­போது அர­சி­ய­ல­மைப்பு பணிகள் தீவி­ர­மாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. இதன்­போது நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறைமை முழு­மை­யாக ஒழிக்­கப்­படும். 

நாட்டின் ஊழல் மோச­டிக்கு எதி­ராக செயற்­பட்­ட­வர்கள் விட­யத்தில் விசேட நீதி­மன்றம் அமைப்­ப­தற்கு தீவிர பேச்­சு­வார்த்­தை­களில் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. இந்த விட­யத்தில் பல்­வேறு சிக்­கல்கள் உள்­ளன. அதனை ஆராய்ந்தே முடிவு எடுக்க வேண்டும் .

அதே­போன்று நாட்டில் சிங்­களவர் மற்றும் முஸ்­லிம்கள் மத்­தியில் காணப்­படும் ஒற்­று­மையை சீர்­கு­லைப்­ப­தற்கு தீவிர முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன.

தற்­போது இதற்­கான புதிய அமைப்­புகள் உரு­வெ­டுக்க தொடங்­கி­யுள்­ளன. எனவே இந்த சந்­தர்ப்­பத்தில் நாம் அனை­வரும் ஒன்­று­பட்டு செயற்­பட வேண்டும் என்றார். விடிவெள்ளி

2 கருத்துரைகள்:

Wow, Maithripala, what a hypocrite!

உங்கள் வார்தைகள் இன்னும் நம்புகிறோம், ஒற்றமை, நிம்மதியை குலைக்கும்செயெல்பாட்டை யார் செகிண்றனர் என தெளிவான ஆய்வு அவசியம்.

Post a Comment