Header Ads



குற்றவாளி கூண்டில் இஸ்லாமிய அமைப்புக்கள் - நீதியமைச்சரே, இது நீதியா..?

-ஜெம்ஸித் அஸீஸ்-

இலங்கையின் நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 32 பேர் சிரியாவிற்கு சென்று ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் இணைந்து கொண்டுள்ளதாக தகவல் கிடைத்திருப்பதாக நீதியமைச்சர் இன்று (18.11.2016) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஒரு பழைய செய்தி குறித்து பேசியிருக்கிறார் நீதி அமைச்சர்.

முஸ்லிம் சமூகம் அந்த செய்தி குறித்து தெளிவான பதிலை கடந்த வருடமே தெரிவித்து விட்டது. அது தொடர்பான உண்மை நிலை ஆராயப்பட்டு தெளிவுபடுத்தப்பட்டாயிற்று.

32 பேர் அல்ல. ஒரு சிலரே அதில் தொடர்புபட்டவர்கள் என்ற உண்மையை நாட்டின் புலனாய்வுத் துறை அறிந்து வைத்திருக்கும்.

23.07.2015 அன்று IS (ISIS) மற்றும் தீவிரவாதம் பற்றிய இலங்கை முஸ்லிம் அமைப்புகளின் கூட்டுப் பிரகடனமொன்று தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் வெளியிடப்பட்டது.

“அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் 22.07.2015 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்ட தீவிரவாதத்திற்கு எதிரான மாநாட்டில் கலந்து கொண்ட முக்கிய முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகளாகிய நாம் சகலவிதமான தீவிரவாத செயற்பாடுகளையும் அநியாயங்களையும் மிக வன்மையாக கண்டிக்கின்றோம்” என்று ஆரம்பிக்கிறது அந்தப் பிரகடனம். அதிலிருந்து ஒரு சில பகுதிகள்:

“IS (ISIS) போன்ற இஸ்லாமிய போதனைகளுக்கு முரணாக செயற்படும் தீவிரவாத அமைப்புகளோடு எவராவது தொடர்புபட்டால் நாம் அதனை மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றௌம். இவ்வாறான அமைப்புகளுக்கும் இஸ்லாமிய அடிப்படை விழுமியங்களுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்பதையும் உறுதியாகக் குறிப்பிடுகின்றோம்.

எவராவது ஒரு தனிநபர் தீவிரவாதத்துடன் தொடர்புடையவராக இருந்தால் அவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்திடம் நாங்கள் கேட்டுக் கொள்கின்றௌம். எமது நாட்டை இவ்வாறான சமூகத்துக்கு எதிரான தீய செயல்களிலிருந்து பாதுகாப்பதற்காக அரச நிறுவனங்களுக்கு எமது உதவிகளையும், ஒத்தாசைகளையும் வழங்குவதற்கு நாம் தயாராக உள்ளோம்.

மேலும், ஊடகங்கள் இது சம்பந்தமான விடயங்களில் ஈடுபடும் போது பொறுப்புணர்வுடனும் பக்கச்சார்பு இல்லாமலும் ஈடுபட வேண்டும். ஊடகங்கள் இவ்வாறான விடயங்கள் தொடர்பான செய்திகளை வெளியிடும் போது திரிபுபடுத்தல் மற்றும் பிழையான செய்திகளை சமூகத்துக்கு வழங்குதல் போன்ற சமூக ஒற்றுமையையும் சகவாழ்வையும் பாதிக்கின்ற செயற்பாடுகளையும் முற்றாகத் தவிர்ந்துக் கொள்ள வேண்டும்.

முஸ்லிம்களாகிய நாம் எமது தாய் நாட்டில் பல நூற்றாண்டுகளாக நாட்டுப் பற்றுடனும், ஏனைய சமூகங்களுடன் ஒற்றுமையாகவும், சகவாழ்வுடனும் வாழ்ந்து வருகின்றோம். மேலும் எமது தாய்நாட்டுக்கு பாதிப்பு ஏற்படும் செயற்பாடுகளிலும், இலங்கையின் சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமையை சீர்குலைக்கும் செயற்பாடுகளிலும் இந்நாட்டு முஸ்லிம் சமூகம் ஒருபோதும் ஈடுபடப் போவதில்லை என்பதையும் உறுதியாகக் கூறிக் கொள்கின்றோம்.”

நீங்கள் இன்று குற்றவாளிக் கூண்டில் நிறுத்த முயற்சிக்கும் இஸ்லாமிய அமைப்புக்கள் உட்பட பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் சேர்ந்துதான் அந்தப் பிரகடனத்தை வெளியிட்டு வைத்தது என்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன். அவை வருமாறு:

All Ceylon Jamiyyathul Ulama (ACJU)
Muslim Council of Sri Lanka (MCSL)
Sri Lanka Jamat e Islami (SLJI)
Jama’athus Salama (MFCD)
Jamiyyathus Shabab (AMYS)
Al-Muslimath
International Islamic Relief Organization (IIRO)
World Assembly of Muslim Youth (WAMY)
All Ceylon YMMA Conference (YMMA)
Thableegh Jama’ath
All Ceylon Thowheedh Jama’ath (ACTJ)
Colombo District Masjid Federation (CDMF)

நாளை அனைத்துப் பத்திரிகைகளிலும் கொட்டை எழுத்துக்களில் பிரசுரமாகும் உங்கள் உரை.

மக்கள் அஞ்சுவார்கள். ஆவேசப்படுவார்கள்.

இனவாதிகள் நெருப்பை கக்குவார்கள். விஷமும் பாய்ச்சுவார்கள்.

சமூக வலைத்தளங்கள் வசைபாடும். உள்ளங்களில் கறை படியும்.

இதனால் இன விரிசலைத் தவிர, பரஸ்பரம் பகையைத் தவிர வேறு என்ன நடந்து விடப் போகிறது.

இப்படியிருக்க ஒரு பழைய செய்தி குறித்த உங்கள் இன்றைய உரையின் பின்னணிதான் என்ன?

வேண்டுமென்றா?

இல்லை இன்றுதான் அந்த செய்தி உங்களுக்குக் கிடைத்ததா?

அல்லது அரசியல் இலாபம் தேடும் முயற்சியா?

நீதி அமைச்சர் அவர்களே! இதில் என்ன நீதி இருக்கிறது?

12 comments:

  1. Enter your comment...ஹலோ

    ReplyDelete
  2. சரியப்பா இவரின் கூற்று சரியோ பிழையோ இவர் பாராளுமன்றத்தில் இனி எந்தவொரு சமய அடிப்படைவாதிக்கும் இடமில்லையென்று சட்டம் கடுமையாக நிலைநிறுத்தப்படும் என்று அறிவித்தார் So இதே அமைச்சர் வேலையை தான் முன்னைய அரசாங்கத்தில் எங்களின் Rauf Hakeem நீதி அமைச்சராக செய்தார் ஆனால் அவர் இதுபோல பாராளுமன்றத்தில் சும்மா சரி வாயே திறக்கவில்லையே!!

    Note : நான் எந்த கட்சியையும் சாராடவேன் பொதுவாக தான் கருது கூறினேன்.

    ReplyDelete
  3. Muslims should know why Minister Rajapaksa spoke about Muslims linking ISIS now. He is giving food for thought to Buddhist fundamentalists. This news has also been published in Times of India (Hindu newspaper). Muslims should be aware of these Ministers and specially the actions of UNP MPs under Mr Ranil.

    ReplyDelete
  4. Minister's utterance is very outrageous irresponsible out of touch with ulterior motive .
    Inflammatory , does it serve any purpose ?

    ReplyDelete
  5. IVAR MAHINDA PAANI.NAANGA SANDAI PIDITHAL ITHELLAM VARUM.OTRUMAI ALLAH VIN UDHAVIYAI KONDUWARUM

    ReplyDelete
  6. இது தான் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களின் தகுதியும், தரமுமாகும். அது சரி இதனை மறுத்துரைக்க நமது மந்திரிகள் யாராவது எழுந்திருந்தார்களா?

    ReplyDelete
    Replies
    1. Yes they will get up only there own benefit?otherwise open their mouth only for bun?.

      Delete
  7. சுய விளம்பரமாக இருக்கலாம்.நமது தலைவர்கள் அந்த நேரம் அங்கு நல்ல துக்கத்தில் இருந்திருப்பார்கள் போல். இப்ப மக்கள் கொதிக்க தொடங்கியதும் .தூக்கத்தில் இருந்து எழுந்து.உழறுவார்கள்.

    ReplyDelete
  8. இவர் போன்றவர்கள் முஸ்லிம்கள் பயங்கரவாதிகளாக ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள் .அப்போதுதான் முஸ்லிம்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விடுவது இலகுவாக இருக்கும் என்று நினைக்கிறார்கள் .

    ReplyDelete
  9. எங்கே நாம் தெரிவுசெய்தனுப்பிய நமது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ?

    ReplyDelete
  10. கணடிப்பாக இக்கேள்வியை அவ்வமைச்சரின் காதுகளில் சேரச்செய்வோம்...

    ReplyDelete
  11. வாக்களித்து அனுப்பிய நமது தம்பிகள் பாராளுமன்ற பூப்யாவில் RESTAURANT நல்லா மொத்திட்டு தொங்கி இருப்பார்கள்.நாம் சொன்னால்தான் அவர்களுக்கு விடயம் என்ன என்று தெரியும்.அவர்கள் புத்திசாலிகள்தான் நாமதான் மடையர்கள் ஐந்து வருடம் பார்த்துவிட்டு ஆளை மாத்திக்க வேண்டும் அப்படித்தான் பெரும்பான்மையில் அதிகமாக நடக்குது.(பொன்னான கத்தி என்றால் பொக்குளில் குத்தலாமா)

    ReplyDelete

Powered by Blogger.