November 06, 2016

மன்சூர், மன்னிப்புக் கேட்க வேண்டும்..!

பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம் மன்சூர் “இது பௌத்தநாடு,அவர்கள் விரும்பிய இடங்களில் சிலைகளை வைக்கலாம்.அதற்காக யாரிடமும் அனுமதி கேட்க வேண்டிய அவசியமில்லை.அதனை எந்த ராசாவாலும் அகற்ற முடியாது” எனக் கூறியுள்ளதனூடாக ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தின் மனங்களையும் காயப்படுத்தியுள்ளார்.இப்படியான பேச்சுக்களை பெரும் பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவரது வாய்களில் இருந்து கூட அவதானிக்க முடியவில்லை.இப்படியான ஒருவருக்கு வாக்களித்த முஸ்லிம் மக்கள் ஒவ்வொருவரும் தவறான பிரதிநிதியை தெரிவு  செய்ததற்காக வேண்டி இறைவனிடம் எவ்வாறு பதில் சொல்லப் போகிறார்கள்? தனக்கு வாக்களித்த மக்களை அல்லாஹ்வின் கேள்விக்கு பதில் அளிக்க முடியாத நிலைக்கு தள்ளிய பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம் மன்சூர் அந்த மக்களிடம் உடனடியாக மன்னிப்பு கோர வேண்டும்.

இவர் கதைத்த வீடியோ பகிரங்கமாக வெளியாகியிருந்தும் அதனை நம்ப மறுக்கு அப்பாவி முஸ்லிம் கொங்கிரஸ் போராளிகளைப் பார்த்து பரிதாபம் வருகின்றதே தவிர கோபம் வரவில்லை.இதனை மறுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம் மன்சூரைப் பார்த்து அழுவதா? சிரிப்பதா? எனத் தெரியவில்லை.மக்களை மடையனாக்கும் அரசியல் வியாபாரம் செய்வதில் முஸ்லிம் கொங்கிரசை சேர்ந்தவர்கள் கில்லாடிகலென்பதை மக்கள் நன்கு அறிந்துகொண்டனர்.

அமைச்சர் றிஷாத் சம்மாந்துறையில் கைத் தொழில் பேட்டையை அமைக்க வேண்டி முயற்சித்த போது சாரனை உயர்த்தி கட்டி போராடி வெற்றி பெற்ற மன்சூரிற்கு சிலை விடயத்தில் வெற்றி பெற முடியவில்லை.முஸ்லிம் மக்களுக்கு நலவை கொண்டுவருவதை தடுக்கின்றார்.கெடுதியை உண்டாக்குவதை அனுமதிக்கின்றார்.வைத்ததை தடுக்க முடியவில்லை.அதனை அகற்றவாவது திடகங்கத்துடன் உறுதி பூண்டு முயற்சிக்கலாம் அல்லவா? அவர் இது தொடர்பில் வழங்கியுள்ள பேட்டியின் இறுதியில் தேவைப்பட்டால் இச் சிலையை அகற்றுவதற்கு முன்னின்று உழைக்க சித்தமாகவுள்ளேன் எனக் கூறியுள்ளார்.தேவையென்றால் எனும் வார்த்தை இங்கு மிகவும் அவதானமாக பார்க்க வேண்டிய ஒரு வார்த்தையாகும்.அதாவது இச் சிலையை அகற்ற வேண்டிய தேவையை இன்னும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம் மன்சூர் உணரவில்லை என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

அண்மையில் அவர் படம் காட்டிய நீர்பாசன அபிவிருத்தி நிகழ்வுகள் ஒவ்வொரு வருடமும் குறித்த அமைச்சிடமிருந்து ஒதுக்கப்படும் நிதியாகும்.இதனை இவர் கொண்டு வந்ததாக மக்களை நம்ப வைத்து தனது மதிப்பை நிலை நிறுத்த முயற்சித்தார்.இதனை இல்லையென பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம் மன்சூரால் மறுக்க முடியுமா? அவர் அடிக்கல் நாட்டிய ஹமீடியாஸ் நிறுவனத்தின் ஆடைத் தொழிற்சாலை வேலைகளை காணவில்லை.அவர் நாட்டிய அடிக்கல் எதுவும் இன்று கட்டடமாய் முளைக்கவில்லை.

பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம் மன்சூர் அவர்களே!

நீங்கள் நல்லது செய்யாது போனாலும் அதனை தடுக்க வேண்டாம்.கெடுதிக்கு துணை போகவும் வேண்டாமென ஒரு மக்கள் தொண்டனாய் கேட்டுக்கொள்கிறேன்.

இப்றாஹிம் மன்சூர்
ஆசிரியர்
கிண்ணியா

7 கருத்துரைகள்:

The minister must be interrogated by Muslim ulamas in Sammanthurai in front of public.
Had he found with guilty he should be sacked and the SLMC should be dissolved.

ithu ummaiyaka irunthal masoorukku pee mutti adikkanum all muslim ummakkalum

I do not see any remarks from Hon Mansoor that is derogatory of Islam or Muslim.

Act as per the Teachings of ISLAM, follow the SHAREEA and Do not follow DESIRES of you to punish a one for his crime or mistake using laws other than what Islam has permitted.

EMOTIONAL is Not the WAY of ISLAM.

May Allah Guide us in the way of SALAF us SALIHEENS.

He has conspired to be given a ministerial list with portfolio from next natiinal list. Using this opportunity he has ensured his seat in the next parliament as he knows he will not be elected by public vote in the future elections.This is his political intelligence and betrayal of Sri Lankan Muslims as all the Muslim politicians use and used to do.

இது உண்மையானால் அந்த வீடியோவை பதிவுசெய்யுங்கள்

Jaffna Muslim
Jaffna Muslim - Sri Lanka Muslim News, World Muslim News
November 09, 2016
புத்­தர்­சிலை வைப்­பதா­னால் நானும் பணம் கொடுத்து, "சாது" "சாது" எனக் கூறுவேன் - தயா­க­மகே

மாணிக்­க­மடு மலையில் புத்­தர்­சிலை வைத்­தது பற்றி எனக்குத் தெரி­யாது. இந்­நாட்டில் புத்தர் சிலை அமைக்க முடி­யாது என்று எவ­ருக்கும் கூற­மு­டி­யாது. இதற்­காக சண்டை பிடிக்­கா­தீர்கள்.

எங்கும் புத்­தர்­சிலை வைப்­ப­தனால் நானும் பணம் கொடுத்து "சாது" "சாது" எனக் கூறுவேன் என்று ஆரம்ப கைத்­தொழில் அமைச்சர் தயா­க­மகே தெரி­வித்தார்.

அம்­பாறை மாவட்ட ஒருங்­கி­ணைப்­புக்­குழுக் கூட்டம் மாவட்டச் செய­ல­கத்தில் நடை­பெற்­றது. அப்­போது மாணிக்­க­மடு மலையில் சிலை வைப்பு தொடர்­பாக அம்­பாறை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஜ.எம்.மன்சூர் கேள்­வி­யெ­ழுப்­பி­ய­போதே அமைச்சர் தயா­க­மகே இவ்­வாறு கூறினார். அமைச்சர் தயா­க­மகே அங்கு தொடர்ந்தும் விளக்­க­ம­ளிக்­கையில்;

மாணிக்­க­மடு மலையில் புத்­தர்­சிலை வைத்­தி­ருப்­பது பற்றி இப்­போது தான் நான் அறி­கிறேன். நாட்டில் ஒரு நாளைக்கு 100க்கு மேற்­பட்ட புத்­தர்­சி­லைகள் பன்­ச­லை­க­ளிலும் மற்றும் இடங்­க­ளிலும் வைக்­கப்­ப­டு­கின்­றன.
தமிழ் கட்­சிகள், முஸ்­லிம்கள், கிறிஸ்­தவ மத தலை­வர்கள் பௌத்த மதத்­துக்கு முத­லிடம் வழங்க வேண்­டு­மெனக் கூறி­யுள்­ளார்கள். அமைச்­ச­ரவை, பிர­தமர் ரணில் அனை­வரும் இதனை அங்­கீ­க­ரித்­தி­ருக்­கி­றார்கள்.
வர­லாற்றில் தீக­வாபி பன்­ச­லைக்கு 12 ஆயிரம் ஏக்கர் காணி சொந்­த­மாக இருந்­த­தாக கூறப்­ப­டு­கி­றது. அவ்­வா­றென்றால் கல்­முனை, பொத்­துவில் எல்லாம் தீக­வாபி பன்­ச­லைக்கே சொந்தம்.
எமது நாட்டின் காடு­களிலும் பாகிஸ்­தா­னிலும் நிலத்தை அகழ்ந்தால் அங்கும் புத்தர் சிலை­களே கிடைக்­கின்­றன. நான் கடந்த வாரம் பாகிஸ்­தா­னுக்குச் சென்­றி­ருந்தேன். பாகிஸ்தான் முஸ்­லிம்கள் புத்தர் சிலை­களைப் பாது­காக்­கின்­றார்கள். நீங்கள் இங்கு புத்­தர்­சி­லைக்­காக சண்டை பிடிக்­கின்­றீர்கள்.
இடையில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மன்சூர் குறுக்­கிட்டார். புத்­தர்­சிலை வைக்­கின்­றீர்கள் வணங்­கு­வ­தற்கு மக்கள் இல்­லையே என்றார். "சாது","சாது" என்று கூறி மக்கள் வரு­வார்கள் என்று அமைச்சர் தயா­க­மகே பதி­ல­ளித்தார்.
தாது கோபுரம் அமைப்பதற்கு நான் 135 சீமெந்து மூடைகளை வழங்கியிருக்கிறேன். இந்நாட்டின் அரசியல் யாப்பில் பௌத்தத்துக்கே முதலிடம் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

- யூ.எல்.றியாஸ் -
Jaffna Muslim நேரம் Wednesday, November 09, 2016

Post a Comment