November 01, 2016

பைசர் முஸ்தபாவைக் கைது செய்ய வேண்டும், தப்லீக் ஜமாத் காணிகளை கொள்ளையடிக்கிறது

(ஏ.ஆர்.ஏ.பரீல்)

ஐக்கிய அரபு இராச்சியம், கட்டார் மற்றும் அபுதாபி போன்ற நாடுகள் உட்பட மத்திய கிழக்கு நாடுகள் இலங்கையில் காணிகளை கொள்வனவு செய்து, ஹோட்டல்கள் நிறுவி முஸ்லிம் குடியேற்றங்களையும் பள்ளிவாசல்களையும் நிறுவுவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இதன் பின்னணியிலிருந்து செயற்படும் அமைச்சர் பைசர் முஸ்தபாவைக் கைது செய்து இது தொடர்பில் விசாரணை செய்யப்பட வேண்டும், அவரது அமைச்சுப் பதவியை பிரதமர் ரத்துச் செய்ய வேண்டும் என பொதுபல சேனா அமைப்பு கோரியுள்ளது.

அம்பகமுவ பிரதேச சபை பிரிவில் நல்லதண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மரே கிராம சேவையாளர் பிரிவு பிக்பீல்ட் தோட்டத்தில் ஹோட்டல் ஒன்று நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக விமான ஓடுதளமும் களஞ்சியசாலையும் நிறுவப்பட்டுள்ளது. அபுதாபி நிறுவனம் ஒன்று நிர்மாணிக்கவுள்ள ஹோட்டலை உடன்நிறுத்தும்படியும் கோரிக்கை விடுத்துள்ளது.

 கொழும்பு கிருலப்பனை பௌத்த மத்திய நிலையத்தில் இன்று நடைபெற்ற பொதுபலசேனா அமைப்பின் ஊடக மாநாட்டில் பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே இவ்வேண்டுகோளை முன்வைத்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

'எமது நாட்டின் நகர்ப்புறக் காணிகளும் தப்லீக் எனும் முஸ்லிம்களின் அமைப்பினால் ஆக்கிரமிப்புச் செய்யப்பட்டு வருகின்றன. 

இது ஆபத்தான விடயமாகும். தினமும் நகர்புறங்களில் 10 ஏக்கர் காணிவீதம் ஆக்கிரமிப்புச் செய்வதற்கு திட்டமிட்டு செயற்படுத்தப்படுகிறது. 

இது தப்லீக் அமைப்பின் காணி கொள்ளையடிப்பாகும். 

புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் ஆயுதமேந்தி நிலத்தை அபகரிக்க முயற்சித்தார். ஆனால் அதே வேலையை தப்லீக் அமைப்பு நகர்ப்புற காணிகளின் பெறுமதியை விட 10 மடங்கு பணம் செலுத்தி அபகரிப்புச் செய்கிறது.
வஹாபிசத்தைப் பரப்பும் ஒரு சிறு குழுவினரே இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

15 கருத்துரைகள்:

இவன் இன்னும் உசுரோடே இருக்கிறானா!!

மேற்படியான் கன நாளைக்கு பிறகு...

Kuritha perumathiyai vida pala madanku panam kuduthu vaankuvarkal intha selvantharkal... pawam poor tamil & Sinhalese

இந்த பைத்தியகாரனின் கட்டுக்கதைகளை தயவுசெய்து இந்த இணையத்தளத்தில் பிரசுரிக்க வேண்டாம். கட்டுக்கதைகளைப் பரப்புவது கட்டுக்கதைகளைப்பிரசுரம் செய்வது இரண்டும் அல்லாஹ்விடம் ஒரே குற்றம்தான். அதனை அல்குர்ஆன் பின்வருமாறு எச்சரிக்கின்றது. 49:6. முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரியுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப்படுவீர்கள்.

அடே அடி முட்டால் தப்லிக் ஜமாஅத்துக்கும் சில மடையர்களால் சொல்லப்படும் வஹாபிசம் என்று சொல்லும் ஏக தவ்ஹீத் கொள்கைவாதிகளுக்கும் ஜெம்மப் பகை இது கூட இவனுக்கு தெரியாது உளர்றான்.

ஞானஷார உனக்கு ஞானம் பொரந்திச்சிடா
(பலநாள் கள்ளன் ஒரு நாள் அகப்படுவான்)

Internet reader

Tamil theeviravaazam innum sahallappa

ஒரு மதகுருவை ஏன் இப்படி திட்டுவது (verbal abuse) சரியல்ல.

சிங்களவர்களை குஷிபடுத நீங்கள் ஜெனிவா தீர்மாணங்கள், வட-கிழக்கு இணைப்பு ஆகியவற்றை எதிர்த்தாலும், உங்களால் தான் நாட்டிற்கு ஆபத்து என்கிறார்கள்.

ஏன்?

இந்த காணியை விற்றவன் பசில் இதனால் அவனை காப்பாற்ற இந்த தெரு நாய் பைசர் முஸ்தபா மீது பழியை போட்டு விஷயத்தை மாற்ற பார்க்கின்றான் . உடனடியாக பைசர் முஸ்தபா ஊடக சந்திப்பொன்றை நடாத்தி ஆதாரங்களோடு இதை தெளிவுபடுத்த வேண்டும். ஜப்னா இணையதளம் பைசர் முஸ்தபா இதற்கான மறுப்பை வெளியிட வேண்டும் என்று சமுதாய நலனை கருத்தில் கொண்டு ஒரு செய்தி வெளியிடுங்கள்

உண்மைகள் வெளியாகும் இதுதான்

ஏனென்றால், பிரபாகரனும், ஜெனீவாவும் உம்மைப்போண்ற குளப்பத்தை உருவாக்கும் யெஹூதி, நஸாராக்களின் வாரிசுகளும் உம்மரியாதைக்குரிய இந்த குருவும் சமகருத்துடைய குளப்பவாதிகளே ....

யாவரின்கருத்துக்களும் மட்டரக சமமானசிந்தனயுடன், முஸ்லீம்களை நோக்கியே பாய்கிண்றன....

Brother ithu theeviravatham illa. Unmai. But ithil muslim makkalai kurai solla mudiyathu. Panam koduthu thane vankukirarkal

தூக்கத்தில் உலருபவனுக்கு ஏனப்பா இவ்வலவு பதில் சொல்லி கஷ்டப்படனும் ?

தூக்கத்தில் அல்ல, ஒருவகைப் போதையில் கூறுபவை

போதையில் சொன்னாலும் சிறிய ஒரு அர்த்தம் காணலாம் தூக்கத்தில் உலரும் இவனின் பேச்சுக்கு என்ன அர்த்தம் இருக்கும் ?????/

Post a Comment