November 23, 2016

BBS முன்வைத்த 22 கோரிக்கைகள் - 14 நாட்களுக்குள் தீர்வில்லையேல் நிலைமை மோசமாகும் - ஞான­சார

பெளத்த மதத்­துக்கும், பெளத்த கலா­சா­ரத்­துக்கும் சவால்கள் ஏற்­பட்­டுள்­ளதால் சிங்­கள  இளை­ஞர்கள் கொதிப்­ப­டைந்­துள்­ளார்கள். அவர்­களை நாம்  சமா­தா­னப்­ப­டுத்தி எமது கட்­டுப்­பாட்டில் வைத்­துள்ளோம். சங்க பாது­காப்புச் சபையின் கோரிக்­கை­க­ளுக்கு 14 நாட்­க­ளுக்குள் தீர்வு கிடைக்­கா­விட்டால் எமது கட்­டுப்­பாட்­டி­லி­ருந்து அவர்­களை நாம் விடு­வித்­து­வி­டுவோம். அதன் பிறகு நாட்­டிற்குள்  ஏதும் அசம்­பா­வி­தங்கள் நடந்தால் நாம் பொறுப்­பல்ல.

மகா­நா­யக்க தேரர்­களே பொறுப்­புக்­கூற வேண்டும் என பொது­ப­ல­சே­னாவின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் மல்­வத்த மகா­நா­யக்க தேரர் திப்­பட்­டு­வாவே   ஸ்ரீ சுமங்­கல தேர­ரிடம் வேண்­டுகோள் விடுத்தார்.  மல்­வத்த மகா­நா­யக்க தேர­ரிடம் 22 கோரிக்­கைகள் அடங்­கிய மகஜர் ஒன்றும் கைய­ளிக்­கப்­பட்­டது. மக­ஜரை  மகா­நா­யக்க தேர­ரிடம் கைய­ளித்து ஞான­சார தேரர் மேற்­கு­றிப்­பிட்ட வேண்­டு­கோளை விடுத்தார். 

கைய­ளிக்­கப்­பட்ட 22 கோரிக்­கைகள் அடங்­கிய மக­ஜரில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, 

நாட்டில்  புதை­பொருள் ஆய்வுப் பிர­தே­சங்­க­ளி­லி­ருந்தும், புனித பூமி பிர­தே­சங்­க­ளி­லி­ருந்தும் குடி­யி­ருப்­பு­களும், பள்­ளி­வா­சல்­களும் அப்­பு­றப்­ப­டுத்­தப்­பட வேண்டும்.

எந்த மதத்­த­வர்­க­ளாக இருந்­தாலும் அவர்கள் அப்­பு­றப்­ப­டுத்­தப்­பட்டு புதை­பொருள் பிர­தே­சங்கள் பாது­காக்­கப்­ப­ட­வேண்டும். 

மத்­ர­ஸாக்­க­ளிலும், அரபு கல்­லூ­ரி­க­ளிலும் அடிப்­படை வாதம் போதிக்­கப்­ப­டு­கி­றது. எனவே இவ்­வா­றான மத்­ர­ஸாக்­களும், அரபு கல்­லூ­ரி­களும்  தடை செய்­யப்­ப­டு­வ­துடன்  ஏனைய மதத்­த­வர்­க­ளுக்கு சட்­டமும், நாட்டின்  வர­லாறும்  போதிக்கும் பாட­சா­லைகள் நிறு­வப்­ப­ட­வேண்டும். 

வடக்கு, கிழக்கில் உள்ள பெளத்த மர­பு­ரிமை ஸ்தலங்­களும், வர­லாற்றுத் தலங்­களும் அர­சாங்க வர்த்­த­­மானி மூலம்  புனி­த­த­ல­மாக பிர­க­ட­னப்­ப­டுத்தி பாது­காக்­கப்­ப­ட­வேண்டும். 

எந்­த­வொரு கிராம அல்­லது நகர பாதைகள் அரபு, முஸ்லிம், தமிழ்  பெயர்­களில் இருக்­கக்­கூ­டாது. அனைத்தும் சிங்­கள மொழிக்கு  மாற்­றப்­ப­ட­வேண்டும்.

பெயர் மாற்­றப்­பட்ட பாதை­களின் பெயர்­க­ளுக்கு மீண்டும் பழைய  பெயர்­களே சூட்­டப்­ப­ட­வேண்டும். மத­மாற்றம் தடை­செய்­யப்­ப­ட­வேண்டும்.

அதற்­கான  சட்­ட­மொன்று கொண்­டு­வ­ரப்­ப­ட­வேண்டும்.

பாட­சாலைப் புத்­த­கங்­களில் வர­லாறு  திரி­பு­ப­டுத்­தப்­பட்­டு­வ­ரு­கி­றது. இது தடை­செய்­யப்­பட்டு திருத்­தி­ய­மைக்­கப்­ப­ட­வேண்டும். 

கூர­கல, தெவ­ன­கல மற்றும் முகு­து­வி­காரை போன்ற பெளத்த மர­பு­ரிமைத் தலங்கள் முஸ்­லிம்­க­ளி­ட­மி­ருந்து மீட்­கப்­பட்டு பாது­காக்­கப்­ப­ட­வேண்டும். அரச சார்­பற்ற  நிறு­வ­னங்­க­ளுக்கு கிடைக்­கப்­பெறும் நிதியுத­விகள் அடிப்­ப­டை­வா­தி­களைச் சென்­ற­டை­கின்­றன.

இது­தொ­டர்­பாக கட்­டுப்­பா­டுகள் கொண்டு வரு­வ­துடன்  அவை கண்­கா­ணிக்­கப்­பட வேண்டும். வடக்கு, கிழக்கில்  சிங்­கள மக்கள் குடி­யேற்­றப்­பட வேண்டும். அத்­தோடு அப்­பி­ர­தே­சங்­களில் குடி­யே­றி­யுள்­ள­வர்­க­ளுக்கு அர­சாங்கம் உரிய பாது­காப்பு வழங்க வேண்டும். 

மாலை­தீவு மற்றும் பங்­க­ளாதேஷ், பாகிஸ்தான் போன்ற நாடு­களைச் சேர்ந்­த­வர்­க­ளுக்கு இலங்­கையில் அடைக்­கலம் வழங்­கவோ, பிர­ஜா­வு­ரிமை  வழங்­கவோ கூடாது. 

தமிழ், முஸ்லிம் கத்­தோ­லிக்க பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அவர்­க­ளது மத தலங்­களில் மாதம் ஒரு முறை  கூடி சமூ­கப்­பி­ரச்­சி­னைகள் தொடர்பில்  கலந்­து­ரை­யா­டு­கி­றார்கள்.

ஆனால் சிங்­கள பாரா­ளு­மன்ற உ றுப்­பி­னர்கள் இவ்­வாறு செயற்­ப­டு­வ­தில்லை. அதனால் மத­த­லங்­களில் மாதம் ஒரு முறை கூடு­வது  கட்­டா­ய­மாக்­கப்­ப­ட­வேண்டும். 

பெளத்த மதத்­துக்கு முதலிடம் வழங்கப்படுவதோடு இலங்கை சிங்களவர்களின் நாடு என்பது உறுதிப்படுத்தப்படவேண்டும். தஹம் (சமய) பாடசாலைக் கல்வி கட்டாயமாக்கப்பட வேண்டும்.  பரீட்சை  எழுதுவதும்  கட்டாயமாக்கப்படவேண்டும். ஞாயிறு  மற்றும் போயா தினங்களில் டியுசன் தடைசெய்யப்படவேண்டும் என்பனவாகும். 

மகாநாயக்க தேரர்கள்  இந்தக் கோரிக்கைகள் தொடர்பாக ஜனாதிபதி  மற்றும் பிரதமரை  அழைத்து பேச்சுவார்த்தை நடாத்தி தீர்வுகள் வழங்குமாறு  கோரப்பட்டுள்ளது. 

13 கருத்துரைகள்:

This conditions from exact GOTHAPAYA RAJAPAKSHA

இவ்வாறே இஸ்லாமிய பெயர்களையும் தடை செய்ய சொல்லுவாரோ?

இவன் பௌத்தனுக்கு அறிக்கை விடுகிறானா முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக்கும் அறிக்கை விடுகிறானா?
இயக்கவெறிக்கூட்டம் இதுவும் SLTJ தான் BBS இற்கு சொல்லிக்கொடுத்தது என்று சொன்னாலும் சொல்லுவார்கள்.

OH .MUSLIMS BROS AND SISTRS,,,,

இந்த காவி ரௌடி சார சொல்றான் பாகிஸ்தான் நாட்டினரை தடை செய்ய.............
ஆனா இவனின் தலைவன் மகிந்த சொல்றார் ', லங்காவுக்கு யுத்தத்தில் வெற்றி பெற பாகிஸ்தான் செய்த உதவியை மறக்க முடியாது.. எப்போதும் நன்றி உள்ளவராக இருப்பன்;; என்று..

பயங்கர யுத்தத்தைத்த வென்றெடுத்த சரத் பொன்சேகா சொல்றார் ''யுத்த உக்கிரமான , கடைசி நிமிசத்தில் பாகிஸ்தான் தான் பல் ஆயிரக்கணக்கான துப்பாக்கி BULLETS தந்து உதவியது '' என்று.........

இந்த புத்த வெறியனுக்குக் ஓன்று ஹிதாயத் கிடைக்க நாம உள்ளத்தால் து ஆ செய்யணும்.......அல்லது
, பயங்கரவாதி பிரபாகரன் அழிய , மண்ணோடு மண்ணாக போக , நாம் செய்த , நமது ஒவ்வொரு தாய்மாரும் செய்த து ஆ மாதிரி , இந்த புத்த மத வெறியன் சார அழிந்து போக து ஆ செய்யணும்..

இப்போதைக்கு இந்த து ஆ தான் ஆயுதம்.....
செய்யுங்கள் முஸ்லீம் சமூகமே......
அல்லாஹ் நம் முன் காட்டுவான்........

எம் சமூகம் ஏதோ நடக்கின்றது நடக்கட்டும் எல்லாம் இழந்த பின் யார்யரோ சப்தம் போட்டு சமாதானப்படுத்த வெளியாகுவார்கள்,இது தான் இஸ்லாம் என்பவர்களும் உள்ளார்கள்,அதனால் சண்டை பிடிக்கச் சொல்லவில்லை ,கொஞ்சம் அவதானம் தேவை,

As we are Muslims, we should be ready to face the racism and problems by technically using our mind evidenced by Quran and sunnah. It's Better to be patient and keeping love with every communities in this occasion. This is the time to make stronger our Eeman. Most of the time our eeman is delicate. We are not with pure eeman. That's why Allah is testing sometimes by such kafirs. Lets understand. Let's make our eeman stronger. Let's pray. Let's give sakath. Let's love the people. Let's do social works. Let's avoid fithnas. Let's avoid stupidity.

The future for Muslims including Sri Lankans will be very hard to Alive peacefully because the kafirs are united in every aspects to destroy us. But they don't know how strong our spirit.
They can destroy our masjids, houses and they can kill us at least but they cannot destroy our spirit as we are follower of Allah and prophet pbuh.

So, there is no use to blame each other but there is useful if we are united as Muslims to be patient. Allah is with who have patience.

I remember Hudaibia agreement with kafirs. Our prophet let them to do what ever they mentioned in the agreement and he was with patience. Finally Allah turned the victory to Muslims. So will leave this matters to Allah. Allah will solve. Time will come.

Let the bbs what ever they want. They will be tired one day. We will face it technically by using our mind evidence by Quran and sunnah.

We will be patient and let's unite as Muslims.

அப்படியே அரபு தேசங்களில் இருந்து பெறப்பட்ட கொடைகள் அனைத்தும் திருப்பி தரபட வேண்டும்.

அரபு நாடுகளோடு உள்ள வியாபார தொடரபுகளை அடியோடு நிறுத்திட வேண்டும்.

அரபு நாடுகளில் பணிபுரியம் சிங்கள மக்கள் உடனடியாக நாடு திரும்ப வேண்டும்...

இதையும் சேத்து சொல்ல வேண்டியது தானே.

அடே லூச நாங்கள் கத்தன செய்வதைப்பற்றிதான் நீ இன்னும் எதுவும் சொல்லவில்லை.

They are asking the government to go back to the stone age!

@ahmed Mohamed correctly said.

These insanes represent only a negligible number of the minority. They must be sent to a good psychiatrists.

பொருமையை கொன்டும் தொழுகையை கொண்டும் உதவி தேடுங்கள் நிச்சயம் உதவிகிடைக்கும்

Post a Comment