Header Ads



மோட்டார் சைக்கிளுக்கு தவணைப் பணம் செலுத்த, 7 யுவதிகளின் தொலைபேசிகள் கொள்ளை

(ரெ.கிறிஷ்­ணகாந்)

தனது மோட்டார் சைக்­கி­ளுக்கு தவ ணைப் பணம் செலுத்­து­வ­தற்­காக வீதியில் சென்­று கொண்­டி­ருந்த மருத்­துவ கல்­லூரி மாணவி உட்­பட ஏழு யுவ­தி­களின் கைத் ­தொ­லை­பே­சி­களை கொள்­ளை­யிட்டு பல்­வேறு நபர்­க­ளுக்கு விற்பனை செய்த சந்­தேக நபர் ஒரு­வரை கைது செய்­துள்­ள­தாக அநு­ரா­த­புரம் பொலிஸ் தலை­மை­யக குற்றப் பிரி­வினர் தெரி­வித்­துள்­ளனர்.

ரஜ­ரட்ட பல்­க­லைக்­க­ழக மருத்­து­வ­பீட மாணவி, அநு­ரா­த­புரம் தாதியா் பயிற்சி கல்­லூ­ரியில் பயிற்சி பெறும் மாண­விகள் இருவர், ஆடைத்­தொ­ழிற்­சாலை ஒன்றின் பணி புரியும் பெண்­ணொ­ருவர் ஆகியோர் உள்­ள­டங்­க­ளாக எழு­வ­ரினால் மேற்­கொள்­ளப்­பட்ட முறைப்­பாட்­டுக்­க­மைய சுமார் ஒரு­ மா­த­கா­ல­மாக  முன்­னெ­டுக்­கப்­பட்ட  விசா­ர­ணை­களின் மூலம் கற்­குளம் பகு­தியில் வைத்து குறித்த சந்­தேக நபர் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

சந்­தேக நபர் நவீ­ன­ரக மோட்டார் சைக்­கி­ளொன்றில் வந்து, கைத்­தொ­லை
பே­சியில் உரை­யா­டிக்­கொண்டு வீதியில் செல்லும் யுவ­தி­களை வழி­ம­றித்து, வீதியில் முறை­யாக நடந்து செல்ல தெரி­யாதா? என கேட்­ட­வாறு அவர்­களை திட்­டு­வதை போன்று அவர்­க­ளி­ட­மி­ருந்து கைத்­தொ­லை­பே­சி­களை பறித்துச் சென்­றுள்­ள­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

இரு­ப­தா­யிரம் மற்றும் முப்­ப­தா­யிரம் ரூபா­வுக்­கி­டைப்­பட்ட பெறு­ம­தி­யு­டைய கைத்­தொ­லை­பே­சிகள் சந்­தேக நப­ரினால் கொள்­ளை­யி­டப்­பட்­டுள்­ள­துடன் இவற்றின் மொத்தப் பெறு­மதி 2 இலட்சம் ரூபா­வுக்கும் அதிகம் எனவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

தான் தவ­ணைக்­கட்­டண அடிப்­ப­டையில் பெற்றுக் கொண்ட மோட்­டார்­சைக்­கி­ளுக்கு தவ­ணைப்­பணம் செலுத்த இய­லாமல் போன­மை­யினால் அதற்­கான பணத்­தினை திரட்­டிக்­கொள்ளும் நோக்­கி­லேயே இவ்­வாறு குறித்த கைத்­தொ­லை­பே­சி­களை கொள்­ளை­யிட்­ட­தாக சந்­தே­க­நபர் பொலி­ஸா­ரிடம் வாக்­கு­மூலம் வழங்­கி­யுள்ளார்.

கைது செய்­யப்­பட்ட சந்­தேக நபர் 21 வய­தான திரு­ம­ண­மான ஒருவர் எனவும் அவர் அநுராதபுரம் நீதிவான் மன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 16 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறும், அன்றைய தினம் சந்தேக நபரை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறும் உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.