Header Ads



தாருத் தக்வா மகளிர் அரபுக் கல்லூரியின் 3 வது பட்டமளிப்பு விழா

அல்ஹம்துலில்லாஹ்! இயற்கை எழில் கொஞ்சும் இலங்கையின் மலையகத்தின் அறிவுக் களஞ்சியமான கலையகம் என்று வர்ணிக்கப்படும் கல்ஹின்னையின் நீண்ட கால கனவுதான் இந்த தாருத் தக்வா மகளிர் அரபுக் கல்லூரி. அல்லாஹ்வின் மாபெரும் கருணையால் இம் மகளிர் அரபுக் கல்லூரியின் முன்னேற்றப் பாதையில் மூன்றாவது பட்டமளிப்பு விழா
13-11-2016ல்  நடைபெறவிருக்கிறது 

இப்பட்டமளிப்பு விழாவுக்கு விசேட அதிதியாக  எகிப்தில் அமைந்திருக்கும் அல் அஸ்ஹர் பல்கலைக் கழகத்தைச்  சேர்ந்த அஷ்செய்க் ஸமீர் அப்துல் ஹலீம் ஸைத்; (அல் அஸ்ஹரி) அவர்களும் விசேட பேச்சாளராக ஜாமிஅத்துல் பத்தாஹ் அரபுக் கல்லூரி அதிபர் அஷ்செய்க் ரஸான்(அல் ஹஸனி) அவர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள். மேலும் இவ்விழாவில் பங்கு கொள்ள கண்ணிய மிக்க உலமாக்களும் முக்கியஸ்த்தர்களும்  பெற்றோர்களும் ஊர் மக்களும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். 

அத்துடன் இக் கல்லூரியின் தலைவர் அல்ஹாஜ் அமானுல்லா கமால்தீன் அவர்கள் லன்டனிலிருந்து இவ்விமாவில் பங்கு கொண்டு சிறப்பிற்பதற்காக வருகை தர இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  

இது 1967ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு நூற்றுக்கணக்கான மாணவர்கள் இந்த மத்ரஸாவில் சேர்ந்து குர்ஆனையும், இஸ்லாத்தையும் கற்றுக் கொண்டார்கள்.  1993ஆம் ஆண்டில் இந்த மத்ரஸா இலங்கை அரசினால் ஓரு இஸ்லாமிய மார்க்கப் பாடசாலையாக பதியப்பட்டதைத் தொடர்ந்து அதில் பகுதி நேர ஹிப்ழ் வகுப்பு நடாத்தப்பட்டு வந்தது. 2008ஆம் ஆண்டு ஷரீஆ பிரிவு ஆரம்பிக்கப்பட்டதுடன் அத்தோடு ஹிப்ழ் பிரிவும் ஆரம்பிக்கப்பட்டது. 

இக் கல்லூரியில் 'அல்ஆலிமா' பட்டப் படிப்புக்கான காலம் ஐந்து வருடங்களைக் கொண்டதாகும். இக்காலப்பகுதிக்குள் தலைசிறந்த உலமாக்களால் இக்கல்லூரிக்கென வகுக்கப்பட்ட பாட நெறியில்; போதிக்கப்படுகிறது. இஸ்லாமிய கற்கையில் ஊர் பெண்களின் தேட்டத்தை கருத்திற்கொண்டு தஜ்வீத், பிக்ஹு, ஹஜ் கருத்தரங்கு போன்ற மார்க்க அடிப்படை விடயங்களில் அவர்களுக்கான வாராந்த வகுப்புகளை தற்காலத்திக்கு ஏற்ப நவீன கற்றல் உபகரணங்களை பயன்படுத்தி வழங்கி வருகிறது. பெண்களுக்கான மாதாந்த தர்பிய்யா பயான் நிகழ்ச்சியை நாட்டின் பல பகுதிகளையும் சேர்ந்த பிரசித்தி பெற்ற உலமாக்கள் மூலம் நடாத்தி வருகின்றது. இந்நிகழ்ச்சியில்  நூற்றுக் கணக்கான பெண்கள் கலந்து பயன் பெருவது குறிப்பிடத்தக்கது.

பாடசாலைக் கல்வியை முடித்த பெண்களுக்கான தஜ்வீத், பிக்ஹு போன்ற கற்கைகளை உள்ளடக்கிய ஆறு மாதகால கற்கை நெறியை ஆரம்பித்தல். பெண்களுக்கு அடிப்படைக் கணனி அறிவைக் கற்றுக் கொடுத்தல.; மாணவிகளுக்கு மனையியல், சமையற் கலை, தையற்; கலை, போன்றவற்றைக் கற்பித்தல். சகல நவீன தொழில் நுட்ப வசதிகளை உள்ளடக்கிய பெண்கள் நூல் நிலையமொன்றை அமைத்தல.; படித்து விட்டு திருமணத்திற்கு தயாராகும் யுவதிகளுக்கு குடும்ப வாழ்வை ஆரம்பிப்பதற்கு  வாழ்கைத் துணைக் கல்வியை போதிக்க ஏற்பாடு செய்தல். குர்ஆன், பிக்ஹ், அரபு மொழி, ஹதீஸ் போன்றவற்றை சிறு வயதிலே கற்றுக் கொடுக்கும் 'மக்தப்' முறையை அறிமுகப்படுத்தி கற்றுக்கொடுத்தல.;  முஸ்லிம் மருத்துவச்சி, முஸ்லிம் தாதிமார் பயிற்சி, பெண் ஜனாஸாக்களைக் குளிப்பாட்டுவதற்கான பயிற்சிகள், ஹஜ், தஃவா கொடுத்தல் போன்ற பல மார்க்க விடயங்களுக்கு பயிற்சி வகுப்புகளை நடாத்துதல.; இஸ்லாமிய சிறுமிகளுக்கென பாடசாலை ஒன்றை அமைத்தல். 'அத்தக்வா' என்ற பெயரில் பெண்களுக்கான இஸ்லாமிய சஞ்சிகையொன்றை வெளியிடுதல.; திறமையான மாணவிகளுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலுமுள்ள பல்கலைகழகங்களுக்கு புலமைப் பரிசில்களை வழங்கி இஸ்லாமிய உயர் கல்வியைப் போதித்து பெண் முப்திகளை உருவாக்குதல். உள்ளுர், வெளியூர் மாணவிகள் தங்கி தீனைக் கற்பதற்கு அவர்களுக்கென பாதுகாப்பான விடுதியொன்றை அமைத்து  மார்க்கக் கல்வி கற்பதற்கு வசதி செய்து கொடுத்தல் போன்ற விடயங்களை ஆரம்பிப்பதற்கு திட்டங்களை வகுத்து முன்னெடுக்கப்படுகிறது.  

தகவல்: 
குளோபல் தஃவா சேவை – லன்டன்.

No comments

Powered by Blogger.