Header Ads



மத்திய கிழக்குக்கு தொழிலுக்கு, செல்வோருக்கான சம்பளத்தை 300 டொலராக அதிகரிக்க நடவடிக்கை

மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலுக்கு செல்வோருக்கான சம்பளத்தை அதிகரிக்குமாறு இலங்கை அரசாங்கம் கோரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இதன்படி மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலுக்கு செல்வோருக்கான சம்பளத்தை 300 டொலராக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் விவசாய உற்பத்தி பொருட்களின் இறக்குமதி அதிகரித்துள்ள நிலையில், கைத்தொழில் மற்றும் வீட்டு நிர்மாணங்களுக்கான செலவுகளும் அதிகரித்துள்ளன.

எனவே, மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலுக்கு செல்வோருக்கான சம்பளத்தை அதிகரிக்க வேண்டி கோரிக்கை விடுக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. மத்திய கிழக்கின் பொருளாதாரம்,வெளிநாட்டுத் தொழிலாளர்களின் தற்போதைய நிலைமை,அந்நாட்டு அரசியல்,பொருளாதார,சமூக நிலைமைகள் பற்றிய எந்தவிதமான முன்னறிவும், தற்போது அந்த அரசுகள் மேற்கொண்டுவரும் வெளிநாட்டவர்களைத் துரிதமாக தொழிலில் இருந்து நீக்கும் நிலைப்பாடு போன்ற பாதகமான அம்சங்களுடன் ஒப்பிடும்போது மேலே மந்திரியவர்களுடைய 'வாக்குறுதி' வெரும் பசப்பு வார்த்தைகள் மட்டும்தான் என்பதை எமது ச கோதர ஊழியர்கள் நினைவில் வைத்துக் கொள்ளட்டும்.

    ReplyDelete
  2. மத்திய கிழக்கின் பொருளாதாரம்,வெளிநாட்டுத் தொழிலாளர்களின் தற்போதைய நிலைமை,அந்நாட்டு அரசியல்,பொருளாதார,சமூக நிலைமைகள் பற்றிய எந்தவிதமான முன்னறிவும் இன்றி, தற்போது அந்த அரசுகள் மேற்கொண்டுவரும் வெளிநாட்டவர்களைத் துரிதமாக தொழிலில் இருந்து நீக்கும் நிலைப்பாடு போன்ற பாதகமான அம்சங்களுடன் ஒப்பிடும்போது மேலே மந்திரியவர்களுடைய 'வாக்குறுதி' வெரும் பசப்பு வார்த்தைகள் மட்டும்தான் என்பதை எமது ச கோதர ஊழியர்கள் நினைவில் வைத்துக் கொள்ளட்டும்.

    ReplyDelete

Powered by Blogger.