Header Ads



உலகில் கேட்கப்படும் 2 முக்கிய கேள்விகள்

அமெரிக்க தேர்தலுக்கு பிறகு கூகுள் தேடலில் உலக பொதுமக்கள் இரண்டு கேள்விகளுக்கான பதில்களை மட்டுமே முக்கியமாக தேடி வருகின்றனர்.

அமெரிக்க தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ள நிலையில், சர்வதேச அளவில் ஒரு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்பிற்கு வாக்களித்தவர்கள் தவிர சர்வதேச அளவில் பெரும்பாலான மக்கள் இந்த வெற்றியை ஏற்பதாக தெரியவில்லை.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக கூகுள் நிறுவனம் சற்று முன்னர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், ‘கடந்த 24 மணி நேரத்தில் கூகுள் தேடலில்(Google search) ”How did" மற்றும் “Why did" என்ற இந்த இரண்டு வாசகங்கள் மட்டுமே அதிகளவில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

அதாவது, ‘How did Trump win?'(டிரம்ப் எப்படி வெற்றி பெற்றார்?) மற்றும் ‘Why did Hillary lose?'(ஹிலாரி எதனால் தோல்வி அடைந்தார்?) என்ற இந்த இரண்டு கேள்விகளை மட்டுமே அதிகளவில் எழுப்பி அதற்கான பதிலை தேடி வருகின்றனர்.

குறிப்பாக, How did Trump win? என்ற ஒரே கேள்வியை தான் அதிகளவில் கேட்டு வருவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

2

அமெரிக்காவில் இடம்பெற்ற 45 ஆவது ஜனாதிபதி தேர்தலில் அதிக வாக்குகளை பெற்ற ஹிலாரி கிளின்டன் தேர்தலில் தோல்வியடைந்துள்ளமை அந்நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.
ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஹிலாரி கிளின்டன் 5 கோடியே 99 இலட்சத்து 26 ஆயிரத்து 386 வாக்குகளை பெற்று 47.7 வீதத்தில் 232 தேர்தல் வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளார்.
இதேவேளை, ஹிலாரி கிளின்டனை எதிர்த்து குடியரசுக் கட்சியின் சார்பாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 5 கோடியே 96 இலட்சத்து 98 ஆயிரத்து 506 வாக்குகளை பெற்று 47.5 வீதத்தில் 290 தேர்தல் வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளார்.
குறித்த தேர்தலில் ஹிலாரி கிளின்டன், டொனால்ட் டிரம்பினை விட 2 இலட்சத்து  27 ஆயிரத்து 880 வாக்குகள் அதிகம் பெற்றிருந்தாலும் தேர்தல் வாக்குகளில் டிரம்பினை விட குறைவாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
51 மாநிலங்களில் நடத்தப்பட்ட தேர்தல் வாக்கெடுப்பில் தற்போது வரை வெளியாகியுள்ள 50 மாநிலங்களின் முடிவுகளில் 29 மாநிலங்களிலும் வெற்றிக்கண்ட டொனால்ட் டிரம்ப், தேர்தல் முடிவுகள் வெளிவரவுள்ள மிச்சிகன் மாநிலத்திலும் முன்னிலையில் உள்ளார்.மேலும் வெளியாகியுள்ள 50 மாநிலங்களின் முடிவுகளில் 21 மாநிலங்களில் மட்டுமே ஹிலாரி கிளின்டன் வெற்றிக்கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

1 comment:

  1. There is no priority to the people selection at USA. Is this democracy?

    ReplyDelete

Powered by Blogger.