November 04, 2016

21 முஸ்லிம் எம்.பி.க்களும் நினைத்தால், நாளைகூட ஆட்சியைக் கவிழ்க்கலாம்...!

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம்களின் பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் பேசமாட்டார்களா? என்று 'பாராளுமன்றம்' ஏங்கித்தவமிருக்கிருக்கின்றது. சில முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் குரல் எவ்வாறு இருக்கும்? என்று காது குளிர கேட்டுவிடவேண்டும், என்பது 'பாராளுமன்றத்தின் நீண்ட நாள் ஆசை'.என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட்         தெரிவித்துள்ளார்.

இறக்காமத்தில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தனது கண்டனத்தைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடும்போது, 

அண்மையில் இலங்கைக்கான புதிய பொருளாதாரத்திற்கான திட்டத்தை சமர்ப்பித்து பிரதமர் பாராளுமன்றத்தில் உரையாற்றியபோது, இந்நாட்டில் பயங்கரவாதம் தோன்ற முதல் சில நாடுகள் எவ்வாறு இலங்கையை முன்மாதிரியாக கொள்ள முற்பட்டன, எவ்வாறு அன்று ஜப்பானிய முதலீடு இலங்கையை நோக்கி வந்தது என்றும்  பின்னர் நாட்டில் நிலவிய சூழ்நிலை காரணமாக திரும்பிப் போனதென்றும் குறிப்பிட்டார்.

இந்த நாட்டில் பௌத்தத்தின் பெயராலும் பௌத்தர்களின் பெயராலும் இனவாதம் விதைக்கப்படாமல் இருந்திருந்தால் பயங்கரவாதம் உருவாகியிருக்காது. நாடும் இந்த ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டிருக்காது. ஆனாலும் இந்த இனவாதிகள் திருந்துவதாகவும் இல்லை, இந்த நாடும் பாடங்கள் எதையும் கற்றுக்கொண்டதாகவும் தெரியவில்லை. அதன் விளைவுதான் இவ்வாறான பௌத்தர்களே இல்லாத இடத்தில் புத்தர் சிலை வைக்கும் முட்டாள்தனமான செயற்பாடுகளாகும்.

இதில் இன்னும் துரதிஷ்டவசமானது என்னவென்றால் சில முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் ஊடகங்களில் இந்த சிலை வைப்பிற்கெதிராக அறிக்கை விடுகின்றார்களே தவிர இந்த சிலையை அகற்றுவதற்கு என்ன நடவடிக்கை எடுத்திருக்கின்றார்கள்; என்று கூறுகின்றார்கள் இல்லை. இன்று 21 முஸ்லிம் பாரளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள் . அமைச்சர் ஹலீம் மாத்திரம் இது தொடர்பாக சில நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக தெரிவித்திருக்கின்றார்.

இன்று அரசாங்கம் முழுக்க முழுக்க முஸ்லிம் பாராளுமன்ற ஆசனங்களில் தங்கித்தான் ஆட்சி செய்கின்றது. இந்த 21 பேரும் நினைத்தால் நாளைகூட ஆட்சியைக் கவிழ்க்கலாம். ஆனால் அடாத்தாக வைக்கப்பட்ட ஒரு சிலையையே அகற்ற முடியாமல் இருக்கின்றார்கள்.  அல்-அக்‌ஷா பள்ளிவாசல் விசயத்தில் சூறா கவுன்சிலின் கூட்டத்தில் அரசாங்கம் அரசாங்கத்தின் நிலைப்பாடு பிழை என்று சொல்லத் தெரிந்த முஸ்லிம் பிரதிநிதித்துவங்களுக்கு அரசாங்கத்திடம் அதனைக்  சென்று தெரிவிக்கத் தெரியவில்லை. தமிழில் வீறாப்பாக அறிக்கை விடத்தெரிந்தவர்களுக்கு அவற்றை ஆங்கில ஊடகங்களுக்கு கூறுவதற்கு தைரியமில்லை; ஏனெனில் அது அரசின் காதுகளை எட்டிவிடும், அரசு தம்மைப் பற்றி பிழையாக நினைத்துவிடும்; என்பதனால்.

இந்நிலையில் முஸ்லிம் தனியார் சட்டம் , அரசியலமைப்பு மாற்றம் ஆகியவற்றையும் இவர்கள் கோட்டை விட்டுவிடுவார்களோ? என்கின்ற கவலை சமூகத்தில் சிலருக்கு மத்தியில் இருக்கின்றது, பலருக்கு அதைப்பற்றியும் கவலை இல்லை. இந்நிலையில் முஸ்லிம் சமுதாயம் என்ன செய்யப் போகின்றது . தம் தலைவிதியை தாமாக ஒரு சமுதாயம் மாற்றாதவரை அச்சமூகத்தின் தலைவிதியை இறைவனும் மாற்றமாட்டான் . ( அல்குர்ஆன் ) எனவே தம் தலைவிதியை மாற்ற அவசரமாக முஸ்லிம் சமுதாயம் தாமாக விழித்துக் கொள்ளாதவரை முஸ்லிம் சமுதாயத்தின் எதிர்காலம் மிகவும் இருள் சூழ்ந்ததாகவே இருக்கப் போகின்றது

19 கருத்துரைகள்:

வெட்டி வீராப்பு

நீங்கள் சொல்வது செரிதான் ஆனாநீங்களும் அரசாங்கத்தின் கக்கூசி கழுஉவும் ஒரு தம்பீயோடு ஒட்டிக் கொண்டு இருந்தால் இந்த அறிக்கையை விடாமல் அதையல்லாம் நியாயப்படுத்தி அறிக்கை விட்டு இருப்பீர்கள் 21MP 22 கட்சி இதுதான் நமது தலைவிதி

ஐயோ, அப்ப இந்த பின்-கதவு மினிஸடர்களில் பிழைப்பு என்னாகிறது?

அவர்கள் தங்கள் சுகபேக வாழ்க்கையை இழக்க நேரிடும் என்பதால் தான் இந்தமாதிரிமெளானமாக இ௫௧கின்றனா.

இலங்கைபாராளுமன்றில் 225 ஆசனம் உண்டு அதில்
ஐ.தே.க 106
ஐ.ம.சு.கூ 95
த.தே.கூ 16
ஜே.வி.பி 6
ஈ.பிடிபி 1
தோ.கா 1
அரசை அமைக்கும் இருகட்சிகளும் 201 ஆசனத்தை கொண்டுள்ளன.
இதில் சு.க வின் கூட்டு எதிர்க்கட்சி 30 முதல் 40 பேர்.கூட்டு எதிர்க்கட்ச்சி 50 பேர் என்று வைத்தால் கூட
201-50 :151 பேர்
ஆக்குறைந்தது 151பேர்அரச தரப்பில் உள்ளனர் (ஆகக்குறைந்தது)
இதில் அரசதரப்பு முஸ்லீம் எம்.பி 21 பேர்
151-21 :130
முஸ்லீம் கள் விலகினாலும் 130 எம்.பி அரசில் இருப்பர் (குறைந்தபட்சம்)
அரசை அமைக்க 113 பேர் போதும்.
நியமான அரசியல்அமைப்பு வந்தால் த.தே.கூ.,ஜே.வி.பி அரசியல் அமைப்பை ஆதரிக்கும் அப்பேபோது 22+130: 152
அரசியலமைப்புக்கு தேவையான 2/3 பெரும்பாண்மையும் கிடைக்கும்.
முஸ்லீம்கள் இல்லாவிட்டால் உலகம் நின்று விடாதே..

இறக்காமத்தில் சிலை வைத்ததற்கு இவ்வளவா?........ஒவ்வொரு வரது வீட்டுக்குள்ளும் சிலை வரும் ....இவர்களை நம்பினால் .....

அல்லாஹ்வின் மீது தவக்கல் வைத்து இந்த 21 MP களும் அரச தரப்பில் இருந்து வெளியேறி எதிர் தரப்பில் யாருடனும் சேராமல் இருக்க வேண்டும் .முஸ்லீம்களுக்கு ஆபத்து இந்த 21MP கள்தான்

திரு. குமார் குமரன் அவர்களே, உங்களது கணிப்பீடு சரியானதே. ஆனால் கட்டுரையாளர் இங்கு குறிப்பிடுவது உலகத்தை அல்ல. இலங்கையை.

அரசியல்வாதிகளை இனியும் நம்பமாட்டோம் SLTJ

இனியும் அரசியல் கட்சிகளையோ அரசியல்வாதிகளையோ நம்பி ஏமார வேண்டாம் SLTJ ???

இனியும் அரசியல் கட்சிகளையோ அரசியல்வாதிகளையோ நம்பி ஏமார வேண்டாம் SLTJ ???

டொவ்தர கலட்டனும்

முஸ்தபா ஜௌபர்! அன்வர் அலி சலபியை ஒரு சந்தர்பத்தில் மத்ஹப்வாதியெனக் குறிப்பிட்ட உங்கள் அறிவு பலபோது எதையும் எதிர்மறையாகத்தான் பார்த்து கருத்திடுகிறது.

எதிர்மறைச் சிந்தனையாளர்களை உலகம் ஆராதித்ததாய் என்றும் வரலாறு கிடையாது.கருத்தில் கொள்ளுங்கள்

தம்பி குமரன், நீ சொன்ன கணக்கு எல்லாம் மிகச்சேரியானதே,
எப்பொழுதும் நாய்க்கு நாய் புத்திதான் இருக்கும்.
இங்கு பேசப்படுகின்ற புத்தர் சிலை விவகாரம் பற்றி உனக்கு தெரியுமா????
இறக்காமம் மாணிக்கமடு எனும் பிரதேசம் முற்று முழுதாய் தமிழ் இந்துக்கள் வாழும் பிரதேசம் ஆகும்.
அவர்கள் சிலை வைத்ததும் ஒரு இந்துக்கோவிலில்தான்,
அதட்கு எதிராய் ஒலிப்பதுதான் இந்த குரல்கள்,
அதை மனதில் வைத்துக்கொண்டு நீர் பேசும்.

இந்த புத்தர்சிலை ஆக்கிரமிப்புக்களை வடகிழக்கில் வைக்கக்கூடா தென்றுதானே விக்கி எழுகதமிழ் நிகழ்வை கூட்டி கூறினார்.அப்போது நீங்கள் இது பௌத்தநாடு என்றும் விக்கி இனவாதி என்றும் கத்தினீர்கள்.சிங்களவனுக்கு எப்படி சொல்லவேனுமோ அப்பபடி சொல்லவேனும் அதத்தான் விக்கி செய்தார்.

@ussanr Nawas
ஒரே நாளில் ஆட்சியைகவிழ்கலாம் என்னும் கட்டுரையாளரின் கூற்று பொய் என்பதை குறிப்பிடுவதே என்பதே என் நோக்கம்.முஸ்லீம்களை இழிவுபடுத்துவதல்ல.மாறாக பொய்யை கூறி மக்களை ஏமாற்ற முற்படுபவர்களை அறிய வேண்டும்.

These so-called Muslim Mps are curse for the society.

Post a Comment