Header Ads



2017 வரவு - செலவுத் திட்ட, முக்கிய விடயங்கள்

வரவு - செலவுத்திட்ட வாசிப்பு தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் அதில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விடயங்கள்

04:33 PM - பட்டதாரிகளுக்கான தொழிற்றுறையொன்றை ஏற்படுத்துவதற்காக, 1.5 மில்லியன் ரூபாயை, வட்டியின்றி வழங்க நடவடிக்கை. இதற்காக, 150 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
04:32 PM - ரயில்வே துறையில் முற்கொடுப்பனவு அட்டையை அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
04:31 PM - ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றை ஒழுங்குபடுத்த நடவடிக்கை
04:30 PM - வாழ்க்கைப்பூராகவுள்ள அக்ரஹார திட்டத்தை நீடிக்க திட்டம்
04:30 PM - ஓய்வூதியக் கொடுப்பனவுத் திட்டமானது, ​​வெடிக்கும் நிலையிலிருக்கும் குண்டாகும். ஓய்வூதியக் கொடுப்பனவுக்காக, 1000 மில்லியன் ரூபாய்.
04:28 PM - இராணுவத்தினருக்கான கொடுப்பனவை வழங்க 3500 மில்லியன் ரூபாய்.
04:28 PM - அரசாங்க வீட்டுத்திட்டங்களில்  10 வருடங்களுக்கு மேல் வாழ்தோர் அவர்களது வீட்டின் உரிமத்தை மாற்றுவதற்கு 2,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
04:28 PM - படையினரின் கொடுப்பனவுக்கு 3,500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
04:28 PM - சமுர்திப் பயனாளிகளின் வருமானம் அதிகரிக்கப்படும். அத்துடன், சமுர்த்தி வேலைத்திட்டம், “ஜன இசுறு” என்று பெயர் மாற்றப்படும்.
04:26 PM - மாடி வீடுகளைக் கொள்வனவு செய்யும் வெளிநாட்டவர்களுக்கு 40 சதவீத கடன்

No comments

Powered by Blogger.