Header Ads



இலங்கையில் 150 சீன தொழிற்சாலைகள்


சீன முதலீட்டாளர்கள் குழுவொன்று சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொண்டு, புதிய முதலீட்டு வாய்ப்புகள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது.

தெற்கு- தெற்கு ஒத்துழைப்புக்கான சீன பேரவையின் பிரதி பணிப்பாளம் ஷியாவோ லிம்மின் ஒருங்கிணைப்பில், 12 சீன முதலீட்டாளர்கள் சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

இவர்கள் சிறிலங்காவின் அமைச்சர்கள் பலரையும் சந்தித்து முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.

அம்பாந்தோட்டை முதலீட்டு வலயத்தில் முதலீடுகளைச் செய்வதில் ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ள இவர்கள் இயற்கை எரிவாயு மின்திட்டம் ஒன்றை ஆரம்பிப்பதற்கும் விருப்பம் வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் 150 தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும் சீன முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டியுள்ளனர்.

வடக்கு கிழக்கிலும் பாரிய திட்டங்களை முன்னெடுப்பதற்கு சீன முதலீட்டாளர்கள் சிறிலங்கா அமைச்சர்களிடம் விருப்பத்தை வெளியிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

1 comment:

  1. Interested in NORTH ? Development or Monitoring India ?

    I wish Srilanka should realize, we need both INDIA and CHINA ... But giving preference to one over other.. will not be healthy for the peaceful development of our land.

    ReplyDelete

Powered by Blogger.