Header Ads



ஹஜ் நிறை­வேற்­ற  10 ஆயிரம் பேர் விண்­ணப்­பம் 

ஹஜ் கட­மையை நிறை­வேற்­று­வ­தற்­காக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­திற்கு இது­வரை 10 ஆயிரம் பேர் விண்­ணப்­பித்­துள்­ளார்கள்.  

இவர்­களில் ஹஜ் கட­மையை நிறை­வேற்­றி­ய­வர்­களைத் தவிர்த்து 7ஆயிரம்  பேர் ஹஜ் கட­மைக்­காக காத்­தி­ருப்­ப­தாக அரச  ஹஜ் குழுவின்  தலைவர் கலா­நிதி மொஹமட் தாஹா சியாத் தெரி­வித்தார். 

அடுத்த வருட  ஹஜ் பய­ணிகள் தெரிவு, விண்­ணப்­பித்த வரிசைக் கிரா­மத்­திற்கு அமை­வா­கவே இடம்­பெறும் எனவும் அவர் கூறினார். இதே­வேளை ஹஜ் கட­மையை  நிறை­வேற்­று­வ­தற்­காக தொடர்ந்தும்  விண்­ணப்­பங்கள் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­துக்கு அனுப்­பப்­பட்டு வரு­கின்­றன. 
அடுத்த வரு­டத்­திற்­கான  ஹஜ் யாத்­திரை பய­ணிகள் தெரிவின் போது முதன் முறை­யாக ஹஜ் பய­ணத்தை மேற்­கொள்­வ­தற்கு விண்­ணப்­பித்­துள்­ள­வர்­க­ளுக்கே முன்­ன­ரிமை வழங்­கப்­ப­ட­வுள்­ளது. 

அடுத்த வருடம் ஹஜ் கட­மையை மேற்­கொள்­வ­தற்கு விண்­ணப்­பித்­துள்­ள­வர்கள் தற்­போது ஹஜ் முக­வர்­க­ளிடம் எது­வித உடன்­ப­டிக்­கையும் செய்து கொள்ள வேண்டாமெனவும் அரச ஹஜ் குழு விண்ணப்பதாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 

ARA.Fareel

No comments

Powered by Blogger.