Header Ads



அர்ஜுன் மகேந்திரன் தப்பியோட்டம்

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜுன் மகேந்திரன் இன்று -27- மாலை திடீரென்று இலங்கையிலிருந்து வெளியேறியுள்ளார்.

மத்திய வங்கி பிணைமுறிகள் விற்பனையின் போது இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பான கோப் அறிக்கை நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்நிலையில் இன்று மாலை 3.15 மணியளவில் அர்ஜுன் மகேந்திரன் இலங்கையிலிருந்து திடீரென்று புறப்பட்டுச் சென்றுள்ளார்.

எமிரேட்ஸ் விமானமொன்றின் ஊடாக அவர் சிங்கப்பூர் நோக்கிச் சென்றுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் நாட்டை விட்டே தப்பிச் சென்றுள்ளதாக இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார். இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது இதனை கூறினார்.

கோப்குழு தொடர்பான இறுதி அறிக்கை நாளை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ள நிலையில் தற்சமயம் நாட்டை விட்டே தப்பிச் சென்றுள்ளதாக ரஞ்சித் சொய்சா குறிப்பிட்டுள்ளார்.

அவர் சிங்கப்பூர் பிரஜை என்பதால் வெளிநாட்டுப் பிரஜை ஒருவரின் கடவுச்சீட்டை இரத்து செய்யும் உரிமை யாருக்கும் இல்லை என்பதனையும் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்ஸா சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.