Header Ads



தூது சென்ற ரஞ்சன், மைத்திரி - ரணிலிடையே இணக்கம் வந்தது (Exclusive)


-AAM.Anzir-

அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த ஜனாதிபதி மைத்திரியின் உரை தொடர்பில், நேற்று வியாழக்கிழமை கொழும்பில் ஒருவித பதற்றநிலை காணப்படட்டது.

இந்நிலையில் ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கா ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்த முன்நின்று செயற்பட்டதாக Jaffna Muslim  இணையத்திற்கு நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியவருகிறது.

பிரதமர் ரணிலின் பச்சைக்கொடியுடன் ஜனாதிபதி மைத்திரியை நேரடியாக சந்திந்த ரஞ்சன் ராமநாயக்கா நல்லாட்சியை நீடிக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தியதுடன், இதற்கு உதவ பிரதமர் ரணிலும் ஐக்கிய தேசியக் கட்சியும் தயாராகவிருப்பதாக சுட்டிக்காட்டினார்.

அத்துடன் இருவருக்கும் இடையிலான இடைவெளியை மஹிந்த தரப்பு பயன்படுத்தினால், அதனால் ஏற்படும் அபாயங்களையும் ரஞ்சன் மைத்திரியின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

ரஞ்சன் ராமநாயக்கா ஜனாதிபதியுடன் நடத்திய பேச்சினை அடுத்தே பிரதமர் ரணில் மற்றும் அமைச்சர் சாகல ரட்நாயக்கா ஆகியோர் நேற்று -13- இரவு ஜனாதிபதியை தனியாக சந்தித்துள்ளனர்.

இச்சந்திப்பில் முக்கிய சில விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.

இதனையடுத்தே ஜனாதிபதி மற்றும் பிரதமர் இடையே மீண்டும் இணக்கம் ஏற்பட்டதாக ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு அந்த நம்பகரமான வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.

3 comments:

  1. Better next election some young and well educated leader must select.These two person must be retaire from politics.

    ReplyDelete
  2. ஆட்சியையும் பதவிகளையும் பாது காப்பதற்கான இணக்கப்பாடு மாறாக நாட்டு மக்களுக்காக அல்ல

    ReplyDelete
  3. Real Jokers of the yahapalanaya have cheated the entire Nation.......

    ReplyDelete

Powered by Blogger.