Header Ads



முஸ்லிம்களை, தமிழர்களென அடையாளப்படுத்துவதன் வஞ்சகத்திட்டம் (Exclusive Article)

-யாழ் அஸீம்-

'வடமாகாண முஸ்லிம்கள் அனைவரும் இம்மண்ணிலிருந்து உடனடியாக வெளியேற வேண்டும்'. இது 1990 ஒக்டோபர் மாதம் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடைய உத்தரவு.... கட்டளை.

அவருடைய கட்டளைப்படி வடமாகாணத்தினுள்ள வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாண மாவட்டங்களிலுள்ள ஒட்டுமொத்த முஸ்லிம்களின் அசையும் அசையாச் சொத்துக்கள் அத்தனையும் அபகரித்து, இனச்சுத்திகரிப்புச் செய்யப்பட்டு தாயக மண்ணிலிருந்து அம்மக்களை வேரோடு பிடுங்கி வீசிய அந்த வரலாறு இன்னும் இதயத்திலிருந்து துடைக்க முடியாத துயரம் அந்தக் கறைபடிந்து ஒக்டோபர் மாதத்தை இருபத்தாறாவது வருடத்தில் இப்போது மீண்டும் அடைந்திருக்கின்றோம்.

ஆனால் இப்போது வடமாகாண முதலமைச்சரும் முன்னாள் நீதியரசருமான கனகசபாபதி விஸ்வலிங்கம் விக்னேஸ்வரன் ஐயா முஸ்லிம்களாகிய எம்மைப் பார்த்து 'நீங்களெல்லாம் தமிழர்கள்' என்று கூறுகிறார்.

கால்நூற்றாண்டுகளுக்கு முன் 1990 ஒக்டோபரில் வடமாகாண முஸ்லிம்கள் அவர்களது தாயக மண்ணிலிருந்து விரட்டியடிக்கப்பட்டபோது புலிகளைப் பார்த்து 'இவர்களும் தமிழர்கள்தான்.... இந்த மக்களை விரட்டாதீர்கள்! என்று கூறியிருக்கலாமே! ஐயா! இந்த ஞானம்... இந்தக் கருத்து..... இந்தத் தத்துவமெல்லாம் ஏன் அன்று வரவில்லை ஐயா! இஸ்லாமிய தமிழரென எமை அழைத்தீர்? இப்போது எந்த வகைத் தமிழரென எமை வெறுத்தீர்? எமை விரட்டினீர்? காரணம்தான் புரியவில்லை! என்ற கவிவரிகள்தான் ஞாபகத்துக்கு வருகின்றது.

அன்று இக்கருத்தை வெளியிட்டிருந்தால் தாங்கள் உண்மையிலேயே எங்கள் மீது கொண்ட அன்பில், அனுதாபத்தில் கூறிய வார்த்தைகளாகத்தான் கருதலாம். எங்களுக்காக இதய சுத்தியுடன் குரல் கொடுத்த ஒருவராக இன்றளவும் இதயத்தில் நன்றியுடனிருப்போம்.

'வடமாகாண முஸ்லிம்கள் மீண்டும் தம் தாயக மண்ணில், காலடி வைக்கும் வரை என் பாதமும் யாழ் மண்ணை மிதிக்காது' என்று எமக்காகத் துணிச்சலுடன் குரல் கொடுத்ததுடன் அவ்வாறே வாழ்ந்த உடுப்பிட்டிச் சிங்கம் முன்னாள் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் மு. சிவசிதம்பரம் ஐயா இன்றும் எம் இதயத்தில் வாழ்கிறார். அவர் இறந்த பிறகு பின் அவருடைய பூதவுடலைத்தான் யாழ் மண்ணுக்கு கொண்டு சென்றார்கள்.

அன்றைய இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகளின் போது மௌனித்திருந்து விட்டு இப்போது விக்னேஸ்வரன் ஐயா எம்மைத் தமிழர்கள் என கூறுவதன் காரணம் வெட்டவெளிச்சமானதுதான். முஸ்லிம்களின் அபிலாசைகளைக் கருத்தில் எடுக்காமல் வடக்கு கிழக்கு இணைப்புக்கான பல்வேறு உத்திகள் தமிழ்த் தரப்பினரால் முன்னெடுத்து வரும் இவ்வேளையில் அதற்குச் சாதகமாகவே இக்கருத்தை வெளியிட்டுள்ளார்.

அண்மையில் மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் 'முஸ்லிம்கள் தமிழ் மொழியை தாய் மொழியாகக் கொண்டபோதும் அவர்கள் தங்களை தமிழர்களாக அடையாளம் காட்டாமல் அரசியல் காரணங்களுக்காகவே முஸ்லிம்களாக அடையாளம் காட்டுகிறார்கள்' என்று முஸ்லிம்களை கொச்சைப் படுத்தி வெளியிட்டுள்ள இக்கருத்தானது அடிப்படையில் மிகவும் தவறானது. மொழி ரீதியாக முஸ்லிம்களையும் தமிழர்களையும், ஒரு இனமாக சித்தரிக்க முயல்வது முஸ்லிம் சமூகத்தின் அரசியல் தனித்துவத்;தை நிராகரிக்கும் ஒரு நிலைக்கே இட்டுச் செல்லும்.

இலங்கை முஸ்லிம்கள் இஸ்லாமியர் என்ற சமய அடையாளத்தையே வலியுறுத்துகின்றனர். தமிழை தாய்மொழியாகக் கொண்டிருப்பதன் காரணமாக பெருமையடைவதுடன், கலாசாரத்திலும் பண்பாட்டிலும் தமக்கேயுரிய தனித்துவ அடையாளங்களைப் பேணுகின்றனர். எனவே இன, மொழி அடையாளங்களைக் கடந்த சமய அடையாளம், இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்தவரை ஒரு பிரிக்க முடியாத அம்சமாகும்.

முஸ்லிம்களை தமிழர்களென அடையாளப் படுத்த முனையும் விக்னேஸ்வரன் ஐயாவின் கூற்றின் உள்நோக்கமானது, வடக்க கிழக்கானது தமிழர்களின் தாயகம்தான் என்ற கோட்பாட்டை நிலைநிறுத்தி, முஸ்லிம்களைப் புறம்தள்ளி வடக்கு கிழக்கை இணைப்பதற்கான ஒரு யுக்தியேயன்றி வேறல்ல.

முஸ்லிம்களை இஸ்லாமியத் தமிழர்களாகப் காட்ட முனைந்த, முஸ்லிம்களின் அடையாளத்தை ஏற்கமறுத்த அன்றைய தமிழ் அரசியல் தலைமைகள் தமது தமிழ்த் தேசியத்தின் மேலாதிக்கத்துக்குள் முஸ்லிம்களையும் அடக்கி வைப்பதற்கு திட்டமிட்டன. அந்த வகையில் 1800களில் பொன்னம்பலம் இராமநாதனால் மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் தொடர்ச்சியாகவே இதனையும் நோக்க வேண்டியுள்ளது.

1833ம் ஆண்டு டொனமூர் ஆணைக்குழுவின் சிபார்சின் பேரில் நிருவப்பட்ட சட்டநிரூபன சபைக்கு அங்கத்தவர்கள் இனப்பிரதி நிதித்துவத்தின் அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். தமிழ் இனத்தைச் சார்ந்த அங்கத்தவர்தான் முஸ்லிம்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் நிலை அக்காலப் பகுதயில் இருந்தது. 1880களில் சட்டசபையில் சில சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படக்கூடிய வேலையில் முஸ்லிம்கள் அவர்களுக்கென்று உரிய ஒரு தனிப்பட்ட பிரதிநிதித்துவத்தை கோரினர்.

இச்சந்தர்ப்பத்தில் 1879இல் தமிழர்களை சட்டசபையில் பிரதிநிதித்துவப்படுத்திய பொன்னம்பலம் இராமநாதன் முஸ்லிம்களின் பூர்வீகம் இந்தியாவென்றும், அவர்கள் உண்மையில் இஸ்லாத்துக்கு மதம் மாறிய திராவிடர்கள்தான் என்றும் ஒரு வாதத்தை முன்வைத்தார். முஸ்லிம்கள் சட்டசபையில் தங்களுக்கெனத் தனிப்பிரதிநிதித்துவம் கோரிய காலகட்டத்தில், முஸ்லிம்களைத் திராவிட இனம் என அடையாளப்படுத்த இராமநாதன் மேற்கொண்ட முயற்சியானது, முஸ்லிம் பிரதிநிதித்துவத்தைத் தடுக்கும் ஒரு தந்திரோ பாயமான முயற்சியாகவே முஸ்லிம்கள் நோக்கினர்.

இக்காலகட்டத்தில் சித்திலெப்பை, ஒராபிபாஷா ஆகியோருடன் இணைந்து கல்வி, சமூகப் பணிகளில் ஈடுபட்டவரும், 'முஸ்லிம் பாதுகாவலன்' என்னும் பத்திரிகையை வெளியிட்டவருமான ஐ.எல்.எம். அப்துல் அஸீஸ் அவர்கள் பொன்னம்பலம் இராமநாதனது தவறான கூற்றுக்குப் பதிலளிக்கும் வகையில் இலங்கைச் சோனகர் வரலாறு என்னும் திறனாய்வு நூலை வெளியிட்டார். இந்நூல் பொன்னம்பலம் இராமநாதனை விமர்சித்து ஐ.எல்.எம். அப்துல் அஸீஸ் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

'இராமநாதன் சோனர்களை தமிழ் இனத்தவர் எனக் குறிப்பிடுவதன் நோக்கமாவது, அரசாங்கம் முஸ்லிம்களுக்கென ஒரு தனிப்பட்ட அங்கத்துவர் சட்டசபையில் இடம்பெறுவதைத் தடுப்பதற்கேயாகும். ஏனெனில் சட்டசபையில் ஒரு முஸ்லிமை நியமிப்பதற்கான அரசாங்கத்தின் திட்டம் வெளியானதும், சோனகர் ஒரு தனிப்பட்ட இனத்தைச் சார்ந்தவர்கள் அல்லவென்றும், எனவே அவர்களுக்கென தனிப்பட்ட ஒரு அங்கத்தவர் அவசியம் இல்லையென்றும் அரசாங்கத்துக்கு உணர்த்துவதே இதன் நோக்கமாகும்.

பொன்னம்பலம் இராமநாதன் அவர்களுடைய அடிச்சுவட்டைப் பின்தொடர்ந்து இன்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஐயாவும் முஸ்லிம்களைத் தமிழர்கள் என்று அடையாளப்படுத்துவதன் நோக்கம், முஸ்லிம்களின் இனத்துவ அடையாளத்தை மறைத்து, முஸ்லிம்களின் அபிலாஷைகளைப் புறக்கணித்து, அவர்களது சுயநல அரசியல் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கான அடிகோலாகும்.

தமிழ் - முஸ்லிம் உறவுக்குச் சாதகமான நிலைமைகள் உருவாகும் இச் சூழ்நிலையில, இவ்வாறு இனரீதியான, முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிடுவது உகந்ததல்ல. தமிழ் - முஸ்லிம் மக்களிடையே கசப்புணர்வையும் சந்தேகத்தையும் வளர்க்கவே இத்தகைய வார்த்தைப் பிரயோகங்கள் அமையும். திறந்த மனதுடனான பேச்சுவார்த்தைகளும் புரிந்துணர்வுமே, சுமூகமான தீர்வுக்கு வழிவகுக்கும் என்பதை இவ்வாறான இனரீதியான கருத்துக்களை வெளியிடுபவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

வடக்கு-கிழக்கு இணைப்பில் முஸ்லிம்களின் எதிர்காலம் குறித்து நியாயமானதும், ஆக்கபூர்வமானதுமான கருத்துக்களை வெளியிட்டு வரும் பெரும்பாலான தமிழ்த் தலைவர்களிடையே பொன்னம்பலம் இராமநாதனின் எச்சங்களாக இனவாதக் கருத்துக்களை வெளியிட்டு வருபவர்கள் ஓரிருவர்தான் என்பது ஆறுதலான விடயமாகும்.   

22 comments:

  1. தமிழ் இனம் இந்தியாவில் இருந்து வந்த கள்ளத்தோணிக் கும்பல்.

    சந்திரக்கா அம்மையார், தமிழர்களை வந்தேறிகள் என்று தென்னாப்பிரிக்காவில் சொன்னதாக நினைவு.

    ReplyDelete
    Replies
    1. கள்ளத்தோணிகள் தமிழர்களா.!ஹி ஹி,சிங்களவர் முஸ்லீம் களை கால கால மாக சசொல்லுவதை இவர் தமிழர்களுக்கு குறிப்பிடுகிறார்.பாவம் தம்பிப

      Delete
  2. வடகிழக்கை இணைப்பது என்பது முஸ்லிம்களின் பிரச்சினை மட்டும் அல்ல. அது கிழக்கு மாகாண அனைத்து இன மக்களின் பிரச்சினை. கிழக்கின் அரசியல், பொருளாதார, செல்வம் அனைத்தையும் பட்டை போட்டு கொடுக்கும் ஒரு விடயமாகும். எனவே வடக்கும் கிழக்கும் இணைவதை கிழக்கின் அனைத்து மக்களும் எதிர்க்க வேண்டிய விடயமாகும்.

    ReplyDelete
  3. தமிழ் நாட்டில் இருந்து வந்த கள்ளத்தோணி இனம்தான், தமிழ் இனம்.

    ReplyDelete
  4. மொத்த்தில்பார்க்கபோனால் இலங்கையில் அத்தனைபேரும் கல்லதோனிகல் தான்

    ReplyDelete
  5. தமிழ் வந்தேறிகள், ஈழம் கேட்கிறார்கள் என்று முன்னாள் ஜனாதிபதி தென்னாப்பிரிக்காவில் ஒருமுறை சொல்லி இருந்தார்.

    விஷக்கிருமி விக்கியும் ஒரு வந்தேறிதான்.

    ReplyDelete
  6. Yusuf Ismath@ நீங்களென்ன கொள்ளை அடிக்க வந்தவர்களா ? ஏனென்றால் முன்பு சவூதி அரேபியாவில் பிரதான தொழிலே கடல் கொள்ளைதான் .

    ReplyDelete
  7. Mr.kumar 1990il Adithathai vedawa

    ReplyDelete
  8. இந்த விக்னேஸ்வரன் ஒரு LTTE தீவிரவாதி அவன் swiss அங்கத்துவரிடம் சொன்னான் வடக்கில் ஆக்கிரமிப்பு செய்து இருக்கும் இலங்கை இராணுவம் வெளியேற வெண்டுமென்று சுதந்திர இலங்கையின் பாதுகாப்பு படையினர் எங்குவெண்டுமென்றாலும் வைக்க முடியும்.முதலில் இலங்கையிலுக்கு முதலமைச்சர் பதவி முறை ரத்து செய்ய வெண்டும்.
    வடக்கு கிழக்கு ஒருபோதும் இணைக்க கூடாது அப்படி இணைத்தால் அந்த ரெண்டு நிலப்பரப்பும் பெரிதாக காட்டி தனிநாடு கேட்க இலகுவாக இருக்கும்.

    ReplyDelete
  9. KUMAR - சவூதியில் எண்ணெய் வளம் இருக்கிறது. யாரிடம் கொள்ளை அடிக்காத தேவையில்லை.

    உமது தமிழ் இனம், தமிழ் நாட்டில் முன்னர் இருந்த பஞ்சப் பரதேசிக் கூட்டம்.

    அங்கு வேலை வெட்டி இல்லை. அதனால், கள்ளத் தோணி வழியாக இலங்கை வந்து தேவை இல்லாத ஈழம் கேட்குது.

    ReplyDelete
  10. சவூதி அரேபியாவின் வரலாறு தெரியாதவர்கள் எல்லாம் கருத்து தெரிவிக்க வந்துள்ளார்கள் . சவூதி அரேபியாவிற்கு ஆங்கிலேயர்கள் எண்ணெய் கண்டுபிடிக்க உதவி செய்திராவிட்டால் இன்னும் அதே கடற்கொள்ளையைத்தான் தொடர்ந்திருப்பார்கள்.இலங்கையின் வடக்கு கிழக்கில் தமிழர்கள் வெகு காலத்திற்கு முன்பே குடியேறியுள்ளார்கள் . அப்பொழுது இந்து சமயம் மட்டுமே இங்கு இருந்தது அதன் பிறகே சிங்களவர்கள் வங்கத்தில் இருந்து வந்ததும் புத்த சமயம் பரவியதும் போர்த்துகேயர் , ஒல்லாந்தர் ஆங்கிலேயர்கள் இங்கு வந்ததும் நிகழ்ந்தது.

    ReplyDelete
    Replies
    1. Hinduism, Buddhism uruvaaga muthaley, Adam nabi Sri Lanka vil kaal pathiththu vittaargal. Is Hindu the name of civilization or religion? Mr.Kumar, r u converted to Christian by Norway(like LTTE terrorist)

      Delete
    2. Saudi Arabian, when was they done piracy? Mr. Kumar, can you explain with the real historical proof?

      Delete
  11. Kumar. ..paradesi ..ltte losser..just bark nothing will happen to lossers.

    ReplyDelete
  12. @shafraz khan: Don't bark here and wast your time. IS is waiting for your service for survival .

    ReplyDelete
    Replies
    1. ISIS is not Muslims & the leader well trained by CIA. It's like LTTE terrorist(human killing beasts)

      Delete
  13. @Nazim: What kind of joke is that? I think you have added "Nabi" part to Adam who is the first human to the world according to the faith of abrahamic religions. It doesn't anyway means he is a Muslim. Islam only starts after Mohamed era. But Hinduism is the oldest religion in the world according to the archaeologists.

    ReplyDelete
  14. Islam exists since Adam.

    Hindu scholars say, hinduism starts from 3500 years ago only in India.

    ReplyDelete
  15. Islam exists since Adam.

    Hindu scholars say, hinduism starts from 3500 years ago only in India.

    ReplyDelete
  16. தமிழீழ போராட்டத்தின் வலுக்குன்றிய (நோஞ்சான்) வடிவம்தான் வடக்கு-கிழக்கு இணைப்பு கோசம்

    ReplyDelete
  17. இங்கு தமிழர்களும் முஸ்லிம்களும் ஆரோக்கியமற்ற வார்த்தை பிரயோகங்களை தவிருங்கள் please...

    இலங்கையில் எவ்வாறு தமிழர்கள் ஒரு தனி இனமோ அவ்வாறே முஸ்லிம்களும்.. யாரும் யாரையும் மிதித்து வாழ வேண்டிய அவசியம் இல்லை.. அரவணைத்தாலே தவிர நிம்மதி கிடைக்காது

    be unite as SRI LANKANS

    ReplyDelete
    Replies
    1. நீர் தமிழர் தான் நம்பீட்டம்,ஸால்லாம் அலைக்கும்,ஹீ,ஹீ

      Delete

Powered by Blogger.