Header Ads



தங்க குதிரை இருக்கின்றது, என்பதை நம்ப முடியுமா..?

கடந்த ஆட்சிக் காலத்தில் வெள்ளை வான்களில் ஆட்கள் கடத்தப்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கடந்த ஆட்சிக் காலத்தில் பாதுகாப்புச் செயலாளராக பணியாற்றிய தன்னை இலக்கு வைத்து பகிரங்கமாக சுமத்தப்பட்ட இந்த குற்றச்சாட்டு மோசமான, பொய்யான கட்டுக்கதை எனவும் அவர் கூறியுள்ளார்.

வெள்ளை வான்களில் கடத்தப்பட்ட உறவினர்கள், நண்பர்கள் அல்லது வேறு எவராவது இருக்கின்றார்களா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் உரையாற்றும் போதே முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் இதனை கூறியுள்ளார்.

அன்று கூறியவை எல்லாம் தற்போது பொய்யாகியுள்ளன. சில பொய்கள் எம்மால் நினைத்தும் பார்க்க முடியாத பொய்கள்.

மக்கள் அந்த பொய்களை நம்பினர். தங்க குதிரை இருக்கின்றது என்பதை நம்ப முடியுமா? எனினும் அதனை நம்பியவர்கள் இருந்தனர்.

மகிந்த ராஜபக்ச 18 பில்லியன் டொலர்களை கொள்ளையிட்டு டுபாய் நாட்டுக்கு எடுத்துச் சென்றதாக சிலர் நம்பினர். ஆட்சி நடத்திய காலத்தில் 18 பில்லியன் டொலர்களை இலங்கையில் கூட பயன்படுத்தியதில்லை. எனினும் அவற்றை நம்பினர்.

மகிந்த நாட்டில் 30 வருடங்கள் நடந்த பயங்ரவாத போரை முடிவுக்கு கொண்டு வந்தார் என்று தெரிந்து கொண்டே இந்த பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்தினர்.

நாட்டில் என்றும் நடைபெறாத கண்ணுக்கு தெரியும் பாரிய அபிவிருத்தி மேற்கொள்ளப்பட்டது. கண்ணுக்கு தெரிகின்ற, தாம் அனுபவிக்கும் சிறந்தவற்றை மறந்து விட்டு, பொய்களை நம்ப வைக்க முடிந்ததன் காரணமாவே மகிந்த ராஜபக்சவை தோற்கடிக்க முடிந்தது.

இன்னும் பலர் இவற்றை நம்பிக் கொண்டிருக்கின்றனர். நீங்கள் போரை முடிவுக்கு கொண்டு வந்தீர்கள், அபிவிருத்தி செய்தீர்கள், ஆனால் வெள்ளை வான் இருந்ததே என்று என்னிடம் ஒருவர் கூறினார்.

வெள்ளை வான் எப்போதும் இருந்தது. கறுப்பு, பச்சை வான்கள் இருந்தன. 86,87 ஆம் ஆண்டுகளில் ஆட்களை கடத்திய மொறிஸ் மைனர் காரும் இருந்தது.

பித்தாளை சந்தியில் பாதுகாப்புச் செயலாளர் மீதும், இராணுவ தலைமையகத்தில் இராணுவ தளபதி மீதும் தாக்குதல் நடத்தும் அளவுக்கு கொழும்பில் இருந்த விடுதலைப் புலிகளின் வலையமைப்பு இருந்தது.

இராணுவ தளபதியின் தலைமையகத்தில் இராணுவ தளபதி மீது தாக்குதல் நடத்தும் அளவுக்கு விடுதலைப் புலிகளின் வலுவான வலையமைப்பு கொழும்பில் இருந்தது.

அந்த வலையமைப்பு ஒழிக்க, அந்த கொலையாளிகளை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் கடத்திச் சென்றால் அது குற்றம் என நான் நினைக்கவில்லை.

ஆனால், நாங்கள் ஒருபோதும் ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த ஒருவரை கடத்தவில்லை. நாங்கள் அவர்களை சிறையில் அடைக்கவும் இல்லை. வழக்குகளை நடத்திக்கொண்டிருக்க எமக்கு நேரம் இருக்கவில்லை எனவும் கோத்தபாய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. இந்த அலிபபாக்கள் பயங்கர பொய்காரன்கள். இவனுகளுக்கு பொய்யைக் கட்டி பாரிய பூதாகரங்களாக சித்திரித்து பெரிய அபாண்டங்களை அரசாங்கத்துக்கு எதிராக செயற்படுத்த முடியும். இவ்வளவு பெரிய கள்ளர்களை அரசாங்கம் விட்டுவைத்திருக்கின்றது என்றால் அதன் பொருள் இந்த பயங்கர கள்வர்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் டீல் இருக்கின்றது என்பது தான் அர்த்தம். இந்த டீலை வைத்துக்கொண்டு ஒருபோதும் அரசாங்கத்தை நடாத்த முடியாது.இது முதலில் பொதுமக்களுக்கும் பொதுச் சொத்துக்களுக்கும் மிக மோசமான விளைவைக் கொண்டுவரும். பொறுத்திருந்து பாருங்கள். அப்போது கோச்சி போய்விட்டது.

    ReplyDelete

Powered by Blogger.