Header Ads



யாழ்ப்பாணத்துடன் இரட்டை நகராகிறது, பிரித்தானியாவின் கிங்ஸ்டன் நகரம்


பிரித்தானியாவின் கிங்ஸ்டன் நகரத்தையும், யாழ்ப்பாண நகரத்தையும் இரட்டை நகரங்களாக பிரகடனம் செய்யும் புரிந்துணர்வு உடன்பாட்டில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கையெழுத்திடவுள்ளார்.

பிரித்தானியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், எதிர்வரும் 18ஆம் நாள் கிங்ஸ்டன் நகரசபை மண்டபத்தில் நடைபெறும் நிகழ்வில் இது தொடர்பாக அந்த நகரசபையின் அதிகாரிகளுடன் உடன்பாட்டில் கையெழுத்திடவுள்ளதாக, கிங்ஸ்டன் நகரசபையின் இணையத்தளத்தில் கூறப்பட்டுள்ளது.

எனினும் இது தொடர்பாக வடக்கு மாகாண சபை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

யாழ்ப்பாணத்துடன் இரட்டை நகரமாக இணைந்து கொள்ளவுள்ள பிரித்தானியாவின் கிங்ஸ்டன் நகரத்தில், சுமார் 12 ஆயிரம் தமிழர்கள் வசிக்கின்றனர் என்பதுடன், தமிழ் அந்த நகரத்தின் இரண்டாவது மொழியாகவும் இருக்கின்றது.

கிங்ஸ்டன் நகரம் ஏற்கனவே,  ஜேர்மனியின் ஓல்டன்பேர்க் மற்றும் தென்கொரியாவின் வனாக்-கு நகரங்களுடன் இதுபோன்ற இரட்டை நகர உடன்பாட்டை செய்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.