Header Ads



புதிய அரசியமைப்பில், மதம் சார்ந்த விடயங்கள்பற்றி இன்னும் பேசவில்லை - ஜயம்பதி விக்கிரமரத்ன

தேசிய இனப்பிரச்சினைக்குப் புதிய அரசமைப்பினூடாக நிலையானதொரு அரசியல் தீர்வைக் காண்பதற்கு அரசு முயற்சிக்கின்றது என அரசமைப்பு நிபுணரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன தெரிவித்தார்.

அத்துடன், எதிர்வரும் நவம்பர் மாதம் அரசமைப்பு வரைபு நகல் நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படாது என்றும், அறிக்கை மாத்திரமே முன்வைக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரசமைப்பு மறுசீரமைப்பு நடவடிக்கை தொடர்பில் விளக்கமளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு

1978ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட அரசமைப்பை மாற்றியமைப்பதற்கு நாடாளுமன்றம் ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியதன் பிரகாரம், அரசமைப்பு நிர்ணயச் சபை உருவாக்கப்பட்டது.

அதன்பின்னர் வழிநடத்தும் குழுவும், உப குழுக்களும் அமைக்கப்பட்டன. இதற்கும் சபையின் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றிருந்தது. ஆளும், எதிரணி உறுப்பினர்கள் மேற்படி குழுக்களில் அங்கம் வகிக்கின்றனர்.

இது மக்களுக்கான பணியென்பதால், ஜனநாயக முறைமையின்கீழ் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பூர்வாங்கப் பணிகள் முடிவடைந்த பின்னர், எதிர்வரும் நவம்பர் மாதமளவில் அரசமைப்பு நிர்ணயச் சபைக்கு (நாடாளுமன்றத்துக்கு) வழிநடத்தும் குழு அறிக்கையொன்றை வழங்கும்.

இது புதிய அரசமைப்புக்கான சட்டமூலம் அல்லவென்பதை சகலரும் புரிந்துகொள்ள வேண்டும். அந்த அறிக்கை தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்ற பின்னரே அரசமைப்பு சம்பந்தமாக இரண்டாம்கட்ட செயற்பாடுகள் ஆரம்பமாகும்.

எந்தவொரு சரத்துமே இன்னும் முன்மொழியப்படவில்லை. ஆகவே, பௌத்த மதத்துக்குரிய முன்னுரிமை நீக்கப்பட்டுள்ளது எனக் கூறப்படுவது போலி கருத்தாகும். இதை மக்கள் நம்பக்கூடாது.

மதம் சார்ந்த விடயங்கள் பற்றி வழிநடத்தும்குழு இன்னும் பேச்சையே ஆரம்பிக்கவில்லை. இந்நிலையில்தான் இப்படியான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதேபோல், நாட்டை இரண்டாகப் பிரிப்பதற்கு இந்த அரசு ஒருபோதும் அனுமதி வழங்காது. நாம் அனைவருமே பிரிவினைவாதத்துக்கு எதிரானவர்கள்.

எனினும், இனப்பிரச்சினைக்கு நிலையானதொரு அரசியல் தீர்வை ஒன்றுபட்ட நாட்டுக்குள் முன்வைப்பதற்கு அரசு முயற்சிக்கின்றது.

பிச்சைக்காரன் புண்போல் இனப்பிரச்சினையைப் பயன்படுத்தி இனியும் அரசியல் நடத்துவதற்கு இடமளிக்கமுடியாது. எனவேதான், நிலையானதொரு அரசியல் தீர்வு பற்றி கலந்துரையாடப்பட்டு வருகின்றது.

இதேவேளை, ஆறு உபகுழுக்களின் அறிக்கைகளையும் வழிநடத்தும் குழு ஆராயும். அரசமைப்புத் தயாரிப்புப் பணியில் அவசரமும் கூடாது இழுத்தடிப்பும் இருக்கக்கூடாது. எனவேதான், இந்த விடயத்தை அரசு நிதானமாக கையாண்டுவருகின்றது என அவர் கூறியுள்ளார்.

3 comments:

  1. ஆக, புதிய அரசியல் அமைப்பு புஷ்வாணமாகப் போகிறது.

    ReplyDelete
  2. We do NOT need a new constitution. We can do the changes with "amendment" including safeguarding the RIGHTS of the MINORITIES, Insha Allah.
    Noor Nizam. Convener "The Muslim Voice".

    ReplyDelete
  3. The new constitution does not yield any fruits.

    It will be same as now.

    ReplyDelete

Powered by Blogger.