Header Ads



துருக்கியின் நடவடிக்கை யுத்தத்திற்கு, வழி வகுக்குமென ஈராக் எச்சரிக்கை - ஐ.நா. அவசர கூட்டத்திற்கு அழைப்பு


தமது ஆட்புலத்திற்குள் துருக்கி இராணுவத்தின் பிரசன்னம் குறித்து ஐ.நா பாதுகாப்புச் சபையில் அவசர கூட்டத்திற்கு ஈராக் அழைப்பு விடுத்துள்ளது.

தீவிரவாத குழுக்களுக்கு எதிரான படை நடவடிக்கைக்கு ஈராக்கில் சுமார் 2,000 துருப்புகளை நிலைநிறுத்தும் தீர்மானம் ஒன்றுக்கு துருக்கி பாராளுமன்றம் கடந்த வாரம் அங்கீகாரம் அளித்திருந்தது. இஸ்லாமிய தேசம் குழு மற்றும் குர்திஷ் ஆயுததாரிகளை இலக்கு வைத்தே துருக்கி இராணுவம் எல்லை தாண்டிய படை நடவடிக்கையை முன்னெடுத்து வருகிறது.

எனினும் துருக்கியின் நடவடிக்கையை கண்டிக்கும் ஈராக் பிரதமர் ஹைதர் அல் அபதி இது பிராந்திய யுத்தத்திற்கு வழி வகுக்கும் என்று எச்சரித்திருந்தார். இது தொடர்பில் இரு நாடுகளும் அடுத்த நாட்டு தூதுவர்களை அழைத்து அதிருப்தியை வெளியிட்டிருந்தன.

துருக்கி ஈராக்கிய ஆட்புலத்தில் அத்துமீறியது மற்றும் உள்விவகாரங்களில் தலையிடுவது குறித்து பாதுகாப்புச் சபை அவசர கூட்டத்தை நடத்த ஈராக் வெளியுறவு அமைச்சு கோரியதாக அதன் இணையதளம் குறிப்பிட்டுள்ளது.

எனினும் ஈராக்கின் குர்திஷ் பிராந்திய அரசே தமது இராணுவத்தை அங்கு அழைத்ததாக துருக்கி குறிப்பிடுகிறது.

துருக்கி எல்லையை ஒட்டிய ஈராக்கின் பஷிக் முகாமிலேயே பெரும்பாலான துருக்கி துருப்பினர் நிலைகொண்டுள்ளனர். 

No comments

Powered by Blogger.