Header Ads



"எனது ஆசான்"


-நாகூர் ழரீஃப்-

அன்பின் உருவமாய்
எண்பதுகளில்
நான் கண்டேன்
எனது ஆசானை!

குணத்தின் குன்றாய்
காத்தநகர் கண்டது
ஐம்பதுகளில்
எனது ஆசானை!

'ஆலிம்' குடும்பத்தில்
உதித்த முத்து- பல
'ஆலிம்'களை உருவாக்கிய
சமூகத்தின் சொத்து!

'இபாதா'வில் இன்பம் கண்ட
இறை நேசர்;
'தஃவா'வில் தடம் பதித்த
சரித்திரப் புருசர்!

மாணாக்கரைக் கண்
மாணிக்கமாய் 24
மணி நேரமும்
காத்து நின்ற மாணிக்கம்!

சமூக நல்லுறவுக்காய்
சற்றேனும் தயங்காது
முன்னின்ற
முதுகெலும்புள்ள
முழுமகன்!

அறிவும் ஒழுக்கமும்
பரிவும் பண்பாடும்
அறிஞர்களிடம்
இருக்கணும் என்ற
இலக்குடன் ஓயாத
'இல்மு' நதி!

பொறுப்பில் பொறுப்பாய்
விருப்பிலும் கசப்பிலும்
பக்குவமாய்ப் பேணுதலாய்
பார் போற்றும் 'நூர்'!

முரண்பாட்டைக்
கண்டதில்லை; பிறர் குறை
திண்டதில்லை;
திரண்டாலும் முழு
உலகும் 
'தஹஜ்ஜுத்' தவறவில்லை!

உள்ளத்தின் வென்மையை
ஆடையில் கண்டேன்!
தள்ளாத வயதிலும்
'தக்வா'வின் தடயத்தை
'ஸஜதா'வில் கண்டேன்!

நாட்டை நகரை சொந்த
வீட்டைக் குடும்பத்தை
நமக்காய் அர்ப்பணித்த
ஒளி விளக்கு 
எனது ஆசான்!

அவர்களது அயராத
அர்ப்பணிப்புக்களை
அறிவுக்கான கண்
விழிப்புக்களை
யா அல்லாஹ்
ஏற்றுக் கொள்வாயாக!

ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸில்
வண்ணத்து சுவனத்தில்
குடியமர்த்தி குளிரவை
மறுமையின் வாழ்வுதனை!!

3 comments:

  1. Dear Mr. Dhareef May Allah Bless you very nice poem you have narrated. This is the way that we have to appreciate the one when he is living. Always we have to be a thankful. Actually as far as I am concern this Sheikh most respected AAlim has done a lot to our community and to others in common. May Allah bestow him the Jannathul Firthawas.

    ReplyDelete
  2. Just now I came to know about Sheikh Abdullah's death news. May Allah make him among the Shuhada and Saliheen. Ameeeeen

    ReplyDelete

Powered by Blogger.