October 18, 2016

வட்டி ஏற்படுத்திய பாதிப்பு - காலியில் சிங்கள சகோதரிக்கு ஏற்பட்ட, அதிபயங்கர அசிங்கம்

-TM-

தனது காதலனை, கடன் வாங்கி வெளிநாட்டுக்கு அனுப்பிய பெண்ணொருவர், அந்தக் கடனையும் அதற்கான வட்டியையும் செலுத்துவதற்காக, சுமார் ஏழு பேருடன் உறவு வைத்துக்கொண்ட சம்பவமொன்று, காலி மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.  

இந்தப் பெண், தனது வாடிக்கையாளர்களுடன் இருந்த போது, பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில், கைது செய்யப்பட்டுள்ளார்.  

இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,  

27 வயதுடைய குறித்த பெண், தனது காதலனை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்காக, வட்டிக்கு பல்வேறு இடங்களில் பணம் வாங்கியுள்ளார். காதலன் வெளிநாட்டுக்குச் சென்ற பின்னர், அந்தக் கடனை அடைப்பதற்கான பணத்தை அனுப்பியுமுள்ளார்.  

எனினும், சிறிது காலத்தின் பின்னர், பணம் அனுப்புவதை காதலன் நிறுத்தியதால், கடனைச் செலுத்த முடியாமல், அந்தக் காதலி திண்டாடியுள்ளார்.   

இதனால், தான் பெற்ற கடனுக்கு ஈடாக, இவர் 7 பேருடன் உறவில் ஈடுபட்டுள்ளார் என்று தெரியவருகின்றது. தன்னுடைய கடனை அடைப்பதற்காக இவர், ஒருவரிடம் 2,500 ரூபாய் பணம் பெற்றுள்ளதாகவும் தெரிவித்த பொலிஸார், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

الَّذِينَ يَأْكُلُونَ الرِّبا لا يَقُومُونَ إِلَّا كَمَا يَقُومُ الَّذِي يَتَخَبَّطُهُ الشَّيْطَانُ مِنَ الْمَسِّ ذَلِكَ بِأَنَّهُمْ قَالُوا إِنَّمَا الْبَيْعُ مِثْلُ الرِّبا وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبا فَمَنْ جَاءَهُ مَوْعِظَةٌ مِنْ رَبِّهِ فَانْتَهَى فَلَهُ مَا سَلَفَ وَأَمْرُهُ إِلَى اللَّهِ وَمَنْ عَادَ فَأُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ
"வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். "வியாபாரம் வட்டியைப் போன்றதே" என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து, வட்டியைத் தடை செய்து விட்டான். தமது இறைவனிடமிருந்து அறிவுரை வந்தப்பின் விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது. அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது. மீண்டும் (வட்டித் தொழில்) செய்வோர் நரகவாசிகள் ஆவர். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். (அல் குர்ஆன்: 2:275)


عن عبد الله بن حنظلة غسيل الملائكة قال قال رسول الله صلى الله عليه وسلم درهم ربا يأكله الرجل وهويعلم أشد من ستة وثلاثين زنية (رواه أحمد)
"வட்டியின் ஒரு நாணயத்தை (அது வட்டியின் பொருள்தான் என்பதை) அறிந்த நிலையில் ஒருவன் உண்பது, முப்பத்தி ஆறு முறை விபச்சாரம் புரிவதை விட கடுமையான குற்றமாகும்" என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் ஹன்ழளா (ரலி) அவர்கள், நூல்: அஹ்மது.

1 கருத்துரைகள்:

அஸ்தஃபிருல்லாஹ்...
அல்லாஹ் இப்பாவத்திலிருந்து நம் முஸ்லீம் சமூகத்தை காப்பானாக, ஆமீன்.

Post a Comment