Header Ads



இலங்கை அரசாங்கம் பாகிஸ்தானை, பகைத்துக் கொண்டுள்ளதாக குற்றச்சாட்டு

அரசாங்கம் பாகிஸ்தானை பகைத்துக் கொண்டுள்ளதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் ராஜதந்திர ரீதியில் சில விடயங்களை அணுகாது பிரச்சினையில் சிக்கிக் கொண்டுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவிருந்த சார்க் மாநாட்டிற்கு இந்தியா பங்கேற்கவில்லை என அறிவித்திருந்தது எனவும் இவ்வாறான ஓர் நிலையில் மாநாடு நடைபெறாது என்பது உறுதி எனவும் இவ்வாறான ஓர் நிலையில் இலங்கை அரசாங்கம் இந்தியாவின் பக்கம் சாய்ந்து கொண்டு மாநாட்டை புறக்கணிப்பதாக அறிவிக்க வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்hளர்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தான் அரசாங்கத்தை பகைத்துக் கொள்ளும் வகையில் கருத்து வெளியிட வேண்டிய அவசியம் இல்லை என சுட்டிக்காட்டியுள்ள அவர் இலங்கை எப்போதும் அணிசேரா கொள்கைகளை பின்பற்ற வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

No comments

Powered by Blogger.