Header Ads



என்னை பாய்ந்து பாய்ந்து, திருப்பி திருப்பித் தாக்குகிறார்கள் - ஜனாதிபதி வேதனை

ஊடகவியலாளர்கள் தம்மை மிகக் கடுமையாக தாக்கி வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இலங்கை பத்திரிகையாளர் சங்கத்தின் 61ம் ஆண்டு நிறைவு நிகழ்வு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்…

சில ஊடக நண்பர்கள் என்னைத் தொடந்து தாக்குகிறார்கள். இவ்வளவு தாக்குவதற்கு இடமளித்த ஒரே ஜனாதிபதி இவரே என ஊடகவியலாளர்கள் நினைக்கலாம்.

பாய்ந்து பாய்து தாக்குகின்றார்கள். திருப்பி திருப்பி தாக்குகின்றார்கள். கீழே வீழ்த்து எழுப்பி மீளத் தாக்குகின்றார்கள். இந்த அனைத்து தாக்குதல்களுக்கும் சுதந்திரம் வழங்கியதையிட்டு நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.

2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் திகதிக்கு முன்னதாக தற்போது என்னைத் தாக்குவோருக்கு இதேவிதமான முதுகெலும்பு இருந்திருந்தால், இந்த வீரம் இருந்திருந்தால், இந்த திறமை இருந்திருந்தால் எவ்வளவு சிறப்பாக இருந்திருக்கும் என நான் கேட்கின்றேன்.

எனினும் ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியமை, உயிர்ச் சேதம் ஏற்பட்டமை குடும்பங்களுடன் பல்வேறு துயரங்களை எதிர்நோக்க நேரிட்டமை போன்ற விடயங்கள் இடம்பெற்ற இருண்ட யுகத்தை நினைவில் கொண்டு என் மீதான தாக்குதல்களை மேற்கொள்ளுமாறு நான் அழைப்பு விடுகின்றேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

1 comment:

Powered by Blogger.