Header Ads



ஷியாக்கள் அட்டூழியங்களில் ஈடுபட்டால், அதற்கு எதிராக நடவடிக்கை எடுப்போம் - எர்துகான் எச்சரிக்கை


 (ஐ.எஸ்) குழுவுக்கு எதிரான மொசூல் யுத்தத்தில் ஈராக்கிய ஷியா போராளிகள் அட்டூழியங்களில் ஈடுபட்டால் அதில் துருக்கி தலையிடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தால் அபார் மோதலில் ஷியாகள் பொதுமக்கள் மீது வன்முறைகளில் ஈடுபட்டால் தமது படையினர் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் என்று துருக்கி ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவான் எச்சரித்தார்.

ஈராக்கில் ஏற்கனவே துருக்கி படையினர் நிலைகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மொசூலின் தால் அபார் நகரை மீட்கும் முயற்சியாக ஷியா போராளிகள் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளனர். ஈராக் இராணுவத்திற்கு ஆதரவாக செயற்படும் ஷியா போராளிகளுக்கு ஈரான் உதவி வழங்கி வருகிறது.

துர்க்மன்கள் வாழும் தால் அபார் பகுதி, துருக்கியுடன் வரலாற்று ரீதியில் தொடர்புபட்ட இடமாகும்.

“தால் அபார் எமக்கு மிக உணர்வுபூர்வமானதாகும். தால் அபார் மற்றும் சின்ஜாரில் (ஷியா போராளிகள்) தலையிடுவதை நாம் நிச்சமாக ஏற்க மாட்டோம்.

தால் அபார் பாதி ஷியா முஸ்லிம்கள், பாதி சுன்னி முஸ்லிம்கள் கொண்ட முழுமையான ஒரு துர்க்மன் நகரம். நாம் அவர்களது மதப் பிரிவுகளை வைத்து மக்களை எடைபோடுவதில்லை. எம்மை பொறுத்தவரை அனைவரும் முஸ்லிம்களே.

ஆனால் ஹஷிட் ஷாபி தீவிரவாதிகள் (ஷியா) என்று வரும்போது எமது நிலைப்பாடு வேறு மாதிரி இருக்கும்” என்று அங்காராவில் வைத்து எர்துவான் கடந்த ஞாயிறன்று எச்சரித்தார்.

வடக்கு இராக்கில் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலுக்காக சுமார் 2,000 துருக்கி துருப்பினர்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளர். இந்த படையினரின் பிரசன்னத்தை தொடர்ந்து நீடிக்க துருக்கி பாராளுமன்றத்தில் கடந்த மாதம் ஆதரவு கிடைத்தது. சுன்னி பெரும்பான்மை மொசூல் நகருக்குள் ஷியா போராளிகளை நுழைய விடுவதால் ஏற்படும் மதப்பிளவு வன்முறைகள் குறித்து துருக்கி ஏற்கனவே எச்சரிக்கை விடுத்து வருகிறது.

முன்னதாக பலுௗஜா மற்றும் ரமடி போன்ற நகரங்களை மீட்கும் இராணுவ நடவடிக்கையில் ஷியா போராளிகள் நகருக்குள் அனுமதிக்கப்பட்டதால் அவர்கள் சுன்னி சிவிலியன்களுக்கு எதிராக வன்முறைகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு உள்ளது.

இதில் ஈராக்கிய ஷியா போராளிகளுக்கு ஈரானே இராணுவ பயிற்சிகளை வழங்கி வருகிறது. ஈராக் குத்ஸ் படையணியின் கட்டளைத் தளபதி ஜெனரல் கஸ்ஸாம் சுலைமானுடன் இந்த ஷியா ஆயுததாரிகளுக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது. கடந்த வாரம் மொசூல் முன்னரங்குகளில் சொலைமானை காண முடிந்ததாக செய்திகள் கூறுகின்றன.

மொசூல் யுத்தத்தில் சுமார் 15,000 ஷியா போராளிகள் பங்கேற்றிருப்பதாக அந்த குழுவின் ஒரு பிரிவான ஹிஸ்புல்லாஹ் படையணியின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். 

2 comments:

  1. சிரியாவில் யுத்தம் இன்னும் முடியவில்லை. ஏன் யுத்தம் என அவர்களுக்கும் விளங்குதில்லை, எங்களுக்கும் விளங்குதில்லை.

    அதற்குள் அடுத்த யுத்தங்களுக்கு பிளானிங் போல.
    துருக்கி vs ஈராக்
    சவுதி vs ஈரான்


    ReplyDelete
  2. I love you brother for the sake of Allah. You effort in establishing Islamic environment in Turkey and How you deal current middle eastern issues are wonderful. The same way you also establish the strong economy of turkey.

    May Allah Bless all our Muslim Leaders in their effort to bring TAWHEED up.

    ReplyDelete

Powered by Blogger.