Header Ads



மழை வேண்டி, புதுவித வழிபாடு - பாலித தெவரபெரும தாளம்போட, மக்கள் ஆட்டம்

நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியான காலநிலை மாறி மழை வரவேண்டும் என்று பிரதி அமைச்சர் உட்பட மக்கள் அனைவரும் ஒரு புதுவிதமான வழிபாட்டில் ஈடுபட்டுள்ளனர்.

பிரதி அமைச்சர் பாலித தெவரபெரும தாளம் போட மக்கள் அதற்கு ஏற்றால் போல நடனமாடி உள்ளனர்.

மழைவேண்டி உலகெங்கும் பல சடங்கு சம்பிரதாயங்கள் செய்வதை காணலாம், இது பலரையும் வியப்பில் ஆழ்த்துவதோடு, ஆச்சரியத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தும் வழக்கங்கள் கூட காணப்படுகின்றன.

அந்த வகையில் இலங்கையில் நாட்டில் அண்மை காலமாக வறட்சி நிலவி கொண்டு வருகின்றமையினால் மக்கள் குடிநீருக்கு கூட தண்ணீரின்றி பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

அனுராதபுரம் மாவட்டத்தில் அதிக வறட்சி நிலவிக் கொண்டு இருக்கின்றது. அந்த வகையில்,Dalukaha மற்றும் Pollebadda பகுதியை சேர்ந்த மக்கள் மழை வரவேண்டும் என்பதற்காக நேற்றிரவு(01) பிரார்த்தனை மற்றும் நாட்டிய நிகழ்வுகளில் ஈடுப்பட்டுள்ளனர்.

இந்த நிகழ்வின் பிரதம விருந்தினராக உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாச்சார அலுவல்கள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும கலந்துக் கொண்டுள்ளார்.

குறித்த நிகழ்வில் கலந்துக் கொண்ட பாலித தோட்ட மக்களுடன் இணைந்து தனது இசை கலைகளை வெளிப்படுத்தி தவுலாவை என்ற வாத்திய கருவியை வாசித்துள்ளார்.

இவர் வாத்தியங்களை தாளம் போடுவதும் மக்கள் ஆடுவதுமாக மிக சிறப்பாக இந்த சடங்குகள் நடைபெற்றதை காணக்கூடியதாக உள்ளது.

No comments

Powered by Blogger.