Header Ads



ஜனாதிபதி பதவியை விடவும், சுதந்திரகட்சி தலைவர் பதவியை பாதுகாக்க முயலும் மைத்திரிபால..!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று முன்தினம் வெளியிட்ட கருத்து தொடர்பில் பல்வேறு வாத பிரதிவாதங்கள் எழுந்துள்ளன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசாரணை பிரிவுகளின் நடவடிக்கைகளை தடுக்கும் வகையிலும், நீதிமன்றத்தின் செயற்பாடுகளை விமர்ச்சித்திருந்தார்.

திருடர்கள் மற்றும் கொலைகாரர்களை காப்பாற்றும் நோக்கிலேயே ஜனாதிபதி கருத்து வெளியிட்டுள்ளார் என கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.

கடந்த காலத்தில் இடம்பெற்ற பிரதான மூன்று கொலைகளின் விசாரணைகள் தற்போது வரையில் இறுதிக்கட்டதை அடைந்துள்ளது.

லசந்த விக்ரமதுங்க கொலை, எக்னெலிகொட கொலை மற்றும் தாஜுடீனின் கொலை ஆகிய 3 கொலைகளாகும். இந்த மூன்று கொலைகளினதும் சந்தேகநபர்கள் தற்போது வரையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மீதமாக இருப்பது கொலைகளை செய்யுமாறு உத்தரவிட்டது யார் என்பதை கண்டுபிடிப்பது மாத்திரமே.

உதாரணமாக எக்னெலிகொடவை கொலை செய்தவர்கள், கொலை செய்வதற்கு முன்னர் இரவு 1 மணியளவில் ஒரு மணித்தியாளத்திற்கும் அதிகமான காலப்பகுதி அலரி மாளிகையில் தொலைபேசி உரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ள வரையிலான தகவல்கள் தற்போது வரையில் வெளியாகியுள்ளது.

எக்னெலிகொட புலிகளுடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளவில்லை என நாட்டின் அனைத்து புலனாய்வு பிரிவு மற்றும் பாதுகாப்பு பிரிவின் 11 அறிக்கைகள் தற்போது வரையில் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய அது தெளிவாக ராஜபக்சர்களினால் மேற்கொள்ளப்பட்ட அரசியல் கொலையாகும்.

அவ்வாறான விடயங்களுக்கமைய குற்றச் செயலுக்கு உத்தரவிட்ட ராஜபக்சர்கள் யார் என்பதனை சாட்சியுடன் வெளியிட வேண்டிய நடவடிக்கை மாத்திரமே மீதமாக உள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட கருத்திற்கான பின்னணி இந்த கொலை குற்றவாளிகளான ராஜபக்சர்களை காப்பற்றுவதே என தெரிவிக்கப்படுகின்றது.

ராஜபக்சர்களை காப்பாற்றுவதற்காக ஜனாதிபதியை இணங்க வைக்கும் நடவடிக்கையின் இணைப்பாளராக பிரபல அரசியல்வாதியான ராஜபக்சர்களுடன் தொடர்பு வைத்துள்ள அமைச்சரினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டு ஜனாதிபதி பதவியை விடவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைவர் பதவியை பாதுகாக்க வேண்டும் என சிந்தித்து செயற்படும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவ்வாறான இணக்கப்பாட்டிற்கு இணங்கியுள்ளமை அவர் வெளியிட்டுள்ள கருத்துக்களின் ஊடாக தெளிவாகியுள்ளது.

அதற்கமைய பொலிஸ் அதிகாரம் கொண்ட சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சினை தனக்கு கீழ் கொண்டு வருவதற்கு அல்லது வேறு நடவடிக்கை மேற்கொண்டு ராஜபக்சர்களை பாதுகாப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன் வந்தால் நாடாளுமன்றத்தினுள் ஜனாதிபதிக்கு பாரிய ஆபத்தொன்று ஏற்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

No comments

Powered by Blogger.