Header Ads



இலங்கையின் அதி பெறுமதியான கார், வாடகைக்கு விடப்படுகிறது


அண்மையில் Rolls Royce Wraith ரக வாகனம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதனை தொடர்ந்து, இந்த வாகனம் தொடர்பில் அதிகமான தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இலங்கையில் 16 Rolls Royce Wraith வாகனங்கள் உள்ளதாக மோட்டார் வாகன பதிவுத் திணைக்கள புள்ள விபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை விசேட சந்தர்ப்பங்களுக்காக வாடகைக்கு பெற்றுக் கொள்ளக் கூடிய Rolls Royce Wraith வாகனங்கள் சில இலங்கையில் உள்ளதாக தெரியவந்துள்ளது.

திருமணங்களின் போது மணப்பெண் மற்றும் மணமகன் பயணிப்பதற்காக இந்த வாகனம் வாடகை அடிப்படையில் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், அதனை ஓட்டிச் செல்வதற்கு சந்தர்ப்பம் கிடைத்தாதெனவும், வாடகைக்கு வழங்குபவர்களால் சாரதி ஒருவரும் வழங்கப்படுகின்ற நிலையில், பயணிக்கும் தூரத்தை கொண்டே வாடகை அறவிடப்படுகின்றது.

இந்த மோட்டார் வாகனத்தில் மூன்று மணித்தியாளங்கள் மற்றும் 30 மீற்றர் தூரத்திற்காக 17500 ரூபா வாடகை செலுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.

4 மணித்தியாலங்கள் மற்றும் 40 கிலோ மீற்றருக்காக 19500 ரூபாவும், 8 மணித்தியாலங்கள் மற்றும் 80 கிலோ மீற்றருக்காக 22000 ரூபாவும் அறவிடப்படுகின்றது.

அத்துடன் மேலதிக ஒரு மணித்தியாலத்திற்கு 2000 ரூபாய் மற்றும் ஒரு கிலோமீற்றருக்கு 195 ரூபாவும் அறவிடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளன.

இந்த காரின் வரி சேர்க்கப்பட்ட பெறுமதி 153 மில்லியன் ரூபா என கணக்கிடப்பட்டுள்ளது.

கடந்த வாரம் இலங்கையில் இறக்குமதி செய்யப்பட்ட Rolls Royce வாகனம், வர்த்தகர் ஒருவரினால் 9 கோடி ரூபா வரி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.