Header Ads



அலெப்போவில் இறப்பதற்கு தயார், கௌரவக் குறைவான சரணடைதல் இருக்காது - நுஸ்ரா

-BBC-

சிரியாவின் அலெப்போ நகரிலிருந்து பின்வாங்கி விடுவதற்கு ஐநா விடுத்த அழைப்பை இஸ்லாமியவாத ஆயுதக்குழுவினர் நிராகரித்திருக்கின்றனர். 

நுஸ்ரா முன்னணி படைப்பிரிவுகளின் 900 ஆயுதக்குழுவினருக்கு அவர் இந்த அழைப்பை விடுப்பதாக ஐநாவின் சிரியா தூதர் ஸ்டாஃபான் டி மிஸ்துரா தெரிவித்திருந்தார்.

அரசு ஆதரவு படைகள் சமீபத்தில் கிளர்ச்சியார்களின் பிடியில் இருக்கும் அலெப்போ பகுதிகளில் முன்னேறியுள்ளன

அவர்கள் பின்வாங்குவதாக இருந்தால், அலெப்போவின் கிழக்குப் பகுதியில் ரஷியாவின் ஆதரவோடு சிரியாவின் அரசுப் படையினர் தொடுக்கும் தாக்குதலை நிறுத்தலாம் என்று அவர் கூறியிருந்தார்.

ஆனால், அலெப்போவில் அதனுடைய படைப்பிரிவுகள் இறப்பதற்கு தயாராக இருப்பதாகவும், கௌரவக் குறைவான சரணடைதல் இருக்காது என்றும் இந்தக் குழுவின் செய்தி தொடர்பாளர் கூறியிருக்கிறார்.

No comments

Powered by Blogger.