October 17, 2016

'மஹிந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்திருந்தால், இஸ்ரேலிற்கு எதிராக வாக்களித்திருக்கும்' - அ.இ.ம.கா.

ஐக்கிய நாடுகள் சபையின் ஓர் அங்கமான யுனெஸ்கோவினால், ஜெருசலத்தின் அல்-அக்ஸா புனித பூமியில் முஸ்லிம்களுக்குள்ள உரிமையை உறுதிப்படுத்தி, அங்கு யூதர்களுக்கு எத்தகைய உரிமைகளும் இல்லையென்றும் அவை முஸ்லிம்களின் பொதுச்சொத்துக்கள் என்றும் ஐ.நா.வினால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு இலங்கை அரசு ஆதரவளிக்காமல் விலகி நின்றமை முஸ்லிம்களுக்கு ஆச்சரியத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேலின் அத்துமீரல்களையும் - மனித உரிமை மீறல்களையும் – அடாவடித்தனங்களையும், நன்கு அறிந்துள்ள இலங்கை அரசு இஸ்ரேலிற்கு எதிரான இந்த பிரேரணைக்கு வாக்களிக்காமல் விலகி நின்றமை இஸ்ரேலின் அத்துமீறல்களை ஆதரிகின்றதா? அனுமதிக்கின்றதா? என்ற கேள்வி எழும்புகின்றது. இதேநேரத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா “இஸ்ரேல் சதா காலமும் பலஸ்தீன் நாட்டை தன்வசம் வைத்திருக்க முடியாது” என்று  குறிப்பிட்டுள்ளார்.

இச்சந்தர்பத்தில், மஹிந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்திருந்தால் இந்த இஸ்ரேலிற்கு எதிரான பிரேரணைக்கு இலங்கை நிச்சயம் வாக்களித்திருக்கும் என்பது முழு முஸ்லிம்களினதும் அபிப்ராயமாகும்.

எஸ்.சுபைர்தீன்
செயலார் நாயகம்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்

12 கருத்துரைகள்:

ரணில் என்ற பச்சோந்தி, அரசில் இருக்கும்பொழுது, பாலஸ்தீனத்திற்கு ஆதரவு ஒருபோதும் இருக்காது.

மஹிந்த ஏதோ பரவாயில்லை.

இநத அரசு இஸ்ரேலுடன் உறவை அதிகரித்துக்கொண்டு செல்வது இலங்கை முஸ்லிம்களுக்கு நல்லதல்ல. இஸ்ரேல் இலங்கைக்கு வந்ததன் பின்பே வடகிழக்கில் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன. இது ஒரு அபாய அறிகுறி

தமிழர் சார்பு ஜெனிவா தீர்மானங்களை எதிர்த்து வாக்களித்த முஸ்லிம் நாடுகளின் மூஞ்சியில் இலங்கை கரியை பூசிவிட்டது.

Well done Sri Lanka!

அமேரிகா-இந்தியா யின் தயவு தன்பக்கம் என எண்ணி இலங்கை துணிந்து விட்டது.

தமிழ் மக்கள் துன்பதுயரங்களுக்கு எதிராக வாக்களித்த பலஸ்தீன அரசியல் வாதிகளினால் பாவம் பாலஸ்தீன மக்கள் அவர்களின் நிலைக்கு முஸ்லீம் நாடுகளே பொறுப்பேற்கவேண்டும்

Mr.சுபைத்தீன் அவர்களே நீங்கள் இலங்கை நாடு பலஸ்தீன் அல் அக்ஸா விடயத்தில் செய்த்தை விமர்சிக்கின்றீர் அதேநேரத்தில் தற்போது பலஸ்தீன் தலைவராக இருக்கும் மஹ்மூது அப்பாஸை வாக்களிக்கவிட்டால் இஸ்ராயிலுக்கு சார்பாகத்தான் வாக்களிப்பார் என்று உங்களுக்கு தெரியாதா?இன்னும் அரபி ஆட்சியாளர்கள் மூலம்தான் முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து மேற்கத்தியர்கள் முஸ்லிம்களின் உடைமைகளை சூரையாடிக் கொண்டிருக்கின்றார்கள் என்று உங்களுக்கு தெரியுமா?

மகிந்தா அங்கு ஆதரவு அளித்து இங்கு முஸ்லிம்களை அடிமையாக இருக்க நீங்க காட்டிக்கொடுத்தும் அவன் காலைக் நக்கிக்கொண்டிவருந்த்தை இன்னும் மக்கள்,மறக்க ,மாட்டார்கள் அதை சரியாக ஒப்புக்கொண்டுள்ள் சமுதாய தூரோகிகளின் சாயம் வெளுத்துவிட்டது,மேலும் அணிலும் ஒரு குள்ளநரிதான் ஆக எவன வந்தாலும் முஸ்லிம் நாடுகளிடம் நக்கிக்கொண்டே முஸ்லிம்களுக்கு,டாடாடாடா,காட்டுவானுகள்,இதற்குக் முக்கிய காரணம் நமது முஸ்லிம் அரசியல் வாதிகள் என்ற முள்ளமாறிகள் இனீயாவது மக்கள் சிந்திக்க வேண்டும்

eralamana duakkalinal konduwarappatta muslim atchi..... yahapala

என்ன மஹிந்த புராணம் பாடத்தொடங்கி விட்டார்கள். அவரிடம் கண்ட பணமும், வசதிகளும் இந்த ஆட்சியில் இல்லை போலும். உங்கள் அதிருப்தியை அரசாங்கத்திடமும் வெளிவிவகார அமைச்சரிடமும் தெரிவித்தீர்களா?? இவர்களை மக்கள் புரிந்து கொள்வார்களா?

ஆம், வானத்தில் இருப்பவன் மகா சக்தன், நீதியாளன்.

பூமியில் இருப்போரில் அவனிடம் வலிமை வாய்ந்தது நம் நாட்டு முஸ்லிம்களின் பிரார்த்தனைகள்.

இனியாவது புரிந்து நடந்து கொள்வார்களாக!

மஹிந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்திருந்தால் இந்த இஸ்ரேலிற்கு எதிரான பிரேரணைக்கு இலங்கை நிச்சயம் வாக்களித்திருக்கும் என்று சாதாரண பொதுமகன் மாதிரி கருத்து தெரிவிக்காமல் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஒரு முஸ்லிம் கட்சியின் பொறுப்புள்ள செயலாளர்க்குரிய பாங்குடன் அரசாங்கத்தை கண்டிக்க முடியாவிட்டாலும் கடுமையான அதிருப்தியையாவது தெரிவித்திருக்கவேண்டும்.

இன்று முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படுவார்கள் , இங்குள்ள முஸ்லீம்களை தாங்குவார்கள் . இதே வெட்கங்கெட்ட நாய்கள் நாளை அரபு நாடுகளில் போய் அரபிகளின் காலை நக்கி பிச்சை எடுத்துக்கொண்டு வந்து அதே பணத்தை வைத்து இங்கே உள்ள முஸ்லிம் களுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுவானுகள். பிச்சைக்கார நாய்கள் .

Post a Comment