Header Ads



'மணமகன் தேவை' விளம்பரத்தினால் ஏமாற்றப்பட்ட ஆசிரியை

ஆசிரியை ஒருவரை திருமணம் செய்வதாக பொய் வாக்குறுதிகள் வழங்கி விட்டு 4 இலட்சம் பணத்தினை கொள்ளையிட்ட பொறியியலாளர் ஒருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

மஹரகம பிரதேசத்திலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஏமாற்றப்பட்ட ஆசிரியை மணமகன் தேவை என கடந்த பல வாரங்களுக்கு முன்னம் இணையத்தளத்தின் ஊடாக விளம்பரம் செய்துள்ளார்.

இந்த விளம்பரத்தை பார்த்த நபர் ஒருவர் தன்னை பொறியியலாளராக இனங்காட்டிக்கொண்டு குறித்த ஆசிரியையை திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார்.

பின்னர் இருவருக்கும் இடையில் தொலைபேசி வாயிலாக காதல் வளர்ந்துள்ளது.

இந்நிலையில் கடந்த வாரம் அளவில் சந்தேகநபர் குறித்த ஆசிரியையிடம் நாம் விரைவில் திருமணம் செய்வோம். திருமணத்திற்கு 30 இலட்ம் ரூபா செலவு ஏற்படும் என தெரிவித்துள்ளார். அத்துடன் தனக்கு அவசரமாக ஐம்பாதியிரம் ரூபாய் தேவைப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆசிரியையும் அவர் கேட்ட பணத்துடன் மஹரகம - பிலியந்தலை வீதிக்கு சென்றுள்ளதுடன், சந்தேகநபரை அன்றே முதல் தடவை நேரடியாக பார்த்தும் உள்ளார்.

மற்றுமொரு நாள் சந்தேகநபர் தொலைபேசி ஊடாக 3 இலட்சம் பணம் தேவை என்று கூறி அவரது வங்கிக் கணக்கில் வைப்பிலிடுமாறு ஆசிரியையிடம் தெரிவித்துள்ளார்.

ஆசிரியையும் நம்பி பணத்தை வைப்பிலிட்டப் பின்னர் சந்தேகநபருடன் தொலைபேசியில் உரையாட முற்பட்ட போது அவரது தொலைபேசி இலக்கம் செயலிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து சந்தேகம் கொண்ட ஆசிரியை நபர் தொடர்பில் மஹரகம பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளார்.

தற்போது சந்தேகநபரைத் தேடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.