Header Ads



சிரந்தி ராஜபக்ஸ கைது செய்யப்படாமலிருக்க, ரணில் - மஹிந்த இரகசிய ஒப்பந்தம்..?

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கும் இடையில் இரகசிய ஒப்பந்தம் இருப்பதாக ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது.

மஹிந்தவின் மனைவிக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள போதிலும் சிராந்தி ராஜபக்ஸ கைது செய்யப்படாமைக்கான காரணம் இவர்கள் இருவருக்கும் இடையிலான இரகசிய ஒப்பந்தமே காரணம் என ஜே.வி.பி தெரிவித்துள்ளது.

நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜே.வி.பியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

பசில், கோத்தபாய மற்றும் ராஸபக்ஸவின் குடும்ப உறுப்பினர்களுக்கு எதிரான விசாரணைகளும் இந்த இரகசிய ஒப்பந்தம் காரணமாகவே மறைக்கப்பட்டு வருவதாக திஸாநாயக்க கூறியுள்ளார்.

மேலும், ஒன்றுக்கு மேற்பட்ட கடவுச் சீட்டுக்களை வைத்திருந்த குற்றத்திற்காகவும், போலி கடவுச் சீட்டை வைத்திருந்த குற்றத்திற்காகவும் விரைவில் கைது செய்யப்பட உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்சவுடன் பிரதமர் சிறிய புரிந்துணர்வுகளையே கொண்டுள்ளார் என அனுர சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும்,ஜே.வி.பி கூறும் ராஜபக்ஸவுடனான இரகசிய ஒப்பந்தத்தை ஐக்கிய தேசிய கட்சி புறக்கணித்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.