Header Ads



ஈரா­னுக்கு வரும்படி மைத்­திரிக்கு அழைப்பு - இருநாட்டு உறவுகளை வலுப்படுத்தவும் இணக்கம்


நீண்­ட­கால வர­லாற்றைக் கொண்ட ஈரான் – இலங்கை உற­வு­களை மேலும் பலப்­ப­டுத்­து­வ­தற்கு இரு நாட்டு தலை­வர்­களும் உறு­தி­ய­ளித்­துள்­ளனர்.

தாய்­லாந்­திற்கு நான்கு நாள் விஜ­யத்தை மேற்­கொண்­டுள்ள ஜனா­தி­பதி மைத்­திரி­பால சிறி­சேன மற்று ஈரா­னிய ஜனா­தி­பதி கலா­நிதி ஹசன் ருஹானி ஆகி­யோ­ருக்­கி­டை­யி­லான சந்­திப்பு நேற்று -10- மதியம் பாங்கொக் நகரில் இடம்­பெற்­றது.

இரு­நாட்டு உற­வு­க­ளையும் மேலும் பலப்­ப­டுத்­து­வ­தற்கு இச்­சந்­திப்பு பெரும் உந்­து­சக்­தி­யா­கு­மென்று கூறிய ஈரா­னிய ஜனா­தி­பதி, விரைவில் ஈரா­னுக்கு விஜயம் செய்­யு­மாறு ஜனா­தி­பதி மைத்­திரி­பால சிறி­சே­னாவுக்கு அழைப்பு விடுத்தார்.

ஈரான் இலங்­கைக்கு எண்ணெய் வழங்­கு­வதன் மூலம் இலங்­கையின் பொரு­ளா­தா­ரத்­துக்கு பெரும் பங்­க­ளிப்­பினை செய்­வ­துடன் எதிர்­கா­லத்தில் அச் செயற்­பா­டுகள் மேலும் சீர­டையும் என்று கூறிய ஈரான் ஜனா­தி­பதி இரு நாடு­க­ளுக்­கு­மி­டை­யி­லான ஏற்­று­மதி, இறக்­கு­மதி செயற்­பா­டு­க­ளுக்கு புதிய வாய்ப்­புகள்  வழங்­கப்­ப­டு­மென்றும் கூறினார்.

அத்­துடன் இரு­நா­டு­க­ளுக்­கு­மி­டையில் இரு­த­ரப்பு கொள்­வ­ன­வு­களை அதி­க­ரிப்­ப­தற்கு அச்­சந்­திப்பின் போது ஈரா­னிய ஜனா­தி­பதி யோசனை வெளி­யிட்டார்.

இதன்­போது கருத்து தெரி­வித்த ஜனா­தி­பதி மைத்­ரி­பால சிறி­சேன, ஈரானும் இலங்­கையும் உள்­நாட்டு முரண்­பா­டுகள் தொடர்பில் சிறந்த புரிந்­து­ணர்­வுடன் செயற்­ப­டு­கி­றது.

இலங்­கையின் உமா­ஓயா அபி­வி­ருத்தித் திட்­டத்­துக்­காக ஈரா­னிய அரசு வழங்கும் உத­விகள் தொடர்பில்  நன்றி தெரி­வித்த ஜனா­தி­பதி மைத்­ரி­பால சிறி­சேன  ஏற்­று­மதி, இறக்­கு­மதி செயற்­பா­டு­க­ளிலும் அபி­வி­ருத்தித் துறை­யிலும் ஈரானும் இலங்­கையும் ஒத்­து­ழைப்­புடன் செயற்­ப­டு­வ­தா­கவும் குறிப்­பிட்டார்.

ஆசிய ஒத்­து­ழைப்பு கலந்­து­ரை­யாடல் மாநாட்­டுடன் இலங்கை , ஈரான் ஆகிய நாடு­க­ளுக்­கி­டை­யி­லான பொருளாதார, வர்த்தக உறவுகள் மேலும் பலப்படுமென கூறிய ஈரானிய ஜனாதிபதி இந்த மாநாடு  இரண்டு நாடுகளுக்கும் மட்டுமன்றி ஆசிய வலயத்திலுள்ள அனைத்து நாடுகளுக்கும் முக்கியமானதெனவும் கூறினார்.

1 comment:

  1. இனியென்ன?

    ஷியாக்கூட்டங்கள் நாடு முழுவதும் தலை விரித்தாடும்.

    மூதேவிக் கூட்டங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.