October 10, 2016

பிரே­ம­தா­சவின் வீட்டு கூரை­யை திருத்திக்கொடுத்­த, அப்துல் ரஹ்மானின் 'எனர்ஜி' பேச்சு


“சிலாபம் திண்­ண­னூரான்”

“எனது எட்டு வயதில் இத்­ தொழிலை எனது வாப்­பா­விடம் கற்றுக் கொண்டேன். இத்­ தொ­ழிலே என்னை இன்று வாழ­வைக்­கின்­றது” என்­கிறார் உலோகப் பாத்­தி­ரங்­களை பழுது பார்க்கும் எம்.கே அப்துல் ரஹ்மான். 73 வயதைக் கொண்ட இவர், நான்கு மாடி­க­ளுக்கும் மேல் சென்று கூரை­க­ளை யும் கூரைப்­ பீ­லி­க­ளையும் பழு­து­பார்க்­கிறார். இவ­ருடன் நாம் பேச்சைத் தொடுத்­தப்­போது, அவரின் அரு­மை­யான தமிழ் வார்த்­தைகள் பெரும் சந்­தோ­ஷத்தை அளித்­தன.

கொழும்பு – 02 கொம்­பனி வீதி நியூ பெசி லேனில் தனது வேலைத்­ த­ளத்தில் பெரும் அலு­மி­னிய சட்­டி பா­னை­க­ளுடன் மல்­லுக்­கட்டிக் கொண்டு இருந்­த­வ­ரிடம் முதலில் எமது கொக்­கியை போட்டோம்.

''ஏழு பிள்­ளை­களின் தந்­தை­யெனக் கூறும் நீங்கள், இந்த வயதில் பழைய சட்டி பானை­க­ளுடன் கட்­டிப்­பி­டித்து போரா­டு­கி­றீர்­களே'' என மீண்டும் கொக்­கியை வீசி­யதும் அவர், முதலில் அலட்­சி­ய­மாக சிரித்தார். அவரின் சிரிப்பில் தனது வெற்­றியின் இர­க­சியம் கொட்­டி­யது. “இள­மையின் சக்தி இன்றும் என்­னிடம் உள்­ளது. அது எனக்குள் துடி­து­டித்துக் கொண்­டுதான் உள்­ளது. அது எனக்குள் உறங்­கி­வ­து­மில்லை சேர்ந்து உட்­கா­ரு­வ­து­மில்லை” என ஒரு போடு போட்டார். “இரக்க உணர்வு இருக்கும் வரை இள­மையும் என்­னுடன் இருக்கும். “நாம் சிக்கிக் கொண்டோம், நாம் தொலைந்தோம், எமக்கு அதிர்­ஷ­ட­மில்லை, நாம் முதிர்வை தொட்­டு­விட்டோம், நம் நேரம் எம்மை விட்டு பிரிந்து விட்­டது.

இனி நமக்கு வாய்ப்பு இல்லை, நாம் வாழ்வில் தோற்­று­விட்டோம். இனி நாம் தொழிலை கைவிட வேண்­டி­யது தான்” என மனதில் எண்­ணக்­கூ­டாது. இவைகள் தான் எமது வளர்ச்­சி­யையும் சாத­னை­க­ளையும் ஆர்­வத்­தையும் இல்­லாமல் செய்யும் எதி­ரிகள் ஆகும்” என்றார் அப்துல் ரஹ்மான்.

அவரின் அரு­மை­யான கருத்­துக்கள் எம்­மையும் வலி­மைப்­ப­டுத்­தின. ஐந்தாம் வகுப்­பு­ வ­ரையே என்னால் கல்வி கற்க முடிந்­தது. எனது எட்டு வயது தொடக்கம் பாட­சாலை முடிந்து வீடு திரும்­பி­யதும் எனது வாப்­பாவின் பட்­ட­றையில் எடு­பிடி வேலை­களை செய்வேன். அதன் மூலமே இத்­ தொ­ழிலை கற்றுக் கொண்டேன். நாங்கள் பட்­டாங்­கானி பாவா பரி­வினர் தாய் மொழி உருது. தமிழ்­நாடு நாகப்­பட்­டி­னமே எங்­களின் பூர்­வீகம். எங்­களின் பாட்டன் கப்­பலில் பித்­தளை தக­ரத்தை பொருத்­து­வதும் கப்பல் பித்­தளை தகர பழு­து­களை திருத்தும் வேலையை செய்து வந்­துள்­ளனர். இது அவர்­களின் குடும்பத் தொழி­லாகும். இத் தொழி­லையே எனது வாப்­பாவின் குடும்­ப மும் செய்து வந்­துள்­ளனர்.

இவ்­வா­றான நிலையில், ஒரு நாள் எனது வாப்பா அவரின் தம்­பிகள் நால்­வ­ருடன் தூத்­துக்­குடி துறை­மு­கத்­தி­லி­ருந்து இலங்­கைக்கு புறப்­பட்ட கப்­பலில் தகர திருத்த வேலையை செய்து கொண்டு வந்­துள்­ளனர். அவ்­வாறு வந்­த­வர்­களில் எனது வாப்­பாவின் தம்பி ஒருவர் அக் கப்பல் கொழும்­பு­ து­றை­மு­கத்தை அண்­மிக்கும் தரு­ணத்தில் கால்­த­வறி கடலில் விழுந்து கடலில் மூழ்கி தனது உயிரை அநி­யா­ய­மாக பறி­கொ­டுத்­து­விட்டார்.

இந்த துய­ரத்தால் எனது வாப்­பாவும் அவரின் ஏனைய மூன்று தம்­பி­களும் இந்­நாட்­டி­லேயே தங்­கி­விட்­டனர். ஒரு தம்பி கண்­டியில் அப்­போ­தைய ஆளு­நரின் வீட்டில் சமையல் பணியில் இணைய, ஏனை­ய­வர்கள் இந்த கொம்­பனித் தெருவில் உலோக பாத்­தி­ரங்­களை திருத்தும் பட்­ட­றையை அமைத்து தொழில்­பு­ரிந்­துள்­ளனர்.

அதையே இன்று நான் பின் தொட­ரு­கின்றேன்” என்று சொல்­லி­ய­வரின் முகத்தில் சிரிப்பு மெல்­லி­ய­தாக தகர்ந்­தது. இவ­ருக்குப் பின்னால் பெரும் வர­லாறு தேங்கி வெளியே வராது அடை­பட்டு வாழ்­வதை கண்டு அதிர்ந்துப் போய்­விட்டோம்” என தனது பூர்வீகத்தை விளக்­கினார் அப்துல் ரஹ்மான்.

“இன்று இத் தொழிலை செய்­ப­வர்கள் மிக மிகக் குறைவு. எனக்கு கொழும்பு மாவட்­டத்தின் அனைத்து பிர­தே­சங்­க­ளி­லு­மி­ருந்து பழு­தான சமையல் பாத்­தி­ரங்­களை கொண்டு வரு­கின்­றனர். என்னை நாடி வரு­ப­வர்­க­ளிடம் எனது எண்­ணப்­படி திருத்த வேலை­களை செய்­ய­ மாட்டேன். அவர்­களின் மனதில் தோன்றும் அவர்­களின் எண்­ணப்­ப­டியே திருத்த வேலை­களை செய்வேன். எனது திருப்தி பெரி­தல்ல. அவர்­களின் திருப்­தியே எனக்கு பெரிய தைரி­யத்தை வழங்­கு­கின்­றது.

படை­யி­னரின் பெரும் சமையல் பாத்­தி­ரங்­களை நான் இன்றும் திருத்திக் கொடுக்­கிறேன். ஐந்து நட்­சத்­திர ஹோட்­டல்கள், கம்­ப­னி­களின் பாத்­தி­ரங்­களும் எனது இப்­ பட்­ட­றைக்கு வரு­கின்­றன. ஐந்து, ஆறு மாடி­க­ளுக்கும் மேல் சென்று கூரை மழைநீர் வடியும் பீலி­க­ளையும் அமைத்து தருவேன். பழுது வேலை­க­ளையும் செய்வேன். இதற்கே ஐந்து ஊழி­யர்கள் உள்­ளனர்” எனத் தெரி­வித்­ததும் நாமும் வியந்­து­போனோம்.

“இதை­விட வேறு எவ்­வ­கை­யான திருத்த வேலை­களை மேற்­கொள்­வீர்கள்?” எனவும் கேள்வி தொடுத்தோம்.

“மண்­ணெண்னை அடுப்பு, பழங்­கா­லத்து பித்­தளை விளக்­குகள், பெற்றோல் மெக்ஸ், லாம்பு மற்றும் இட்லி சட்டி என பல வகை பாத்­தி­ரங்­க­ளையும் திருத்தி தருவேன். முன்னாள் ஜனா­தி­பதி ஆர்.பிரே­ம­தா­சவின் குண­சிங்­க­புர வீட்டின் கூரை­யையும் பல­முறை திருத்தி கொடுத்­துள்ளேன். சவூ­தியில் பதி­னைந்து வரு­டங்கள் சுவ­ருக்கு வர்ணம் பூசு­ப­வ­ராக தொழில்­பு­ரிந்தேன். விபத்தின் கார­ண­மாக நாடு திரும்­பி­விட்டேன்” என அவர் பதி­ல­ளித்தார்.

“இத் ­தொ­ழிலை உங்கள் பிள்­ளைகள் கற்றுக் கொண்­டுள்­ளார்­களா என கேட்­டதும் படார் என பதில் கொடுத்தார். எனது 7 பிள்­ளை­களில் ஒருவர் கால­மா­கி­விட்டார். ஏனையோர் இத்­ தொ­ழிலை கற்று இருந்­தாலும் இத் தொழிலை செய்ய முன்­வர மாட்­டார்கள். பலரும் வெளி­நாட்டில் தொழில் புரி­கின்­றனர். இது போற்­றத்­தக்க தொழில். கற்றுக் கொண்டால் நல்ல வரு­மா­னத்தைப் பெறலாம். இத் தொழிலைக் கற்­றுக்­கொள்ள எவரும் முன்­வ­ரு­வ­தில்லை.

நவ ­யு­கத்தின் வேகத்தால் இத் தொழில் போன்று பல தொழில்கள் எம்மை விட்டு மறைந்துவிட்டன” என அவர் தெரிவித்தார். அவரி விடைபெற்று வீதிக்கு இறங்கினோம். பழைய அலுமினியம் சட்டியை தூக்கியவாறு அப் பட்டறைக்குள் பெண்மணி ஒருவர் நுழைவதைக் கண்டு அவர் பேச்சின் நம்பகத்தன்மை எமக்குத் தெரிந்து வியந்து போனோம். “கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள் கவலை உனக்கு இல்லை” என்பது உண்மை தான்.  

(படங்கள் கே.பி.பி.புஷ்பராஜா)

0 கருத்துரைகள்:

Post a Comment