Header Ads



கோதாபய சீனாவுக்குப் போகலாம்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷவுக்கு சீனா செல்வதற்கு அனுமதி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இம்மாதம் 7ஆம் திகதியில் இருந்து 21ம் திகதி வரை சீனாவில் நடைபெறவுள்ள பிராந்திய பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்கு அனுமதி வழங்குமாறு கோத்தபாய, தனது சட்டத்தரணிகள் ஊடாக கடந்த 30 ம் திகதி கோரிக்கை விடுத்திருந்தார்.

அதன் அடிப்படையில் குறித்த மனு இன்று கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அவர் குறித்த அனுமதியை வழங்கினார்.

அந்த வகையில் எதிர்வரும் ஒக்டோபர் 05 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை சீனா சென்று திரும்புவதற்கு கோதாபய ராஜபக்‌ஷவுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அவன்கார்ட் நிறுவனத்தின் மிதக்கும் ஆயுதக் களஞ்சியத்திற்கு அனுமதி வழங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு ரூபா 11.4 பில்லியன் நஷ்டம் ஏற்பட்டதாக தெரிவித்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பிணையில் விடுதலை செய்யப்பட்ட கோத்தபாய உள்ளிட்ட ஏழுபேர் பிணையில் விடுவிக்கப்பட்டது. ஆயினும் அவர்களது வெளிநாட்டு பயணங்களுக்கு நீதிமன்றம் தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.