Header Ads



தனது கடையில் திருடப்படுவதை, கைத்தொலைபேசியில் பார்த்தவர் சிறுவர்களை மடக்கிப்பிடித்தார்

சங்கத்தானைப் பகுதியிலுள்ள கைத்தொலைபேசி  விற்பனை நிலையத்தின் கூரையைப் பிரித்து உள்நுழைந்து திருட்டில் ஈடுபட்ட சிறுவர்கள் இருவரையும், எதிர்வரும் 20ஆம் திகதி வரையில் அச்சுவேலி நன்னடத்தைப் பாடசாலையில் தடுத்து வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரன், நேற்றுத் திங்கட்கிழமை (10) உத்தரவிட்டார்.

கடந்த 9ஆம் திகதி இரவு, குறித்த கடையின் கூரைப் பிரித்து இரண்டு சிறுவர்கள் இறங்கித் திருடினர். இவர்கள் உள்ளே இறங்கித் திருடும் காட்சி கடையில் பொருத்தப்பட்ட சி.சி.டி.வி கமெராவின் வழியாக பதிவாகி, உரிமையாளரின் கைத்தொலைபேசிக்குச் சென்றுள்ளது. (உரிமையாளர், சி.சி.டி.வி கமெரா, பதிவு தனது கைத் தொலைபேசிக்கு உடனடியாக வரும் வகையில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியிருந்தார்).

அதனைப் பார்த்த உரிமையாளர், உடனடியாக கடைக்குச் சென்று, கடைக்குள் திருடிக் கொண்டிருந்த சிறுவர்களை, மடக்கிப் பிடித்தார்.

பிடிக்கப்பட்ட சிறுவர்கள், சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இரு சிறுவர்களும் நேற்று (10) நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

No comments

Powered by Blogger.